Homeஆன்மீகம்அண்ணாமலையாருக்கு பூ தூவிய பாவை பொம்மை

அண்ணாமலையாருக்கு பூ தூவிய பாவை பொம்மை

அண்ணாமலையாருக்கு பூ தூவிய பாவை பொம்மை

அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவத்தை  முன்னிட்டு உண்ணாமலை உடனாகிகய அண்ணாமலையாருக்கு பொம்மை பூ தூவும் நிகழ்ச்சியை பார்த்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர். 

வசந்த உற்சவம்

நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம் ஆகவும் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம்.

இதில் சித்திரை மாத வசந்த உற்சவம் உலகப் பிரசித்தி பெற்றது. 10 நாட்கள் மிகவும்  விமர்சையாக இந்த உற்சவம்  நடைபெறுவது வழக்கம் இன்று 4-வது நாள் உற்சவம்  நடைபெற்றது.

அண்ணாமலையாருக்கு பூ தூவிய பாவை பொம்மை

சிறப்பு அலங்காரம் 

விழாவின் 4-வது நாளான இன்று இரவு உண்ணாமலை உடனாகிய அண்ணாமலையாருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மூன்றாம் பிரகாரத்தில் உள்ள பன்னீர் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி  மகிழ மரத்தினை 10 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஒவ்வொரு சுற்றிலும் மூன்று முறை  பாவை என்று அழைக்கப்படுகின்ற பொம்மை  பூ போடும் நிகழ்வு  நடைபெறுவது வழக்கம். ராட்டினத்தில் கயிறை கட்டி அதன் மூலம் பொம்மையை கோயில் ஊழியர்கள் இயக்கி சாமி மீது பல்வேறு வாசனை மலர்களை தூவினர். 

See also  ராட்சத ஏணி மூலம் கோபுரம் சுத்தப்படுத்தும் பணி

ஆண்டாள் நாச்சியார்

மற்ற சிவாலயங்களில் கந்தர்வ பொம்மைதான் சுவாமிக்கு பூ போடுவது வழக்கமாக உள்ளது. ஆனால் அண்ணாமலையார் ஆலயத்தில் மட்டுமே சூடிக்கொடுத்த சுடர்கொடி என்று அழைக்கப்படுகின்ற ஆண்டாள் நாச்சியார் அம்சமான பாவை என்கிற பெண் பொம்மை அண்ணாமலையார் மலர்களைத் தூவுவது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.

அண்ணாமலையாருக்கு பூ தூவிய பாவை பொம்மை

மகா தீபாராதனை 

பொம்மை பூ போடும் நிகழ்வை பார்த்த பக்தர்கள் “அண்ணாமலையாருக்கு அரோகரா” என பக்தி முழக்கமிட்டனர்.  குழந்தைகள் அனைவரும் ஆனந்தத்தில் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதனை தொடர்ந்து அண்ணாமலையார் 10 முறை வலம் வந்து திருக்கல்யாண மண்டபத்தை சென்றடைந்தார். அங்கு சாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

குறைந்த அளவு பக்தர்கள்

இந்த நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் ஆலோசனையின் பேரில் முக கவசம் அணிந்து வந்த பக்தர்கள் மட்மே அனுமதிக்கப்பட்டனர். கொரோனா தொற்று இரண்டாம் அலை காரணமாக குறைந்த அளவு பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாரை வழிபட்டனர்.

இந்த உற்சவத்தில் பிச்சகர்மிராசு விஜயகுமார்¸ சிவனடியார் ஆர்.டி.பிரகாஷ் கோவில் மணியக்காரர் செந்தில்¸ சிவாச்சாரியார்கள் உள்ளிட்ட பலர் கொண்டனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!