Homeஅரசு அறிவிப்புகள்பொதுமக்கள் குறைகளை களைய போலீஸ் புதிய ஏற்பாடு

பொதுமக்கள் குறைகளை களைய போலீஸ் புதிய ஏற்பாடு

பொதுமக்கள் குறைகளை களைய போலீஸ் புதிய ஏற்பாடு

பொதுமக்கள் இருந்த இடத்திலிருந்தே புகார் அளிக்க வசதியாக திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை வாட்ஸ் அப் எண்ணை வெளியிட்டுள்ளது. 

கட்டுப்பாட்டு அறை வாட்ஸ் அப் எண்ணும்¸வெப் கேமரா மூலமாகவும் எஸ்.பியை தொடர்பு கொள்ளும் வசதியும்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குறைகளை களைய சிறப்பு தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளது. 

இது சம்மந்தமாக திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை துறை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது¸ 

திருவண்ணாமலை மாவட்டம் பரப்பளவில் தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய மாவட்டமாக திகழ்கிறது. மேலும் மாவட்ட தலைநகரமான திருவண்ணாமலையிலிருந்து வந்தவாசி¸ செய்யார் போன்ற நகரங்கள் 75 முதல் 100 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 

இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை பொதுமக்கள் இருந்த இடத்திலிருந்தே தொடர்பு கொள்ளவும் மற்றும் கொரோனா காலத்தில் பொதுமக்களின் தேவையற்ற பயணத்தை குறைத்திடும் வகையில்¸ Hello Tiruvannamalai Police என்ற காவல்துறை கட்டுப்பாட்டு அறை சிறப்பு எண் 9988576666 மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் குறைகளை களைய போலீஸ் புதிய ஏற்பாடு

இந்த எண்னை பொதுமக்கள் இருந்த இடத்திலிருந்தே தொலைபேசி வாயிலாகவும்¸ வாட்ஸ்அப் மூலமும் மணல் கடத்தல்¸ கஞ்சா விற்பனை செய்தல்¸ கள்ளச் சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்தல்¸ மதுபானங்களை கள்ளத்தனமாக விற்பனை செய்தல்¸ சூதாட்டம் ஆடுதல் மற்றும் இதர சட்ட விரோத செயல்களை பற்றியும் புகாராக தெரிவிக்கலாம்.

See also  பாதுகாப்பற்ற ஏடிஎம்களை இரவு நேரத்தில் மூட உத்தரவு

மனுதாரர்கள் தங்களின் குறைகளை புகார் மனுக்களாக வாட்ஸ்அப் வாயிலாக இந்த எண்ணிற்கு அனுப்பியும் புகாரளிக்கலாம். பொதுமக்கள் அனுப்பும் புகார்களை¸ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் காவலர்கள் நியமிக்கப்பட்டு பெறப்படும் புகார்கள் நேரடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு¸ மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி பார்வையில் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள மூன்று சிறப்பு தனிப்படைகள் முலம் 24 மணி நேரத்திற்குள்ளாக தீர்வு காணப்படும். புகார்தாரர்களின் தொலைபேசி எண் மற்றும் அவர்களின் அடையாளம் மற்றும் அளிக்கும் தகவல்கள் குறித்த ரகசியம் காக்கப்படும்.

பொதுமக்கள் குறைகளை களைய போலீஸ் புதிய ஏற்பாடு

புகார் அளித்து ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அந்தந்த உட்கோட்டத்திற்கு உட்பட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை அணுகினால் அங்கிருந்து வெப்கேமரா மூலம் ஞாயிறு தவிர மற்ற வார நாட்களில் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை மாவட்ட காவல் காண்காணிப்பாளரை அங்கிருந்தே தொடர்பு கொண்டு புகார் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

See also  ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு - கலெக்டர் புதிய அறிவிப்பு

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!