Homeஆன்மீகம்தண்டபாணி ஆசிரமத்தின் சனிபெயர்ச்சி பலன்கள்

தண்டபாணி ஆசிரமத்தின் சனிபெயர்ச்சி பலன்கள்

திருவண்ணாமலை மலையேறும் பாதையில் உள்ள 225 ஆண்டுகள் பழமையான தண்டபாணி ஆசிரமத்தின் வாலைச் சித்தர் அறக்கட்டளை செயலாளர் ஜோதிட ரத்னா டாக்டர் எல்.சீனிவாசன் கணித்துள்ள சனிபெயர்ச்சி பலன்கள் வருமாறு,

நவக்கிரகங்களில் மிகவும் முக்கியத்துவம் பெற்றவர் ஸ்ரீ சனீஸ்வர பகவான். மனித வாழ்வில் அவரவர் முற்பிறப்பிலும், இப்பிறப்பிலும் செய்த பாவ புண்ணியங்களைக் கருத்தில் கொண்டு இன்பத்துன்பங்களை அளிக்கும் நீதி தேவன் ஸ்ரீ சனீஸ்வர பகவானே. சனிபகவான் இயற்கையாகவே பலவித துன்பங்களை தருபவர் என்று அனைவராலும் அஞ்சப்படுபவராக இருந்தாலும் மற்ற கிரகங்களை காட்டிலும் உயர்ந்த காரகத்துவத்தைப் பெற்றவர்.

ஆயுளுக்கு காரகமாக விளங்குபவர் ஸ்ரீ சனீஸ்வரர் தான். ஆயுள் இருந்தால்தானே மற்ற கிரகங்கள் தரும் நல்வினை தீய வினைகளை நாம் வாழ்வில் அனுபவிக்க இயலும். அற்ப ஆயுளையும் தீர்க்காயுளாக மாற்றும் வல்லமை ஸ்ரீ சனிபகவானுக்கே உண்டு. சனி பகவான் எமனின் அம்சம். தர்மத்தின் தலைமகன். நல்லருளை அள்ளி வழங்கும் மகாவள்ளல். கிரகங்களுள் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் இவரே.

இறைவனையே சோதித்த காலதேவன். ‘சனி கொடுத்தால் தடுப்பார் யாரோ’ என்ற ஜோதிட மொழிக்கு இலக்கணமாக இன்பத்துன்பங்களை வாரி வழங்குவதில் இவரே முதன்மையானவர். மற்ற கிரகங்கள் தரும் இன்பத்துன்பங்களை சனிபகவானால் தடுத்து நிறுத்த முடியும். ஆனால், இவர் தரும் இன்பத்துன்பங்களை மற்ற கிரகங்களால் தடுத்த நிறுத்த முடியாது. இவரை வணங்குபவர்களுக்கு, பொங்கு சனிக்காலத்தில் சகல சௌபாக்கியங்களுடன் கோடிக் கோடியாய் கொட்டித்தந்து தீர்க்காயுளுடன் எதிலும் எங்கும் வெற்றிக்கொடி நாட்டச் செய்வார்.

(29-03-2023) புதன்கிழமை பகல் 1-06 மணிக்கு ஸ்ரீ சனீஸ்வர பகவான் மகர ராசியிலிருந்து பெயர்ச்சியாகி கும்ப ராசியில் சஞ்சாரம் செய்யத் தொடங்குகிறார். இதையொட்டி உலக நன்மைக்காக தண்டபாணி ஆசிரமத்தில் சிறப்பு யாகம் நடைபெறுகிறது.

தொடர்புக்கு…

தண்டபாணி ஆசிரமத்தின் சனிபெயர்ச்சி பலன்கள்

ஒவ்வொரு ராசிப்படி இந்த சனி பெயர்ச்சியால் ஏற்படும் பலன்களை காண்போம்!.

