திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 முதல் 44 வயது வரை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் 18 முதல் 44 வயது வரை உள்ள அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை திருப்பூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். மேலும் முதலமைச்சர் உத்தரவின்படி¸ ஓரிடத்திலிருந்த மற்றொரு இடத்திற்கு செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகள் என கண்டறியப்பட்ட நபர்களுக்கு¸ அவர்களின் வீடு அல்லது மிக அருகாமையில் இருக்கும் இடத்திற்கு சென்று தடுப்பூசி செலுத்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
18 முதல் 44 வயது வரை
திருவண்ணாமலை மாவட்டத்தில்¸ திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை¸ செய்யாறு தலைமை அரசு மருத்துவமனை¸ அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி முன்களப் பணியாளர்கள்¸ 45 முதல் 60 வயது வரை உள்ளவர்கள்¸ 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆகியோருக்கு செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது¸ அரசின் உத்தரவின்படி 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மாவட்டத்தில் உள்ள மேற்கண்ட அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகிறது.
கட்டுமான தொழிலாளர்கள்
இதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட¸ செய்தித்தாள் விநயோகம் செய்பவர்கள்¸ பால் விற்பனையாளர்கள்¸ விநயோகஸ்தர்கள்¸ நடைபாதை கடை வியாபாரிகள்¸ மருந்தகங்கள் மற்றும் மளிகை கடைகளில் பணிபுரிபவர்கள்¸ ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள்¸ பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள்¸ மின்வாரிய பணியாளர்கள்¸ உள்ளாட்சி அமைப்பு பணியாளர்கள்¸ மின் வணிக பணியாளர்கள்¸ அத்தியாவசிய தொழில்கள்¸ கட்டுமான தொழிலாளர்கள்¸ பிற மாநில தொழிலாளர்கள்¸ அனைத்து அரசுப் பணியாளர்கள் மற்றும் மாநில போக்குவரத்து கழக ஊழியர்கள்¸ அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள்¸ பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள்¸ உள்ளிட்ட அனைவரும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
மாற்றுத்திறனாளிகள்
மேலும்¸ கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்கும் தொண்டர்கள்¸ மருத்துவமனைகளில் உதவி செய்யும் தன்னார்வலர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். மாற்றுத்திறனாளிகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கொரோனா கட்டுப்பாட்டு அறையில் 04175-1077¸ 04175-233344¸ 04175-233345 ஆகிய எண்களிலும்¸ 8870700800 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இத்தகவலை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இது சம்மந்தமாக திருவண்ணாமலை நகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது¸
அடையாள அட்டை
நாளை திங்கட்கிழமை 24.05.2021 திருக்கோவிலூர் ரோட்டில் உள்ள சுபலட்சுமி திருமண மஹால் மற்றும் போளூர் ரோட்டில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா மீட்டிங் ஹால் ஆகிய இரு இடங்களிலும் தடுப்பூசி போடும் முகாம் காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியரால் துவக்கி வைக்கப்பட்டு நடைபெற உள்ளது.
அதுசமயம் 18 வயது முதல் 44 வயது வரை உள்ள தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்பும் நபர்கள் தங்களுடைய ஆதார் அட்டை மற்றும் தங்களின் பணி குறித்த அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து தடுப்பூசி போட்டு கொள்ளலாம்.
யார்¸ யாருக்கு அனுமதி?
வீடுதோறும் சென்று நாளிதழ் போடும் நபர்கள்¸ வீடுதோறும் சென்று பால் பாக்கெட் மற்றும் பால் விற்பனை செய்யும் நபர்கள்¸ தெருக்களில் சென்று விற்பனை செய்யும் விற்பனையாளர்கள்¸ மருந்து கடையில் பணிபுரியும் பணியாளர்கள்¸ டாக்சி ஓட்டுனர்கள்¸ பேருந்து ஓட்டுநர்கள். நடத்துநர்கள்¸ மின் வாரிய பணியாளர்கள்¸ உள்ளாட்சி பணியாளர்கள்¸ ஆன்லைன் டோர் டெலிவரி செய்யும் நபர்கள்¸ அத்தியாவசிய தொழிற்சாலைகளில் பணிபுரியும் நபர்கள்¸ கட்டிட தொழிலாளர்கள்¸
கோவிட் கண்டைன்மெண்ட்
ஆன்லைன் மூலம் டோர் டெலிவரி செய்யும் நபர்கள்¸ அத்தியாவசிய பொருட்கள் தயார் செய்யும் நிறுவனங்கள்¸ வெளிமாநிலத்தில் இருந்து இங்கு பணிபுரியும் பணியாளர்கள்¸ அனைத்து அரசாங்க ஊழியர்கள்¸ அனைத்து போக்குவரத்து நிறுவன ஊழியர்கள்¸ அனைத்து பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் பேராசிரியர்கள்¸ பத்திரிக்கை நிருபர்கள்¸ ஊடகத்தில் பணி புரிபவர்கள்¸ கோவிட் கண்டைன்மெண்ட் பகுதியில் பணிபுரியும் தன்னார்வலர்கள்¸ கப்பல் கட்டுமானப் பணி¸ விமான நிலையத்தில் பணிபுரியும் பணியாளர்கள்¸ அனைத்து வங்கி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள்.
மாற்றுத்திறனாளிகள் வரிசையில் நிற்காமல் வந்தவுடன் தடுப்பூசி போட்டு கொண்டு சென்று விடலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.