Homeசெய்திகள்கடன்¸வட்டி கேட்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை

கடன்¸வட்டி கேட்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை

கடன்¸வட்டி கேட்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை

கடன்¸ வட்டி கேட்டு மிரட்டும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இது சம்மந்தமாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது¸ 

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் நுண்கடன் நிறுவனங்களிடம் கடன் பெற்றுள்ளனர். 

கொரோனா பெருந்தொற்று அதிகமாக பரவி¸ பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் கொரோனா பரவலை கட்டுபடுத்தும் வகையில் கடந்த 07.06.2021 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்பொழுது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் அவரவர் அவசர அவசியத்தின் காரணமாக சில மகளிர் சுய உதவிக்குழுக்கள் தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் நுண்கடன் நிறுவனங்களிடம் கடன் பெற்றுள்ளனர்.

 வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ள அவர்களிடம் பணம் கொடுத்துள்ள நிறுவனங்கள் கடன் மற்றும் வட்டித் தொகையினை உடனடியாக செலுத்துமாறு மிரட்டுவதாக புகார்கள் வந்துள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு நிதி நிறுவனங்கள் கடன் திருப்பம் தொடர்பாக மேற்கொள்ளும் கடினமான போக்கினை தவிர்த்திட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

See also  கொரோனா நிதிக்கு சேமிப்பு பணத்தை தந்த மாணவன்

இது தொடர்பாக புகார்கள் பெறப்படும் பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் 

இவ்வாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் ஏழை எளிய மக்கள் வாங்கிய கடனை கட்ட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதைப்பற்றி கவலைப்படாமல் சில தனியார் நிறுவனங்கள் தவணைத் தொகை மற்றும் வட்டி கட்ட சொல்லி பொதுமக்களை வற்புறுத்தி வருகின்றனர் மேலும் சில நிறுவனங்கள் அடமானம் வைத்த நகைகளை ஏலம் விட்டு விடுகின்றனர். வருமானத்தை இழந்து நிற்கும் பொதுமக்கள் குடும்பத்தை நடத்திட வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் மூலம் கடனை பெற்றுவருகின்றனர் 

இப்படி கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் 57 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் கடன் பெற்று இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சென்ற ஆண்டு அடாவடி வசூல் செய்த நிறுவனங்களிலிருந்து பல லட்ச ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் குழுக்கள் அதிக அளவு கடன் பெற்றுள்ளனர். 

அவர்கள் கடனையும்¸ வட்டியையும் கட்ட முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தங்களை பணத்தை கட்ட சொல்லி மிரட்டும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!