தண்டபாணி ஆசிரமத்தின் சனிபெயர்ச்சி பலன்கள்

(பொற்காலம் தரும் சனி)

11-ஆம் இடமான லாப ஸ்தானத்தில் ஸ்ரீ சனீஸ்வரர் சஞ்சரித்து பல நன்மைகளை வாரி வழங்க இருக்கிறார். இந்த 21/2 ஆண்டு காலங்களில் தங்களுக்கு பொற்காலமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி ஏற்படும். பொன், பொருள், லாபம், வீடு வாகன சேர்க்கை, செய்தொழிலில் வெற்றியும் நல்ல லாபமும் ஏற்படும். கோர்ட்டு கேஸ்களில் வெற்றி, வழக்கு, போட்டி பந்தயங்களில் வெற்றி என அனைத்து விதமான வெற்றிகளை தாங்கள் பெறப்போகின்றீர்கள். புதிய தொழில் தொடங்குதல். திருமண ஏற்பாடு செய்தல் பொன்றவற்றிக்கு ஏற்ற காலமிது.

பெண்களுக்கு இந்த காலங்கள் சிறப்பாக உள்ளதால் பொன், பொருள் சேரும், குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் ஏற்படும், கணவன்-மனைவி ஒற்றுமை, சகோதர சகோதரிகளால் ஒற்றுமை மற்றும் அவர்களால் நன்மை ஏற்படும். ஸ்ரீ குபேர தனாகர்ஷண எந்திரத்தை பூஜித்து வர மேலும் நன்மைகள் பெருகும்.

தண்டபாணி ஆசிரமத்தின் சனிபெயர்ச்சி பலன்கள்

(அலைச்சலை தரும் சனி)

ஸ்ரீ சனீஸ்வரர் தொழில் ஸ்தானம் என்னும் 10-ஆமிடத்தில் சஞ்சாரம் செய்கிறார். பொதுவாக 10-ஆம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிப்பது தொழில் மற்றும் பணிபுரியுமிடத்தில் பிரச்சினைகளை தருவார். மற்றப்படி நன்மை, தீமை என கலந்தாற்போல் பலன்கள் தங்களுக்கு ஏற்படும். ஓய்வின்றி உழைத்தல், சரியானநேரத்திற்க்கு சாப்பிட முடியாமல் போகுதல் போன்ற பலன்கள் ஏற்படும்.

கணவன் (அ) மனைவியின் உடல்நிலையில் பிரச்சினைகள், வீடு வாகனங்களால் பிரச்சினைகள்போன்றவை வரும். புதிய தொழில் தொடங்கும் திட்டம் ஏதும் தற்போது வேண்டாம். பெண்களுக்கு மத்திம பலன்கள் ஏற்படும். கணவரின் உடல்நிலையில் கவனம் தேவை. ஸ்ரீ குபேர தனாகர்ஷண எந்திரம் (அ) ஸ்ரீ சனீஸ்வரர் எந்திரத்தை பூஜித்து வர துன்பங்கள் குறைத்து நன்மைகள் பெருகும்.

See also  திருவண்ணாமலையை ஆன்மீக நகரமாக அறிவிக்க வேண்டும்

தண்டபாணி ஆசிரமத்தின் சனிபெயர்ச்சி பலன்கள்

(முன்னேற்றம் தரும் சனி)

கடந்த 5 ஆண்டுகளாக சனி பகவானால் பலவித துன்பங்களை அனுபவித்த உங்களுக்கு தற்போது அஷ்டம சனி விலகி 9-ஆம் இடத்தில் ஸ்ரீ சனீஸ்வரர் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். சென்ற காலகட்டங்களில் இருந்த கஷ்டங்கள் யாவும் விலகும். படிப்படியான முன்னேற்றங்கள் ஏற்படும். கல்வி, தொழில் வேலைவாய்ப்பு, ஆரோக்கியம் என அனைத்திலும் படிப்படியான முன்னேற்றத்தை தாங்கள் பெறுவீர்கள். நீண்ட நாள் இழுபறியாக இருந்த காரியங்கள் யாவும் தற்போது நல்லபடியாக நடக்கும். மனதில் உற்சாகம், புத்துணர்வு பெற்று துடிப்புடன் செயல்படுவீர்கள்.

