Homeஆன்மீகம்படவேடு விஜய ஜெய சாமுண்டீஸ்வரி கோயில் சிறப்புகள்

படவேடு விஜய ஜெய சாமுண்டீஸ்வரி கோயில் சிறப்புகள்

படவேடு விஜய ஜெய சாமுண்டீஸ்வரி கோயில் சிறப்புகள்

திருவண்ணாமலை மாவட்டம் படவேட்டில் சிம்ம வாகனத்தில் சங்குசக்கரம் ஏந்தி 18 கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் சாந்த சொரூபினியாக விஜய ஜெய சாமுண்டீஸ்வரி காட்சியளித்து வருகிறார்.

காலசர்ப தோஷம் 

திருவண்ணாமலை மாவட்டம் போளுர் அருகே காடுகளுக்கும் மலைகளுக்கும் மத்தியில் உள்ள படவேடு எனும் இயற்கை எழில் சூழ்ந்த அழகிய கிராமத்தில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் உள்ளது. எப்போதும் போர்கோலத்தில் காணப்படும் அம்பிகை இத்தலத்தில் வடக்கு பார்த்தவாறு சிம்ம வாகனத்தில் சங்குசக்கரம் ஏந்தி 18 கரங்களுடன் அமர்ந்தகோலத்தில் சாந்த சொரூபினியாக விஜய ஜெய சாமுண்டீஸ்வரி என்ற பெயரில் அருள்பாலிக்கிறாள். இத்தலத்தில் உயிர்பலி ஏதும் ஏற்காத புனிதமாக உள்ள சாமுண்டி தேவியை வணங்கினால் மூதாதையர்கள் செய்த பெண்கள் சாபம் திருமண தடையால் ஏற்படும் காலசர்ப தோஷம் ராகு கேது தோஷம் பித்ருகள் தோஷம் (முன்னோர்கள் இட்ட சாப நிவர்த்தி) ஆகியவை நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இப்பகுதியில் எட்டு திக்கிலும் ஆஞ்சநேயர் காவல் தெய்வமாக உள்ளதாலும் நவக்கிரகங்கள் இல்லாததாலும் இங்கு சாமுண்டீஸ்வரியே நவ துர்காவாகவும் நவசாமுண்டியாகவும் விஜய ஜெய சாமுண்டீஸ்வரியே அருள்பாலிப்பது இத்தலத்தின் சிறப்பாகும். 

சகல தோஷங்களும் தீரும்

இந்த அம்மனை தாயாக நினைத்து வேண்டி வணங்கி அன்னதானம் செய்தால் தீயவைகளும் சகல தோஷங்களும் நிவர்த்தி செய்வாள் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. பிரார்த்தனைகள் நிறைவேறியதும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து புதுவஸ்திரம் சாற்றி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு 3 வேளையும் அன்னதானம் செய்து மகிழ்கின்றனர். அம்மனை நினைத்து தனது வேண்டுதல்களை உண்மையான பக்தியோடு அடுத்தவர்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் வேண்டுதல் எதுவாக இருந்தாலும் நிறைவேற்றுவதாக நம்பிக்கை. மேலும் மருத்துவர்களால் கைவிடப்பட்ட நானாவித நோய்களும் கடன்பிரச்சனைகள் குடும்ப ஒற்றுமை பில்லி சூனியம் ஏவல் காத்து கருப்பு போன்ற கொடுஞ்செய்வினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 108 எலுமிச்சை பழத்தில் குங்குமம் வைத்து மாலையாக கட்டி அம்மனுக்கு சாற்றி இரவு தங்கினால் அனைத்து துன்பங்களும் விலகி நன்மை தருவாள் சாமுண்டி என்பது பக்தர்களின் நம்பிக்கை.

See also  அண்ணாமலையார் கோயிலில் சமய நூலகம்

கோதானமும் குழந்தை பாக்கியமும்

திருமணமாகி நீண்ட வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் இந்த அம்மனுக்கு பசுக்கள் அல்லது கன்றுடன் கூடிய பசுக்களை அம்பாளை நினைத்து கோவிலுக்கு நேர்த்தி விடுகின்றனர். அப்படி நேர்த்தி விடும் பசுக்கள் கோவில் நிர்வாகம் சார்பில் கோசாலை வைத்து பராமரித்து வருகின்றனர். பசுக்களை நேர்த்திவிட்ட தம்பதிகளுக்கு மறுவருடமே குழந்தை பாக்கியம் பெறுவது இத்தலத்தின் சிறப்பாக கருதப்படுகிறது. அப்படி குழந்தை பாக்கியம் பெற்ற தம்பதிகள் மழலைச்செல்வத்துடன் வந்து முடி காணிக்கை செய்து அன்னதானம் செய்கின்றனர்.

