இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நோயாளிகளுக்கு 85¸000 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. உணவு தயாரிக்கும் பணியை துணை சபாநாயகர் பிச்சாண்டி ஆய்வு செய்தார்.
தமிழக முதல்வர் உத்தரவு
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி¸ கொரோனா ஊரடங்கு நேரத்தில் உணவு கிடைக்காமல் தவிக்க கூடாது என்பதற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள்¸ உதவியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறையின் பல்வேறு திருக்கோயில்கள் சார்பில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அரசு மருத்துவமனை
திருவண்ணாமலை மாவட்டத்தில்¸ அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் சார்பில் 1000¸ டி.பி.எஸ். அறக்கட்டளை சார்பில் 550¸ அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில் சார்பில் 500¸ செங்கம் புதூர் மாரியம்மன் திருக்கோயில் சார்பில் 250¸ நீப்பத்துறை வெங்கடாஜலபதி திருக்கோயில் சார்பில் 250¸ ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் சார்பில் 250¸ என மொத்தம் 2800 உணவு பொட்டலங்கள் 13.05.2021 முதல் தினமும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை¸ வேட்டவலம் மற்றும் கீழ்பென்னாத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
பருவத மலை கோயில்
மேலும்¸ படைவீடு அருள்மிகு ரேணுகாதேவியம்மன் திருக்கோயில் சார்பில் ஆரணி அரசு மருத்துவமனைக்கு 500 உணவு பொட்டலங்கள்¸ செய்யாறு வேதபுரீசுவரர் திருக்கோயில்¸ முனுகப்பட்டு பச்சையம்மன் திருக்கோயில் சார்பில் செய்யாறு அரசு தலைமை மருத்துவமனைக்கு 250 உணவு பொட்டலங்கள்¸ எலத்தூர் மோட்டூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் மற்றும் பருவத மலை அருள்மிகு மத்யார்ச்சுனேசுவரர் திருக்கோயில் சார்பில் போளுர் அரசு மருத்துவமனைக்கு 250 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அவணியாபுரம் லட்சுமி நரசிம்மன் திருக்கோயில் சார்பில் 25.05.2021 முதல் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு 250 உணவு பொட்டலங்கள் மற்றும் தினசரி அன்னதான திட்டத்தின் கீழ் 1200 உணவு பொட்டலங்கள் தினமும் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
85¸000 உணவு பொட்டலங்கள்
இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தினமும் 5000 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி¸ திருவண்ணாமலை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 13.05.2021 முதல் இன்று வரை 85¸000 உணவு பொட்டலங்கள் இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள்¸ உதவியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கு. பிச்சாண்டி ஆய்வு
திருவண்ணாமலை அருணாசலேசுரர் திருக்கோயில் வளாக அன்னதானக் கூடத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள்¸ உதவியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தினமும் உணவு பொட்டலங்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதை இன்று (29.05.2021) துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி நேரில் சென்று பார்வயிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது¸ மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை¸ உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா வருவாய் கோட்ட அலுவலர் வெற்றிவேல்¸ இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் த. கஜேந்திரன்¸ உதவி ஆணையர் ஜான்சி¸ திருக்கோயில் கண்காணிப்பாளர் அய்யம்பிள்ளை¸ சிவாச்சாரியார் பி. டி. ரமேஷ்¸ அரசு அலுவலர்கள்¸ திருக்கோயில் பணியாளர்கள் உடன் இருந்தனர்.