வெளிநாடு யோகம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தங்களை விட்டு பிரிந்த சிலர் தங்களுடன் மீண்டும் இணைவார்கள். தாங்கள் பெற்ற அவமானங்கள் விலகி நல்ல பெயர் ஏற்படும். புகழ். செல்வாக்கு உயரும், அனைத்திலும் முழு வெற்றி பெற முடியாவிட்டாலும், தாங்கள் எடுக்கும் முயற்சிகளில் பாதி வெற்றியாவது கிடைக்கும். இந்த சனிப்பெயர்ச்சியால் மன நிம்மதியும், நிறைவும் கிடைக்கும். பெண்களுக்கு நன்மை, தீமை கலந்த சரிசமமான பலன்களே ஏற்படும். ஸ்ரீ குபேர தனாகர்ஷண எந்திரத்தை பூஜித்து வர துன்பங்கள் நீங்கி நன்மைகள் பெருகும்.

தண்டபாணி ஆசிரமத்தின் சனிபெயர்ச்சி பலன்கள்

(அஷ்டம சனி)

இதுவரை கண்டக சனியால் பல தொல்லைகளை பெற்ற நீங்கள் அஷ்டம சனி காலத்தையும் பொருமையாக கடக்க வேண்டி உள்ளது. அஷ்டம ஸ்தானம் எனும் 8-ல் சஞ்சரிக்கும் ஸ்ரீ சனீஸ்வரர் தங்களுக்கு பல சோதனைகளை தருவார். இக்காலகட்டங்களில் விபத்து, ஆரோக்கிய குறைவு போன்றவையும் கூட ஏற்படுத்தும். திருமணம் செய்ய இருப்பவர்கள் தள்ளிப்போடுவது நல்லது. புதிய முயற்சிகள், ஒப்பந்தங்கள் வேண்டவே வேண்டாம்.

எதிலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த கொடிய அஷ்டம சனி காலத்தை தாங்கள் கடக்க வேண்டுமென்றால் அதற்கு ஒரே பரிகாரம் இறை வழிபாடுதான். இறைவழிபாடுடன் கூடிய தான தருமங்கள் செய்தால் இந்த கொடிய காலகட்டங்களை நீங்கள் துன்பம் அதிகம் பெறாமல் கடக்கலாம். சிலருக்கு மாங்கல்யதோஷம் ஏற்படும். ஸ்ரீ சரபேஸ்வரர் எந்திரம் (அ) ஸ்ரீ மஹாம்ருத்யுஞ்சய எந்திரத்தை பூஜித்து வர துன்பங்கள் குறையும்.

தண்டபாணி ஆசிரமத்தின் சனிபெயர்ச்சி பலன்கள்

(கண்டக சனி)

7-ம் இடம் எனப்படும் கண்டக ஸ்தானத்தில் ஸ்ரீ சனிபகவான் கண்டக சனியாக சஞ்சரிக்கிறார். சனிபகவானின் நேர் பார்வையை நீங்கள் பெறுவதால். உடல்நிலையில் நோய் நொடிகள் வரும்… தேவையில்லாத டென்ஷன், கவலை, பிரச்சனைகள் வரும்… திருமணத்தடை ஏற்படும். இந்த 7-ஆம் ஸ்தானம் கணவன்- மனைவி ஸ்தானம் என்பதால் கணவன்-மனைவி பிரிவு, சண்டை சச்சரவு ஏற்படும்…. புகழ். செல்வாக்கு குறையும்…. அரசு பகை ஏற்படும்… செய்தொழிலில் பின்னடைவு ஏற்படும். நண்பர்கள் துரோகம் செய்வார்கள்…

புதியதாக திருமணம் செய்துக்கொள்ள நினைப்பவர்கள் இரண்டாண்டு காலம் தள்ளிப்போடுவது நல்லது… அதே போல் புதிய தொழில். புதிய முயற்சி மேற்கொள்ள இருப்பவர்களும் இரண்டாண்டு காலம் பொறுமையாக இருப்பது நல்லது… பெண்கள் கணவருடன் அனுசரித்து போவது நல்லது. ஸ்ரீ மஹாம்ருத்யுஞ்சய எந்திரம் (அ) ஸ்ரீ சனீஸ்வரர் எந்திரத்தை பூஜித்து வர துன்பங்கள் குறையும்.

