Homeஅரசு அறிவிப்புகள்1000 கால் மண்டபத்தில் அமர வைக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதி

1000 கால் மண்டபத்தில் அமர வைக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பவுர்ணமி அன்று பக்தர்கள் 1000 கால் மண்டபத்தில் உட்கார வைக்கப்பட்டு தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர்.

இந்த வருடம் சித்ரா பெர்ணமி 4.5.2023 அன்று இரவு தொடங்கி 5.5.2023 அன்று இரவு நிறைவடைகிறது. இதையொட்டி கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு 20 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு துறை வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தலைமையில் இன்று நடைபெற்றது.

இது சம்மந்தமாக மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,

சித்ரா பவுர்ணமி 4.5.2023 அன்று இரவு தொடங்கி 5.5.2023 அன்று இரவு நிறைவடைகிறது. இந்த வருடமும் பல்வேறு நாடுகளிருந்தும், மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் சுமார் 20 லட்சம் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பெருமளவில் வருவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. பக்தர்கள் தொடர்ந்து சுவாமியை தரிசனம் செய்ய வசதியாக கட்டணமில்லா தரிசன சேவை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,

See also  அண்ணாமலையார் கோயிலில் 365 என்ற விளக்கை ஏற்ற தடை

1000 கால் மண்டபத்தில் அமர வைக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதி

மேலும் சிறப்பு வழி தரிசனம் செய்ய விரும்புவோர் நலன் கருதி, ரூ.50 க்கான கட்டண சேவை வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சித்ரா பர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் வழக்கம் போல் கிழக்கு ராஜ கோபுரத்தின் உள்ளே அனுமதிக்கப்படுவர்,

இந்த ஆண்டு முதல் கிழக்கு ராஜ கோபுரத்தில் வலது உட்புறம் வழியே அனுமதிக்கப்பட்டு, 1000 கால் மண்டபத்தில் பக்தர்களை அமர வைத்து ஒருவர் பின் ஒருவராக வள்ளால மகாராஜா கோபுரத்தின் வழியாக தரிசனத்திற்கு  அனுமதிக்கப்படுவர்.

மேலும் கிரிவலப்பாதையில் பக்தர்களின் வசதிக்காக மூன்று இடங்களில் இளைப்பாறும் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது,.மேற்படி இளைப்பாறும் கூடங்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் கட்டணமில்லாத சேவையாக பயன்படுத்தும் வகையில் தனித்தனியே குளியல் அறைகள். கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது,

பாதுகாப்பு கருதி பக்தர்கள் வரிசையில் வந்து தரிசனம் செய்யும் வகையில், திருமஞ்சன கோபுரம், பே கோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் ஆகிய இடங்களில் மேற்கூரையுடன் கூடிய நகரும் இரும்பு தடுப்பான்கள் மூலம் தகுந்த கியூலைன் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

See also  திருவண்ணாமலை கோயிலை பற்றி அதிக போன்கால் வருகிறது

பொது தரிசன வழி சிறப்பு தரிசன வழி திருமதில் வெளிப்புறம் – தற்காலிக நிழற்பந்தல் தேங்காய் நார் தரைவிரிப்பு (Coir Mat), மற்றும் குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் வெயில் காரணமாக பாதம் வெப்ப பாதிப்பு ஏற்படாமல் இருக்க திருக்கோயிலில் உள்ள க்யூ வரிசையில் நகரும் தடுப்பான்களுக்கு கீழும் வெள்ளை (cool Paint) அடித்தல், மருத்துவ துறை மூலம் கிரிவலப்பாதையை சுற்றி மருத்துவ முகாம்கள் அமைத்தல், 108 அவரச கால ஊர்தியினை தயார் நிலையில் வைத்திருத்தல், தற்காலிக பேருந்து நிலையங்கள், மின்விளக்குகள், கிரிவலம் செல்லும் பக்கதர்கள் எந்த ஒரு இடையூரும் இல்லாமல் திரும்ப அவர்கள் ஊருக்கு திரும்பி செல்லும் வகையில் தகவல் பலகை அமைத்தல் போன்றவை மேற்கொள்ளப்பட உள்ளது. தீயணைப்பு துறையினர் தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க அறிவுருத்தப்பட்டுள்ளது.

கிரிவலம் வரும் பக்தர்கள் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழியை தவிர்த்து துணிப்பையை எடுத்து வர வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, சுற்றுச்சூழலை காத்திட முழு ஒத்துழைப்பு வழங்கி பிளாஸ்டிக் மாசில்லா திருவண்ணாமலை மாவட்டத்தை உருவாக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்டுகின்றனர்.

See also  தீபத்திருவிழாவிற்கு சிறப்பு ரயில் உள்பட 63 ரயில்கள்

இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, கோட்டாட்சியர் ஆர்.மந்தாகினி மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tiruvannamalai Agnimurasu

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!