Homeஅரசு அறிவிப்புகள்விளையாடு இந்தியாவில் வேலைவாய்ப்பு

விளையாடு இந்தியாவில் வேலைவாய்ப்பு

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைக்கப்பட உள்ள விளையாடு இந்தியா மாவட்ட மையத்தில் பணிபுரிய சாதனை படைத்த தடகள வீரர்/வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். 

விளையாடு இந்தியாவில் வேலைவாய்ப்பு

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா. முருகேஷ் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது,

திருவண்ணாமலை மாவட்டம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ‘விளையாடு இந்தியா’ (Khelo India) திட்ட நிதியுதவியில் துவக்கநிலை தடகளம் பயிற்சிக்கான SDAT – விளையாடு இந்தியா மாவட்ட மையம்’ திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைக்கப்பட உள்ளது இம்மையத்தில் 30 – 100 விளையாட்டு வீரர் – வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தினசரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட தேசிய அளவில் சாதனைப்படைத்த 40 வயதுக்குட்பட்ட தடகளம் வீரர்/வீராங்கனை ஒருவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். விண்ணப்பதாரர் குறைந்தது ஐந்து ஆண்டுகளாகவும் தற்போதும் திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக்கழககங்களுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் – வென்றவராகவோ, சர்வதேசப் போட்டிகள் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ இருத்தல் வேண்டும்.

See also  தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்-கலெக்டர்

விளையாடு இந்தியாவில் வேலைவாய்ப்பு

தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதந்திர பயிற்சிக்கட்டணமாக ரூ.25,000 வழங்கப்படும். இது நிரந்திரப்பணி அல்ல, முற்றிலும் தற்காலிகமானதாகும். இதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகைளோ, நிரந்தரப்பணியோ கோர இயலாது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பத்தினை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலகத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். நேர்முகத் தேர்வு திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும். உடற்தகுதி விளையாட்டுத்திறன், பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும், தேர்வு தேதி மற்றும் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 04175-233169 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!