See also  நகராட்சி கமிஷனர் மாற்றப்பட்டதன் பின்னணி

தண்டபாணி ஆசிரமத்தின் சனிபெயர்ச்சி பலன்கள்

(வெற்றி தரும் சனி)

6-ம் இடமான எதிரி, நோய், கடன், ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ஸ்ரீ சனீஸ்வரரால் எதிரிகள் அடங்கி போவார்கள். நோய் நொடிகள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். நீண்ட நாளைய முயற்சிகள் கைகூடும். கடன் அடைபடும். சிலருக்கு கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். சிலருக்கு கடனாக கொடுத்த பணம் திரும்பி வரும். கோர்ட்டு கேஸ், வழக்குககளில் வெற்றி கிடைக்கும்.

திருமணம் கைகூடும், தொழிலில் நல்ல லாபமும், உயர்வும் ஏற்படும், புகழ், செல்வாக்கு, அதிகாரம் ஏற்படும். கணவன்-மனைவிக்கிடையே மற்றும் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். புதிய தொழில் வாய்ப்பு, பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவையும் ஏற்படும். மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி தங்களுக்கு சிறப்பாக உள்ளது. ஸ்ரீ குபேர தனாகர்ஷண எந்திரத்தை வழிபட்டு வர நன்மைகள் பெருகும்.

தண்டபாணி ஆசிரமத்தின் சனிபெயர்ச்சி பலன்கள்

(ஏற்றம் தரும் சனி)

அர்த்தாஷ்டம சனி பகவானின் கொடிய பிடியிலிருந்து விடுபட்டு 5-ம் இடமான பூர்வபுண்ணியம் மற்றும் குழந்தைகள் ஸ்தானத்தில் ஸ்ரீ சனிபகவான் சஞ்சரிப்பது மத்திம பலன்களை தரும். அதாவது இன்பம், துன்பம், இரண்டும் கலந்தாற்போன்ற பலன்களை தரும். பிள்ளைகள் வகையில் செலவுகள் ஏற்படும். சென்ற சனிப்பெயர்ச்சி பலன்களை விட இந்த சனிப்பெயர்ச்சியில் ஓரளவு நன்மைகளை நீங்கள் எதிர்பார்க்கலாம்.

இருந்தாலும் பிரச்சினைகள், கவலைகள் உங்களை துரத்தும், பூர்வீக சொத்தில் பிரச்சினைகள், காதலில் தோல்வி ஏற்படும். பெண்களை பொருத்தவரையில் ஆடை ஆபரணங்கள் சேரும். சிலருக்கு குழந்தை பேற்றின் போது பிரச்சினைகள் ஏற்படும். ஸ்ரீ சரபேஸ்வரர் எந்திரம் (அ) ஸ்ரீ சனீஸ்வரர் எந்திரத்தை பூஜித்து வர சிரமங்கள் குறைந்து நன்மைகள் பெருகும்.

தண்டபாணி ஆசிரமத்தின் சனிபெயர்ச்சி பலன்கள்

(அர்த்தாஷ்டம சனி)

4-ஆம் இடத்தில் அர்த்தாஷ்டம சனியாக ஸ்ரீ சனீஸ்வரர் சஞ்சாரம் செய்கிறார். சனி பகவானின் 10-ஆம் பார்வையில் நீங்கள் சிக்குவதால் உடலில் நோய் நொடி போன்ற பல பிரச்சினைகள் தோன்றும். தேவையில்லாத டென்ஷன், மனஉளைச்சல் தோன்றும். வீடு வாகனத்தால் செலவுகள், பிரச்சினைகள் ஏற்படும். தாயாரின் உடல் நிலை பாதிக்கும்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி தங்களுக்கு சோதனைகளை தருவதாக அமைந்துள்ளது. பெண்களை பொருத்தவரை பிறந்த வீட்டாருடன் மனக்கசப்பு ஏற்படும். ஸ்ரீ சனீஸ்வரர் எந்திரம் (அ) ஸ்ரீ சரபேஸ்வரர் எந்திரத்தை பூஜித்து வர துன்பங்கள் குறையும்.

