Homeசெய்திகள்கொரோனா நிதிக்கு சேமிப்பு பணத்தை தந்த மாணவன்

கொரோனா நிதிக்கு சேமிப்பு பணத்தை தந்த மாணவன்

கொரோனா நிதிக்கு சேமிப்பு பணத்தை தந்த மாணவன்

திருவண்ணாமலையைச் சேர்ந்த மாணவன் ரிமோட் கார் வாங்குவதற்கு வைத்திருந்த உண்டியல் சேமிப்பு பணத்தை  கொரோனா நிவாரண நிதிக்காக கலெக்டரிடம் வழங்கினார். 

பொது நிவாரண நிதி

தமிழ்நாடு கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலையால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று பொதுமக்கள்¸ சமூகநல அமைப்புகள்¸ பெருந்தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

 ரூ.69 கோடி நன்கொடை 

இதையடுத்து பலர் நிவாரண நிதியை தந்து வருகின்றனர். மாணவர்களும்¸ சிறுவர்களும்¸ சிறுமிகளும் தாங்கள் சேர்த்து வைத்திருந்த பணத்தையும் நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர். நேற்று வரை சேர்ந்துள்ள ரூ.69 கோடியில் ரூ.50 கோடியை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்திக் கொள்ள முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

பள்ளி மாணவன்

இந்நிலையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த மாணவன் தனது சேமிப்பு பணத்தை கொரோனா நிதிக்காக வழங்கி அனைவரது பாராட்டுதலையும் பெற்றிருக்கிறார். அவர் பெயர் மாணிக்கவாசகம் (வயது 11). திருவண்ணாமலை திருவூடல் தெருவைச் சேர்ந்த மோகன்குமாரின் 2வது மகனான மாணிக்கவாசகம் திருவண்ணாமலை வி.டி.எஸ். பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். 

See also  மாற்று திறனாளி வீட்டில் ஸ்டாலின்-தண்ணீர் குடித்து நலம் விசாரிப்பு

உண்டியலில் சேமிப்பு 

ரிமோட் கார் வாங்க வேண்டும் என ஆசைப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உண்டியலில் தனது அப்பா¸ அம்மா¸ மாமா ஆகியோர் வழங்கும் நாணயங்கள் மற்றும் பணத்தை மாணிக்கவாசகம் சேமித்து வந்துள்ளார். மேலும்¸ கடந்த ஆண்டு மாணக்கவசாகத்தின் பிறந்த நாள் அன்று அவரது தந்தை வழங்கிய ரூ.200-த்தையும் உண்டியலில் சேமித்துள்ளார்.

கொரோனா நிதிக்கு சேமிப்பு பணத்தை தந்த மாணவன்

சைக்கிளில் சென்றார்

நாள்தோறும் கொரோனா நோயாளிகள் படும் இன்னல்களை கேள்விப்பட்டு வந்த மாணிக்கவாசகம் அவர்களது சிகிச்சைக்காக தனது சேமிப்பு பணத்தை வழங்குவது என முடிவு செய்தார். இது பற்றி தனது¸ தாய்¸தந்தையிரிடம் தெரிவித்து¸ அவரது அண்ணன் ஞானசம்பந்தனுடன் சைக்கிளில்  இன்று (18.05.2021) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.  அங்கு மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தனது உண்டியில் சேமிப்பு பணம் ரூ.1400-யை கொரோனா நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். 

கலெக்டர் பாராட்டு 

இதில்¸ 200¸ 50¸ 30¸ 5 ஆகிய நோட்டுகளாக ரூ.285-ம்¸ 10¸ 5¸ 2¸ 1 ஆகிய நாணயங்களாக ரூ.1115-ம்¸ என மொத்தம் ரூ.1400- யை உண்டியல் சேமிப்பு பணமாக இருந்தது. இதைப் பார்த்து நெகிழ்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி¸ மாணவனை பாராட்டி¸ கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் முகக்கவசம் அணிந்து கவனமாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

See also  கோயிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்புள்ள இடம் மீட்பு

மாணவன் மாணிக்கவாசகனின் தந்தை மோகன்குமார் தனியார் நிறுவனத்திலும்¸ தாய் ஞானசௌந்தரி வி.டி.எஸ். பள்ளியிலும் ஆசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார்கள்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!