Homeசெய்திகள்ரிஜிஸ்டர் ஆபீசில் கைப்பற்றிய பணம் யாருடையது?

ரிஜிஸ்டர் ஆபீசில் கைப்பற்றிய பணம் யாருடையது?

திருவண்ணாமலை ரிஜிஸ்டர் ஆபீசில் இன்று நடைபெற்ற விஜிலென்ஸ் ரெய்டில் லட்சக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டது. இது சொத்து வாங்க வந்தவர்களின் பணமா? அல்லது லஞ்ச பணமா? என விசாரணை நடைபெற்றது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். கடலூர் மாநகராட்சி அலுவலகம், பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகம், தாசில்தார் அலுவலகம் என சோதனை நடத்தப்பட்டது.

திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் சார்பதிவாளர் அலுவலகம் 2ல் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன், இன்ஸ்பெக்டர் ஹேமமாலினி தலைமையில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது.

ரிஜிஸ்டர் ஆபீசில் கைப்பற்றிய பணம் யாருடையது?

இந்த பணம், சொத்து வாங்க வந்தவர்களுடையதா? அல்லது லஞ்ச பணமா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு வரை விசாரணை தொடர்ந்தது. அங்கு பணம் பதுக்கப்பட்டுள்ளதா? என மூலை, முடுக்கெல்லாம் போலீசார் தேடினர். அந்த அலுவலகத்தின் பின்புறம் உள்ள குடோனுக்கும் சென்று தேடிப் பார்த்தனர். ஆனால் பணம் ஏதும் சிக்கவில்லை.

See also  பெண்களுக்கு ரூ.1000- வீட்டுக்கு சென்று கலெக்டர் விசாரணை

ரிஜிஸ்டர் ஆபீசில் நடைபெற்ற திடீர் ரெய்டால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சொத்து வாங்க வந்தவர்களும், விற்க வந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இடைத்தரகர்கள் அங்கிருந்து எஸ்கேப் ஆனார்கள்.

ரிஜிஸ்டர் ஆபீசில் கைப்பற்றிய பணம் யாருடையது?

விஜிலென்ஸ் ரெய்டுக்கு பயந்து இப்போதெல்லாம் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் யாரும் அதிக அளவில் பணத்தை வைத்துக் கொள்வதில்லை. நம்பிக்கையான ஆட்கள் மூலம் வெளி இடத்தில் வைத்து பணம் கைமாறுகிற நிலையில் திருவண்ணாமலை ரிஜிஸ்டர் ஆபீசில் கைப்பற்றப்பட்ட லட்சக்கணக்கான பணம் கணக்கில் வராத பணமா? என்பது குறித்து போலீசார் இரவு வரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இதே போல் செய்யாறு சார்பதிவாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் பணம் கைப்பற்றப்பட்டதா? என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!