தண்டபாணி ஆசிரமத்தின் சனிபெயர்ச்சி பலன்கள்

(தைரியம், பதவி, புகழ் தரும் சனி)

71/2-ஆண்டு சனி பகவானின் பிடியில் இருந்து விடுபட்டு 3ம் இடமான தைரியம், வீரியஸ்தானத்தில் ஸ்ரீ சனிபகவான் சஞ்சரிக்கிறார். இந்த 3-ஆம் இடமானது சனிபகவான் சஞ்சரிக்க சிறந்த இடமாகும். இந்த சனிப்பெயர்ச்சியால் பல நன்மைகளை நீங்கள் அடையப்போகிறீர்கள். வெற்றிமேல் வெற்றி கிடைக்கும். சாதனைகளை செய்யப்போகின்றீர்கள்.

பொன், பொருள், வீடு, மனை, வாகனம், பதவி, புகழ், அதிகாரம், வேலைவாய்ப்பு, வெளிநாட்டில் வேலைவாய்ப்பு, திருமண யோகம், குழந்தை பாக்கியம், காதலில் வெற்றி, குடும்பத்தில் சந்தோஷம் கிடைக்கும். பெண்களுக்கு பொன் பொருள் சேரும் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். தங்களின் ராசிநாதன் ஸ்ரீ குருபகவான் 5-ல் வருவதால் மேலும் பல நன்மைகள் கிடைக்கும். ஸ்ரீ குபேர தனாகர்ஷண எந்திரத்தை பூஜித்து வர மேலும் நன்மைகள் பெருகும்.

தண்டபாணி ஆசிரமத்தின் சனிபெயர்ச்சி பலன்கள்

(71/2 ஆண்டு பாத சனி)

See also  முன்கூட்டியே மூடப்பட்ட அண்ணாமலையார் கோயில்-பக்தர்கள் ஏமாற்றம்

71/2 ஆண்டு சனிபகவானின் பிடியில் 5 ஆண்டுகள் கடந்துவிட்டீர்கள். இப்போது பாத சனி எனப்படும் 71/2 ஆண்டு சனி பகவானின் கடைசி 21/2 ஆண்டு காலத்தை அனுபவிக்க போகின்றீர்கள். இப்போது 2-ம் இடமான குடும்பம், வாக்கு, தனம் என்னும் இடத்தில் ஸ்ரீ சனி பகவான் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் பிரச்சினை, பணப்பற்றாக்குறை, இழப்பு இருக்கும். கணவன்-மனைவி மனவேற்றுமை, செய்தொழில் நஷ்டம், வீண் அலைச்சல், பதவி இழப்பு, பொன் பொருள் இழப்பு என துன்பங்கள் இரண்டாண்டுகள் வரையில் தொடரும்.

வாக்கு எனப்படும் நாக்கில் சனி பகவான் அமர்வதால் வீண் பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள் இல்லையெனில் உங்கள் பேச்சாலேயே நீங்கள் துன்பப்பட நேரிடும். பெண்களுக்கு அவசியம் நாவடக்கம் தேவை. பொன், பொருள், பண இழப்பு இருக்கும். ஸ்ரீ சரபேஸ்வரர் எந்திரத்தை பூஜித்து வர துன்பங்கள் குறையும்.

தண்டபாணி ஆசிரமத்தின் சனிபெயர்ச்சி பலன்கள்

(71/2 ஆண்டு ஜென்ம சனி)

ஸ்ரீ சனிபகவான் தங்களின் ராசிநாதன் தான் ஆனாலும் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்வது உங்களுக்கு மிகவும் பலவீனத்தை ஏற்படுத்தும். 71/2 சனியின் பிடியில் இருக்கும் நீங்கள் (30 வயதுக்குட்பட்ட மங்கு சனி உள்ளவர்கள்) எதிலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். விரும்பத்தகாத இடமாற்றம். பொருள் இழப்பு ஏற்படும் தலைவலி, சோம்பல், கோபம், விபத்து வரும்.

