Homeசுகாதாரம்ஆக்ஸிஜன் செறிவூட்டி: ரோட்டரி கிளப் தாராளம்

ஆக்ஸிஜன் செறிவூட்டி: ரோட்டரி கிளப் தாராளம்

கொரோனா: தனியார் அமைப்புகள் உதவிக்கரம்

ரோட்டரி கிளப் மற்றும்  தனியார் நிறுவனங்கள்¸ தொண்டு அமைப்புகள்¸ அறக்கட்டளைகள் சார்பில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன.

மருத்துவ உபகரணங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில்¸ திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை¸ செய்யாறு அரசு தலைமை மருத்துவமனை¸ அரசு மருத்தவமனைகள்¸ அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்¸ கொரோனா பராமரிப்பு மையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் பல்வேறு தனியார் நிறுவனங்கள்¸ தொண்டு அமைப்புகள் மற்றும் அறக்கட்டளைகள் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

27.05.2021 அன்று அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக¸ திருவண்ணாமலை ரோட்டரி கிளப் பிரைட் சார்பில் ரூ.10.55 லட்சம் மதிப்பிலான 40 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரியிடம்  வழங்கப்பட்டன. 

கொரோனா: தனியார் அமைப்புகள் உதவிக்கரம்

இன்றும் (29.05.2021) பல்வேறு அமைப்புகள் சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது. சீனிவாசன் சேவை அறக்கட்டளை¸ டைட்டன் நிறுவனம்¸ பூமிகா அறக்கட்டளை¸ திருவான்மியூர் ரோட்டரி கிளப் மற்றும் ரிச்மண்ட் தமிழ் சங்கம்¸ Breath  இந்தியா¸ திருவண்ணாமலை லயன்ஸ் கிளப் ஆகியவை சார்பில்  அரசு மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்¸ முகக்கவசங்கள்¸ கையுறைகள்¸ ஆக்ஸிஜன் முகக்கவசங்கள்¸ Flow மீட்டர்கள் ஆகிய மருத்துவ உபகரணங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரியிடம் நேரில் வழங்கப்பட்டது¸ 

See also  4 கிணறு, நீரூற்று-அய்யங்குளத்தின் சிறப்புகள்

அப்போது மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் கண்ணகி¸ சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அஜிதா¸ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி¸ உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா¸ வருவாய் கோட்ட அலுவலர் வெற்றிவேல்¸ அரசு அலுவலர்கள்¸ நிறுவனங்கள் மற்றும் தொண்டு அமைப்புகளின் நிர்வாகிகள்¸ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

சீனிவாசன் சேவை அறக்கட்டளை சார்பில் 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட 20 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 8 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்¸ டைட்டன் நிறுவனம் சார்பில் 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்¸ 200 Flow மீட்டர்கள்¸ பூமிகா அறக்கட்டளை சார்பில்  10 லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்¸ 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்¸ திருவான்மியூர் ரோட்டரி கிளப் மற்றும் ரிச்மண்ட் தமிழ் சங்கம் சார்பில் 10 லிட்டர் ஆக்ஸிஜன் செறிவூட்டி ஒன்று¸ 1000 N95 முகக்கவசங்கள் மற்றும் Breath   இந்தியா சார்பில் 10 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்¸ ஆகிய மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

கொரோனா: தனியார் அமைப்புகள் உதவிக்கரம்

முன்னதாக¸ மாவட்ட ஆட்சியர். திருவண்ணாமலை நகராட்சி¸ காமாட்சி கோயில் தெருவில் உள்ள மீனாட்சி திருமண மண்டபத்தில்¸ திருவண்ணாமலை லயன்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற கோவாக்சின் கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் செலுத்தும் முகாமினை நேரில் பார்வையிட்டார். அப்போது அவரிடம் லயன்ஸ் கிளப் சார்பில் ஆக்ஸிஜன் செறிவூட்டி ஒன்று¸ முகக்கவசங்கள்¸ கையுறைகள்¸ ஆக்ஸிஜன் முகக்கவசங்கள் ஆகிய மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.

See also  தடுப்பூசி போட்டுக் கொண்டால் 1லிட்டர் பெட்ரோல்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!