Homeசெய்திகள்புதிய பஸ் நிலையம் அமைக்க இவ்வளவு வேலையா?

புதிய பஸ் நிலையம் அமைக்க இவ்வளவு வேலையா?

திருவண்ணாமலை டான்காப் இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க இன்று பூமி பூஜை நடைபெற்றது. 1 ½ வருடமாக புதிய பஸ் நிலையம் அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

நகராட்சிக்கு வருமானம்

திருவண்ணாமலை – திண்டிவனம் ரோட்டில் உள்ள டான்காப் எனப்படுகிற எண்ணெய் பிழியும் தொழிற்சாலை 25 ஆண்டுகளுக்கு முன் நஷ்டத்தின் காரணமாக மூடப்பட்டு விட்டது. தற்போது அந்த ஆலை இயங்கிய இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க திமுக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக வேளாண்மை துறையிடம் இருந்த 6 ஏக்கர் நிலம் நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து 10 ஏக்கர் இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது 6.6 ஏக்கரில் அமைப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சி காலத்தில் திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் புதிய பஸ் நிலையம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் சுடுகாடு¸ குப்பை கிடங்கு மற்றும் கிரிவலப்பாதை அங்கு இருப்பதால் புதிய பஸ் நிலையம் டான்காப் இடத்தில் அமைக்க திமுக ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது.

ஈசான்யமும் வேண்டாம், டான்காப்பும் வேண்டாம். ரிங் ரோடை ஒட்டினாற் போல் வேறு இடத்தில் புதிய பஸ் நிலையம் கட்ட வேண்டும் என வியாபாரிகள் உள்பட பெரும்பாலானவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ரிங் ரோடு பக்கம் சென்றால் ஊராட்சி பகுதியாகி விடும் என்பதால் நகராட்சிக்கு வருமானம் வரும் நோக்கில் டான்காப் இடத்திலேயே பஸ் நிலையம் அமைப்பதென முடிவு எடுக்கப்பட்டது.

See also  முதன்முறையாக டாக்டருக்கு படிக்கும் லம்பாடி மாணவர்கள்

புதிய பஸ் நிலையம் அமைக்க இவ்வளவு வேலையா?

அடிக்கல் நாட்டிய முதல்வர்

இதற்காக டான்காப் பகுதியில் உள்ள 60 குடும்பங்களைச் சேர்ந்த நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு டான்காப் பின்புறம்¸ ரெயில்வே லைன் அருகில்¸ பல்லவன் நகருக்கு செல்லும் வழியில் அரசு புறம்போக்கு இடத்தில் மாற்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 1 ½ வருடத்திற்கு முன் திட்டமிடப்பட்ட பணி துவங்காததால் பஸ் நிலையம் வேறு இடத்திற்கு மாற்றப்படலாம் என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருவண்ணாமலைக்கு வந்த முதலமைச்சர் ஸ்டாலின் டான்காப் இடத்தில் புதிய பஸ் நிலையம் கட்ட அடிக்கல் நாட்டினார். அதன்பின்னரும் பணிகள் துவங்கவில்லை. டான்காப்பில் எண்ணெய் பிழிவதற்காக பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களும், மரங்களும் ஏலம் விடப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டன. இதையடுத்து கட்டிடங்கள் இடிக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்றது.

புதிய பஸ் நிலையம் அமைக்க இவ்வளவு வேலையா?

பூமி பூஜை

இப்பணிகள் முடிவடைந்ததை அடுத்து புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான பணிகள் இன்று தொடங்கி உள்ளன. இதற்கான பூமி பூஜையில் நகரமன்ற தலைவர் நிர்மலா கார்த்தி வேல்மாறன், எ.வ.வே.கம்பன், துணைத் தலைவர் ராஜாங்கம், ஆணையாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

See also  சர்ச்சைக்குரிய விபூதி பாக்கெட்-தெரியாது என்கிறது கோயில் நிர்வாகம்

டான்காப் இடத்தில் பஸ் நிலையம் அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நகராட்சி விளக்கமளித்துள்ளது. இது சம்மந்தமாக திருவண்ணாமலை நகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

திருவண்ணாமலை நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைத்திட வேளாண்மைத்துறையின் கீழ் இயங்கும் TANCOF நிறுவனத்திற்கு சொந்தமான 6.60 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலைய அமைக்க உத்தேசிக்கப்பட்டது. புதிய பேருந்து நிலையம் அமைக்க மதிப்பீடு ரூ.30.15 கோடிக்கு உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி திட்டத்தின் கீழ் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

தொடர்ந்து, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க வேளாண்மை உற்பத்தி இயக்குநர் கடிதத்தில் திருவண்ணாமலை நகரின் டான்காப் இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

நிலப்பயன்பாடுக்காக ரூ.3.99 கோடி

மேற்கண்ட ஒப்புதலை தொடர்ந்து தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்திற்கு டான்காப் நிறுவனத்தால் செலுத்த வேண்டிய ரூ.3.99 கோடியை நிலப்பயன்பாடு கேட்புத்துறையான (Requisitioning Department) நகராட்சி நிர்வாக துறையை டான்காப் நிறுவனத்தின் வங்கி கணக்கில் செலுத்திட வேளாண்மை உற்பத்தி ஆணையர் கோரினார்.

See also  டோல்கேட்டில் கட்டணமின்றி சென்ற வாகனங்கள்

எனவே, டான்காப் இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு, நகராட்சி நிர்வாக இயக்குநர் நேரடி அறிவுரைப்படி, நகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.3.99 கோடி தொகையினை வேளாண்மை உற்பத்தி இயக்குநருக்கு 18.05.2022 ஆம் தேதி செலுத்தப்பட்டது.

புதிய பஸ் நிலையம் அமைக்க இவ்வளவு வேலையா?

மேலும் டான்காப் மற்றும் திருவண்ணாமலை நகராட்சியும் இணைந்து ஒரு கூட்டு நிறுவன முறையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க டான்காப் சொந்தமான இடத்தில் 6.60 ஏக்கர் இடத்தில் முன்நுழைவு அனுமதி (Enter Upon Permission) வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, 17.08.2022 அன்று ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, 25.10.2022 ஆம் தேதியன்று பணி உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது.

மானியமாக ஒதுக்க கோரிக்கை

தற்பொழுது நகராட்சியில் போதிய நிதி ஆதாரம் இல்லாத காரணத்தால் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேளாண்மை உற்பத்தி இயக்குநருக்கு செலுத்திய ரூ.3.99 கோடி தொகையினை அரசின் முழு மானியமாக ஒதுக்கீடு செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


 Tiruvannamalai Agnimurasu

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!