அத்தி மரத்தில் இரண்டு அம்மன்

படவேடு அன்னை ரேணுகாம்பாளை போலவே 18 கரங்களுடன் கூடிய விஜய ஜெய சாமுண்டீஸ்வரி அம்மனையும் அழகிய சிதை சிற்பமாக 50 வருடங்களுக்கு முன் இரண்டு சிற்பங்களையும் அத்திமரத்தால் வடிவமைத்து தந்தவர் ஒரே சிற்பி என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் நம் கண்முன்னே நேரில் அம்மனை காண்பது போல் பழமை மாறாமல் புதியதாக வடிமைத்தது போல் உள்ளது வியப்பிற்குரியதே.

ஜமதக்கனி முனிவர்

அன்னை ரேணுகாதேவி சாமுண்டீஸ்வரியை அழைத்துக்கொண்டு திக் விஜயம் செய்தாள். அப்போது ஜமதக்கனி முனிவர் ஆசிரமம் அமைத்து யாகம் செய்தார். சந்து துவாரம் என்கிற இப்போதுள்ள சந்தவாசல் பகுதியில் அமர்ந்து கொண்டு இந்த வனத்தில் என்ன அதிசயம் நடக்கிறது என்று ரேணுகாதேவி கூறி சாமுண்டி தேவியை அனுப்பிவைக்கிறார். அப்போது சாமுண்டி தேவி ஆடம்பரமான துர்காம்சமான தீயாக (ஜூவாலையாக) அசுர வேகத்தில் விண்ணை பிளக்கும் ஒலியுடன் வரும்போது தன் ஆசிரமம் நோக்கி வருவது சாமுண்டி தேவி என்று உணர்ந்த ஜமதக்கனி முனிவர் தன் கமண்டலத்தை சாய்த்து நீரினால் தீ ஜூவாலையை அணைத்து ஒரு லட்சம் செங்குவலை என்ற மலரால் சாமுண்டியை கட்டி அங்கேயே பிரதிஷ்டை செய்தார் ஜமதக்கனி முனிவர் என்பது இத்தலத்தில் உள்ள கல்வெட்டு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கோயில் அருகில் கமலண்ட நதி உருவாகி சந்தவாசல்¸ ஆரணி¸ செய்யாறு¸ காஞ்சிபுரம் வழியாக சென்னையில் கடலில் கலக்கிறது.  மேலும் அம்பாள் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதால் பட்டீசீரம்¸ குண்டலிபுரம்¸ படவேடு¸ மாதுபுரி என்ற பூரண பெயர்களும் இவ்வூருக்கு உண்டு. இப்பகுதியில் 1008 சிவாலயங்களும் 1008 விஷ்ணு ஆலயங்களும் இருந்துள்ளது என்பது செவிவழி செய்தியாக உள்ளது. மகான்களும் முனிவர்களும் சித்தர்களும் இருப்பிடமாக இருந்ததால் சித்தர் பூமி என்றும் முற்காலத்தில் இந்த இடம் அழைக்கப்பட்டது.

See also  திருவண்ணாமலை கோயிலுக்கு அசாமில் இருந்து யானை

18 கரங்களுடன் சாமுண்டீஸ்வரி

நல்லவர்களுக்கு சாந்த சொரூபியாகவும் தீயவர்களுக்கு துஷ்ட நிவர்த்தினியாகவும் சிம்மா வாகனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறாள். முதல் கையில் சங்கு சக்கரம் ஏந்தியுள்ளது. இந்த ஆயுதம் விஷ்ணுவுக்கும் மகாலட்சுமிக்கும் உரியது. உலகிலுள்ள அனைத்து உயிர்களும் எந்தவித தீங்கும் இல்லாமல் காப்பது மற்றும் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் மக்களுக்கு வழங்குவதாகும். 2வது கையில் அங்குசம் பாவுசம் வைத்துள்ளது முதல் கடவுளான பிள்ளையாருக்கு உரியதாகும். எந்தவித செயலையும் தொடங்கும் முன் பிள்ளையாரை முன்னிறுத்தி வணங்குவது முதல் முழு பாதுகாப்பு அளித்தலாகும். 3வது கையில் வஜ்ராயுதம் திரிசூலம் உள்ளது. இந்த ஆயுதம் சுப்பிரமணியருக்கும் காளிக்கும் உரியதாகும். அனைத்து உயிர்களையும் காத்தல் மற்றும் துஷ்டர்களை அழித்தலாகும். 4வது கையில் சூலம் மணி காளியின் அவதாரமாகும். 5வது கைகளில் வில் அம்பு ஏந்தி நிற்பது கங்கையம்மனின திருவுருவத்திற்கு உரியதாகும். 6வது கையில் கதாயுதம்¸ தண்டம் ஏந்தியுள்ளது இது அனுமனின் ஆயுதமாகும். தன்னை நாடி வருபவர்களுக்கு அனைத்து செயல்களையும் தாங்கக்கூடிய உடல்வலிமையும் மனதைரியத்தையும் அளிப்பதாகும். 7வது கையில் கத்தி கபாளமும் ஏந்தி இருப்பது பெண்களின் மாங்கல்ய பாக்கியத்தை காத்து ரட்சிப்பதாகும். 8வது கைகளில் அச்சம் அகிலாண்டியுடன் காட்சி தருவது பிரம்மா மற்றும் சரஸ்வதியின் மறுவடிவமாகும். படைத்தல் தொழிலை சிருஷ்டிப்பதும் காலத்தால் அழியாத கல்வி செல்வத்தை அளிப்பதாகும் 9வது கையை நோக்கியும் மற்றொரு கையை நீழ்நோக்கியும் காட்சியளிப்பது அஸ்தம் வரஅஸ்தம் என்ற நிலையை விளக்குவதாகும்.

