Homeசெய்திகள்செய்யாரில் 1000 பேர் திரண்டு பைக் பேரணி

செய்யாரில் 1000 பேர் திரண்டு பைக் பேரணி

செய்யாறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க கோரி 1000 பேர் பைக் பேரணி நடத்தினர். சப்-கலெக்டரிடம் ஒரே நேரத்தில் 2300 பேர் மனுக்களை வழங்கினர்.

திருவண்ணாமலை மாவட்டம் 6188 ச.கி.மீ. பரப்பும் 24,64,875 மக்கள் தொகையும் கொண்ட தமிழ்நாட்டின் நான்காவது பெரிய மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. இம் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த அதிமுக ஆட்சியில் தீவிரமெடுத்தது. கடந்த முறை அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த சேவூர் ராமச்சந்திரன் ஆரணியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் உருவாக்க நடவடிக்கை எடுத்தார். செய்யாறை தலைமையிடமாக கொண்டுதான் மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். போராட்டமும் நடத்தினர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் மாவட்டம் பிரிக்கும் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. திருவண்ணாமலையை இரண்டாக பிரிக்க வேண்டும் என பாமக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து செய்யாறில் இன்று 1000 பேர் திரண்ட பைக் பேரணி நடத்தப்பட்டு சப்-கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

See also  கலெக்டர் வந்த பிறகுதான் சொட்டு மருந்து வழங்குவோம்

செய்யாறு மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் செய்யாறு தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க கோரி பைக் பேரணி திருவத்தூர் வேதபுரீஸ்வரர் கோயில் அருகில் தொடங்கியது. பேரணி காந்தி சாலை, மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட், ஆற்காடு சாலை வழியாக சப்- கலெக்டர் அலுவலகம் அருகே முடிவடைந்தது.

செய்யாரில் 1000 பேர் திரண்டு பைக் பேரணி

பிறகு அங்கு கோஷங்கள் முழுங்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பைக் பேரணியில் அனைத்து கட்சி பிரமுகர்கள், வியாபாரிகள், தன்னார்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து வியாபாரிகள் அனைத்து கட்சியினர், பல்வேறு சமூக அமைப்புகள் மூலமும், செய்யாறு மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மூலமும் 2300 மனுக்கள் செய்யாறு தலைமை இடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் கோரி சப் கலெக்டர் அனாமிகாவிடம் மனுக்கள் வழங்கப்பட்டது.

செய்யாறு மக்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது,

01.04.1959ம் ஆண்டில் செய்யாறு, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டன . செய்யாறு கோட்டம் தவிர அனைத்தும் வருவாய் கோட்டங்களும் மாவட்டங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

See also  கலெக்டர் காரை சூழ காத்திருந்த கிராம மக்கள்

அதன் அடிப்படையில் 64 வருடங்களாக செய்யாறில் செயல்பட்டு வரும் வருவாய் கோட்டத்தினை தலைமை இடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் உருவாக்க வேண்டும். செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி தாலுக்காகளில் உள்ள கிராமங்கள் சுமார் 150 கிலோமீட்டர் தூரம் பயணித்து தலைமை இடமான திருவண்ணாமலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதால் கால விரயமும் பண விரயமும் ஆகிறது.

செய்யாறு தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்பெற்றால் கிராம மக்கள், விவசாயிகள், மாணவர்கள், அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனுக்குடன் அருகில் உள்ள செய்யாறு பகுதிக்கு எளிதாக வந்து செல்லவும் அரசு அலுவலர்களை தொடர்பு கொள்ளவும் வசதியாக இருக்கும். மேலும் வளர்ச்சி திட்டங்கள், அரசு நலத்திட்டங்கள் பேரிடர் காலத்திட்டங்கள் அனைத்தும் விரைவாக செயல்படுத்திட முடியும். மேலும் சட்டம் ஒழுங்கு ஏற்படும் அவசர காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் உடனடியாக காவல்துறையினரால் எடுக்க பேரூதவியாக இருக்கும்.

இதனை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2016 ம் ஆண்டு வந்தவாசியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் செய்யாறு தலைமை இடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் உருவாக்கப்படும் என தெரிவித்திருந்தார். எனவே தமிழக முதல்வர், வாக்குறுதியை நிறைவேற்ற முன் வர வேண்டும்.

See also  தி.மலையை விட செய்யாறு கல்லூரியில் கோர்ஸ் அதிகம்

இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!