Homeஅரசு அறிவிப்புகள்ராணுவ ஆள் சேர்ப்புக்கான நுழைவுத் தேர்வு ரத்து

ராணுவ ஆள் சேர்ப்புக்கான நுழைவுத் தேர்வு ரத்து

ராணுவ ஆள் சேர்ப்புக்கான நுழைவுத் தேர்வு ரத்து

திருவண்ணாமலையில் நடைபெற்ற ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாமிற்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார். 

இது சம்மந்தமாக திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது¸

24 ஆயிரம் இளைஞர்கள்

திருவண்ணாமலையில்¸ சென்னை மண்டல இராணுவ தலைமை அலுவலகம் சார்பில்¸ திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இராணுவ ஆள்சேர்ப்பு முகாம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது.

இம்முகாமில்¸ சென்னை¸ திருவள்ளுர்¸ செங்கல்பட்டு¸ காஞ்சிபுரம்¸ இராணிப்பேட்டை¸ வேலூர்¸ திருப்பத்தூர்¸ திருவண்ணாமலை¸ கள்ளக்குறிச்சி¸ விழுப்புரம்¸ கடலூர் ஆகிய 11 மாவட்டங்களிலிருந்தும்¸ புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலிருந்தும் ஆன்லைனில் விண்ணப்பித்திருந்த 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். 

பொது நுழைவுத் தேர்வு

இதில் பங்கேற்றவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு¸ பல்வேறு உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டு¸ மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான பொது நுழைவுத் தேர்வு வரும் 25ந்தேதி அன்று சென்னை பிரசிடென்சி கல்லூரியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது¸ தற்போது கோவிட்-19 நோய் தொற்று பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

See also  தீபத்திருவிழாவிற்கு சிறப்பு ரயில் உள்பட 63 ரயில்கள்

இராணுவ ஆள்சேர்ப்பு முகாம் பொது நழைவுத் தேர்விற்கான புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். இந்திய இராணுவ இணையதளத்தில் பொது நுழைவுத் தேர்வு தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் புதிய தேதிகள் முடிவு செய்தவுடன் அறிவிக்கப்படும். தேர்வாளர்கள் மேற்கண்ட இணையதளத்தினை தொடர்ந்து பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

ராணுவ ஆள் சேர்ப்புக்கான நுழைவுத் தேர்வு ரத்து

புதிய அனுமதி அட்டை

மேலும்¸ பொது நுழைவுத் தேர்விற்கான புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன் தேர்வாளர்கள் சென்னை இராணுவ ஆள்சேர்ப்பு அலுவலக தலைமையகத்திற்கு நேரில் வருகை புரிந்து புதிய அனுமதி அட்டை பெற்றுக் கொள்ள வேண்டும் 

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!