திருமணம், கல்வி, வேலைவாய்ப்பு, புத்திரபேறு என தடை ஏற்படும். சனி பகவான் சோதிப்பார். குடும்பத்தில் குழப்பம், பகை ஏற்படும். நண்பர்கள் கூட்டாளிகள் துரோகிகளாக மாறுவர். உடலில் நரம்பு தளர்ச்சி, நோய் நொடிகள் ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டில் வேலைக்கு செல்வர். இக்காலத்தில் திருமணம் செய்து கொள்வது பிரச்சினைகளை தரும். ஸ்ரீ சரபேஸ்வரர் எந்திரம் (அ) ஸ்ரீ மஹாம்ருத்யுஞ்சய எந்திரத்தை பூஜித்து வர துன்பங்கள் குறையும்.

தண்டபாணி ஆசிரமத்தின் சனிபெயர்ச்சி பலன்கள்

(71/2 ஆண்டு கிரக சனி)

71/2 ஆண்டு சனிபகவானின் பிடியில் நுழையும் உங்களுக்கு பலன்கள் சொல்லவே தேவையில்லை. காரணம் இதுவரை ஸ்ரீ சனிபகவானால் லாபம் அடைந்த உங்களுக்கு 12-ஆம் இடத்தில் சஞ்சரிக்கும் இவரால் பல சோதனைகள் வேதனைகள் வர உள்ளது. 71/2 ஆண்டு சனியின் (30 வயதுக்கு உட்பட்டவர்கள்) காலங்களில் முதல் 21/2 ஆண்டு காலமிது. நோயின் கடுமை அதிகரிக்கும். செய்தொழில் நஷ்டம், கூட்டாளிகளால் பிரச்சினை, நண்பர்களால் பிரச்சினைகள் ஏற்படும்.

கணவன்-மனைவி பிரிவு ஏற்படும்.இந்த காலகட்டத்தில் தங்களுக்கு பொருமையும், இறை வழிபாடும் அவசியம் தேவை. புதிய முயற்சிகள், திருமண ஏற்பாடுகள் போன்றவற்றை முடிந்த வரையில் தள்ளிப்போடுவது நல்லது. பெண்களுக்கு குடும்பத்தில் சண்டை சச்சரவு. பிள்ளைகள் வழியில் மனக்கசப்பும் தோன்றும். ஸ்ரீ சனீஸ்வரர் எந்திரம் (அ) ஸ்ரீ சரபேஸ்வரர் எந்திரத்தை பூஜித்து வர துன்பங்கள் குறையும்.

மேலே கூறப்பட்டுள்ள ராசிப்பலன்கள் யாவும் பொதுப்பலன்கள் ஆகும். ஒருவரின் ஜாதகத்தில் சனிபகவான் பலமாகவோ அல்லது யோகம் தரக்கூடிய இடத்தில் அமர்ந்திருந்தாலோ தீய பலன்கள் குறைந்தும் நன்மைகள் அதிகளவும் உண்டாகும்.

தண்டபாணி ஆசிரமத்தின் சனிபெயர்ச்சி பலன்கள்
Dr.L.சீனிவாசன்

தொகுப்பு…
‘ஜோதிட ரத்னா’ ‘ஆன்மிக செம்மல்’ ‘சௌமியன்’
சித்தர் மகன்.Dr.L.சீனிவாசன் M.A.,D.A.,S.M.P.
நிறுவனர் & செயலாளர், ஸ்ரீ தண்டபாணி ஆஸ்ரம வாலைச்சித்தர் அறக்கட்டளை
நிறுவனர் & செயலாளர், வாலை சித்தர் கல்வி அறக்கட்டளை,
பூஜா அமைப்புக்குழு செயலாளர், திருவண்ணாமலை.

E-mail: [email protected]

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!