Homeசெய்திகள்கோயில் அருகில் பள்ளம் தோண்டும் பணி தடுத்து நிறுத்தம்

கோயில் அருகில் பள்ளம் தோண்டும் பணி தடுத்து நிறுத்தம்

குடிநீர் குழாய் பொருத்தும் பணிக்காக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அருகில் தோண்டப்பட்ட பள்ளத்திலிருந்து பாறாங்கற்கள் வெளியே வந்தன. இதனால் கோயில் அஸ்திவாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் என கூறி பாஜகவினர், பள்ளம் தோண்டும் பணியை தடுத்து நிறுத்தினர்.

தேர் ஓடும் வீதியான திருவண்ணாமலை மாடவீதி சிமெண்ட் சாலையாக மாற்றும் பணிக்கு 2022ம் ஆண்டு மே மாதம் அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார். சிமெண்ட ரோடுக்கு இருபக்கங்களிலும் நடைபாதை அமைக்கப்படுகிறது. இந்த நடைபாதைக்கு கீழ்தான் கழிவு நீர் கால்வாய்கள் செல்லும். மேலும் குடிநீர் குழாய்களுக்காக பெரிய பைப்புகள் புதைக்கப்படுகிறது. மாடவீதியில் உள்ள மின்கம்பங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு மின் கம்பிகள் தரைக்கு கீழ் செல்லும் வகையில் மாற்றப்படுகிறது.

இந்த பணிகளுக்கு எல்லாம் சேர்த்து சிமெண்ட் சாலை அமைக்க ரூ.25 கோடிக்கு மேல் செலவிடப்பட உள்ளது. முதல் கட்டமாக மாடவீதியை சுற்றி குடிநீர் விநியோகத்திற்காக ரோட்டின் ஓரம் பள்ளம் தோண்டப்பட்டு பைப்புகள் புதைக்கப்பட்டு வருகிறது.

கோயில் அருகில் பள்ளம் தோண்டும் பணி தடுத்து நிறுத்தம்

அண்ணாமலையார் கோயிலை சுற்றிலும் பைப்புகளை புதைப்பதற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு வருகிறது. அம்மணி அம்மன் கோபுரத்திலிருந்து பேகோபுரம் வரை நேற்றிரவு பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது பாறாங்கற்கள் பள்ளத்திலிருந்து வெளியே எடுக்கப்பட்டு ஜே.சி.பி இயந்திரம் மூலம் ரோட்டில் கொட்டப்பட்டது. இது கோயில் அஸ்திவாரத்திற்கான கற்கள் என தகவல் பரவியது.

See also  புதிய பஸ் நிலையம் இடம் போதாது- அமைச்சர் முடிவு

இதையடுத்து நேற்றிரவு 12 மணி அளவில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் கே.ஆர்.பாலசுப்பிரமணியன் தலைமையில் மூவேந்தன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பள்ளம் தோண்டும் பணியை தடுத்து நிறுத்தி கோயில் அருகில் பள்ளம் தோண்டுவதால் அஸ்திவாரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி பள்ளம் தோண்டியவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோயில் அருகில் பள்ளம் தோண்டும் பணி தடுத்து நிறுத்தம்

தகவல் கிடைத்ததும் நகரமன்ற உறுப்பினர் ம.செந்தில் மற்றும் ஒப்பந்ததாரர், போலீசார் ஆகியோர் அங்கு சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். கோயில் மதில்சுவர் அருகே பள்ளம் தோண்டினால் போராட்டம் நடத்துவோம் என பாஜகவினர் கூறியதை அடுத்து பணிகள் நிறுத்தப்பட்டன.

வெளியே எடுக்கப்பட்ட பாறாங்கற்கள் மீண்டும் பள்ளத்திலேயே போட்டு மூடப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நகராட்சி அலுவலகத்தில் இது சம்மந்தமாக நாளை பேச்சு வார்த்தை நடத்தி உரிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.


Also read this…

பக்தர்களுக்கு நாள் முழுக்க அன்னதானம்-ஊராட்சி தலைவர் ஏற்பாடு


Tiruvannamalai Agnimurasu

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!