Homeசெய்திகள்திருவண்ணாமலைக்கு ஐசிஐசிஐ¸என்பீல்டு நிறுவனம் உதவி

திருவண்ணாமலைக்கு ஐசிஐசிஐ¸என்பீல்டு நிறுவனம் உதவி

திருவண்ணாமலைக்கு ஐசிஐசிஐ¸என்பீல்டு நிறுவனம் உதவி

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு ஐசிஐசிஐ¸ என்பீல்டு மற்றும் தனியார் நிறுவனங்களின் சார்பில் கொரோனா மருத்துவ உபகரணங்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது. 

உயிர் காக்கும் உபகரணங்கள்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் நிறுவனங்கள்¸ அமைப்புகள் சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. 

மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரியிடம் இந்த உபகரணங்களை தனியார் அமைப்புகளின் நிர்வாகிகள் நேரில் வழங்கினார்கள். அப்போது¸ உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா¸ சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அஜிதா ஆகியோர் உடன் இருந்தனர்.

தனியார் அமைப்புகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் பல்வேறு தனியார் நிறுவனங்கள்¸ அமைப்புகள் சார்பில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி¸ ஐசிஐசிஐ வங்கியின் அறக்கட்டளை சார்பில் 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்¸ ராயல் என்பீல்டு மற்றும் யுனைடட் வே சென்னை நிறுவனங்களின் சார்பில் 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட 10 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்¸ 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 10 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்¸ சேவா இன்டெர்நேஷனல் அமைப்பு சார்பில் 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்¸ 10 Pulse Oximeter¸ ஆகிய மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

See also  பென்ஷனே வரலைங்க-மசூதிக்கு வந்த செஞ்சி மஸ்தானிடம் புகார்

ஆஸ்திரேலியா ரோட்டரி சங்கம்

இது தவிர திருவண்ணாமலை ரோட்டரி சங்கத்தின் அனைத்து பிரிவுகள் மற்றும் ஆஸ்திரேலியா சிட்னி நகரின் ரோட்டரி சங்கம் சார்பில் ரோட்டரி கோவிட் பராமரிப்பு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பிலான 10 லிட்டர் கொள்ளவு கொண்ட 2 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்¸ கோவிட் அவசர சிகிச்சை பரிவிற்கான 2 Multi Para Monitor, 100 Non-Rebreather Masks, 50 ஆக்ஸிஜன் Flow Meters,  N95 மற்றும் மூன்றடுக்கு முகக்கவசங்கள்¸ ஆகிய உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.60 லட்சத்தில் ஆக்ஸிஜன் டேங்க்

மேலும்¸ திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக திரவ ஆக்ஸிஜன் சேமிப்பு அலகு (Liquid Oxygen Storage Tank) அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலைக்கு ஐசிஐசிஐ¸என்பீல்டு நிறுவனம் உதவி

போர்டு கார் கம்பெனி

ஏற்கனவே டி.வி.எஸ் கம்பெனி¸ போர்டு கார் கம்பெனி¸ டைட்டன் கம்பெனி¸ ரோட்டரி கிளப் ஆகியவை கொரோனா மருத்துவ உபகரணங்களை திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வழங்கியுள்ளது. இதே போல் திருவண்ணாமலை சேஷாத்திரி ஆசிரமம் சார்பிலும் உபகரணங்கள் வழங்கப்பட்டது. 

See also  மனைவியுடன் எஸ்.ஐ. கைது-மற்றொரு எஸ்.ஐயும் கைதானார்

கரும்பு ஜூஸ் வியாபாரி

கலசப்பாக்கம் அருகே சாலையோரம் கரும்பு ஜூஸ் விற்கும் வியாபாரி கொரோனா நிவாரணப்பணிக்கு ரூ.5ஆயிரம் வழங்கினார். சிறுவர்-சிறுமியர்களும் தாங்கள் உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை நன்கொடையாக தந்து வருகின்றனர். ஆனால் திருவண்ணாமலை மண்ணில் அமைந்திருக்கும் புகழ் பெற்ற ரமணாசிரமமும்¸ விசிறி சாமியார் ஆசிரமமும் கொரோனா முதல் அலையிலும்¸ 2வது அலையிலும் நோயாளிகளுக்கு உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் எதையும்  வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!