Homeசெய்திகள்மாற்று திறனாளி வீட்டில் ஸ்டாலின்-தண்ணீர் குடித்து நலம் விசாரிப்பு

மாற்று திறனாளி வீட்டில் ஸ்டாலின்-தண்ணீர் குடித்து நலம் விசாரிப்பு

மாற்று திறனாளி வீட்டில் ஸ்டாலின்-தண்ணீர் குடித்து நலம் விசாரிப்பு

கீழ்பென்னாத்தூரில் மாற்றுத் திறனாளி வீட்டிற்கு சென்ற ஸ்டாலின் மருத்துவ உபகரணங்களை வழங்கியதோடு தண்ணீர் வாங்கி குடித்து நலம் விசாரித்தார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டம்¸ கீழ்பென்னாத்தூரில் வசித்து வரும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி சிறுவன் சிவானந்தத்தின் இல்லத்திற்கு சென்று¸ அவருக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கி¸நலம் விசாரித்தார்.

மாற்றுத்திறனாளி சிறுவன் சிவானந்தத்திற்கு அரசின் அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு மறுவாழ்வு பெற்ற விவரங்களையும் கேட்டறிந்தார். அங்கிருந்த சிறுவர்-சிறுமியர்களிடம் என்ன படிக்கிறீங்க? என விசாரித்து  கேட்டறிந்தார். பிறகு தண்ணீர் வாங்கி குடித்தார். 

மாற்று திறனாளி வீட்டில் ஸ்டாலின்-தண்ணீர் குடித்து நலம் விசாரிப்பு

மாற்று திறனாளி வீட்டில் ஸ்டாலின்-தண்ணீர் குடித்து நலம் விசாரிப்பு

மாற்று திறனாளி வீட்டில் ஸ்டாலின்-தண்ணீர் குடித்து நலம் விசாரிப்பு

அப்போது அமைச்சர்கள் எ.வ. வேலு¸ செஞ்சி கே.எஸ். மஸ்தான்¸ அன்பில் மகேஷ்  பொய்யாமொழி¸ சட்டமன்ற துணைத் தலைவர் கு. பிச்சாண்டி¸ பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா¸ மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆர். ஆனந்தகுமார்¸ பள்ளிக்கல்வித் துறை ஆணையர் க.நந்தகுமார்¸ திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் பா. முருகேஷ் ஆகியோர் உடனிருந்தனர். 

மாற்றுத்திறனாளி சிறுவன் சிவானந்தத்தின் தந்தை ஏழுமலை ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். அவரது தாயார் தமிழரசி விவசாய கூலி தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு சிவானந்தம் உட்பட ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். சிவானந்தத்தின் குடும்ப வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அண்மையில் மத்திய கூட்டுறவு வங்கி வாயிலாக ரூ.25¸000 கறவை மாடு வாங்குவதற்காக வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் மூலம் இல்லம் தோரும் மேற்கொண்ட கள ஆய்வின் போது¸ ஒன்றரை வயதில் சிவானந்தத்திற்கு மூளைமுடக்குவாதம் மற்றும் அறிவுசார் குறைபாடு கண்டறியப்பட்டு¸ தொடர்ந்து இயன்முறை பயிற்சி மற்றும் ஆரம்பகல்வி வழங்கப்பட்டது. 

மாற்று திறனாளி வீட்டில் ஸ்டாலின்-தண்ணீர் குடித்து நலம் விசாரிப்பு

இவருக்கு தசைப்பயிற்சி உபகரணங்கள்¸ சிறப்புக்கல்வி உபகரணங்கள்¸ ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் வாயிலாக இல்லத்திற்கே சென்று தசைப்பயிற்சி மற்றும் சிறப்புக்கல்வி வழங்கப்பட்டு¸ தற்போது 10-ஆம் வகுப்புக்கான கல்விப் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாதம்தோறும் பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.1500 கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்பட்டு¸ தற்போது ரூ.2000மாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. மேலும்¸ கூடுதலாக உதவியாளருக்கான உதவித் தொகையாக ரூ.1000 இம்மாதம் முதல் வழங்கப்படவுள்ளது. 

See also  6 மயில்களை விஷம் வைத்து கொன்ற விவசாயி

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!