படவேடு விஜய ஜெய சாமுண்டீஸ்வரி கோயில் சிறப்புகள்

காலை பிடித்து அருள்வாக்கு

See also  தீபத்திருவிழாவை நடத்திட கலெக்டரிடம் கோரிக்கை

படவேடு கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் சிறுவயது முதலே ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டு பள்ளி செல்லும் முன் அம்மன் கோவிலுக்கு செல்வதையே வழக்கமாக கொண்டிருந்தார். ஒருநாள் அம்மன் கனவில் தோன்றி சக்தி சண்முகானந்த சுவாமிகளின் நாக்கை கையில் பிடித்து இழுத்து தனது கால் கட்டைவிரலால் நாக்கில் எழுதிவிட்டு மறைந்தால் அன்னை. அன்று முதல் சுவாமிகள் துறவரம் மேற்கொண்டு வரும் பக்தர்களுக்கு செவ்வாய் வெள்ளி ஞாயிற்றுக்கிழமை மற்றும் அமாவாசை பவுர்ணமி நாட்களிலும் அருள்வாக்கு கூறுவதையே வழக்கமாக கொண்டார்.

சக்தி அம்மாவிடம் அருள்வாக்கு கேட்க வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள் ஏராளமான வரத்தொடங்கினர். வரும் பக்தர்கள் காணிக்கையாக அருள்வாக்கு பணத்தையும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு காணிக்கையாக வரும் பணம் முழுவதையும் கோவில் நிர்வாகம் சார்பில் 3 வேளையும் அன்னதானம் செய்யப்படுவதாக சக்தி சண்முகானந்த சுவாமிகள் தெரிவித்தார்.

சாமுண்டிதேவி அவதார தினம்

ஆடி மாதம் 3ம் வெள்ளிக்கிழமை சாமுண்டீஸ்வரி பிறந்த தினம் அன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சொற்பொழிவு வெகுசிறப்பாக நடைபெறுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

திருவிழா : ஆனி மாதம் பவுர்ணமியில் 1008 பால்குட விழாவும், 1008 பூங்கிரக திருவிழாவும், நவராத்தி திருவிளக்கு பூஜை, விஜயதசமியில் சிறப்பு அபிஷேக அலங்காரமும், வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் செய்யப்படுகிறது.

தொடர்புக்கு : ஸ்ரீலஸ்ரீ சக்தி அம்மா சண்முகானந்த சுவாமிகள்¸ செல்போன் எண் – 7530067635  ஓம் சக்தி விஜய ஜெய சாமுண்டீஸ்வரி அருள்வாக்கு சக்தி பீடம் அம்மன் கோவில் படவேடு மற்றும் அஞ்சல்¸ போளுர் வட்டம்¸ திருவண்ணாமலை மாவட்டம்

கோவில் பூசாரிகள் வி.தியாகராஜன்¸ 9677394831¸ வி.அண்ணாமலை 7558105414¸ அலங்காரம் சுப்பு 7639580658

அமைவிடம்: திருவண்ணாமலையிலிருந்து வேலூர் செல்லும் சாலையில் சந்தவாசலில் இருந்து 7வது கி.மீ. தூரத்தில் படவேடு ரேணுகாம்பாள் கோவில் அருகே சாமுண்டீஸ்வரி கோவில் உள்ளது.

– ப.பரசுராமன்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!