Homeசெய்திகள்3 மாவட்ட போலீசை ஏமாற்றி தப்பி வந்த கொள்ளையர்கள்

3 மாவட்ட போலீசை ஏமாற்றி தப்பி வந்த கொள்ளையர்கள்

நகையை கொள்ளையடித்து கொண்டு திருடிய காரில் வந்த கொள்ளையர்கள் 3 மாவட்ட போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு திருவண்ணாமலைக்கு வந்த போது போலீசார் திறம்பட மடக்கிப் பிடித்தனர்.

23 குற்ற வழக்கு

திருவள்ளுர் மாவட்டம், மாகரல் கிராமம், எம்.ஜி.ஆர் தெருவை சேர்ந்தவர் யுவராஜ்(வயது 32). இவருக்கு டேனி, சந்தோஷ் குமார், ராஜ் ஆகிய பெயர்களும் உள்ளன. யுவராஜ், பல்வேறு பகுதிகளில் கொள்ளை, கன்னக்களவு, ஆயுத வழக்கு உள்ளிட்ட 23 குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ள கொடுங் குற்றவாளி ஆவார்.

3 மாவட்ட போலீசை ஏமாற்றி தப்பி வந்த கொள்ளையர்கள்

3 மாவட்ட போலீசை ஏமாற்றி தப்பி வந்த கொள்ளையர்கள்

இவரது மைத்துனர் பாலாஜி (24). சென்னை கொளத்தூர், செல்லியம்மன் நகரைச் சேர்ந்தவர். இவர் மீது 3 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட இருவரும் கடந்த 22.06.2023-ந் தேதி கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு 18 சவரன் தங்க நகை மற்றும் காரை திருடிக் கொண்டு சென்றுள்ளனர்.

அசுர வேகத்தில் பறந்த கார்

பின்னர் கடலூர் மாவட்ட காவல் துறையினர் சேலம் மாவட்டத்தில் பதுங்கி இருந்த இவர்களை பிடிக்க நெருங்கும் போது அங்கிருந்து தப்பினர். போலீசார் பின்னால் துரத்திச் சென்றும் பலனில்லை. இந்நிலையில் இன்று 27ந் தேதி காலையில் கொள்ளையர்கள் தலைவாசல் சுங்கச்சாவடியில் காவல்துறை மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் ஆகியோர் ஏற்படுத்திய தடுப்பை மீறி நிறுத்தாமல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை நோக்கி விரைந்தனர்.

See also  நெகட்டிவ் அதிகாரிகள் யார்? அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

தியாகதுருகம் மற்றும் மணலூர்பேட்டை ஆகிய பகுதிகளில் சாலையில் இக்காரை தடுத்த நிறுத்த போலீசார் வைத்திருந்த இரும்பு தடுப்பான்களையும் பொருட்படுத்தாமல் அசுர வேகத்தில் காரை இயக்கி திருவண்ணாமலையை நோக்கி வந்தனர்.

கார், ஆட்டோ மீது மோதல்

இதையடுத்து கடலூர் மாவட்ட தனிப்படை போலீசார் திருவண்ணாமலை போலீசாரை உஷார் படுத்தினர். திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கி.கார்த்திகேயன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் எம்.குணசேகரன், எஸ்.முருகன் தலைமையில் 2 தனிப்படைகளை அமைத்து கொள்ளையர்களை பிடிக்க உத்தரவிட்டார்.

3 மாவட்ட போலீசை ஏமாற்றி தப்பி வந்த கொள்ளையர்கள்

மாவட்ட எல்லையில் தனிப்படை போலீசார் கொள்ளையர்கள் வந்த காரை பிடிக்க முயற்சித்தனர். போலீசார் ஏற்படுத்தியிருந்த பல தடுப்புகளையும் தாண்டியும், கார், ஆட்டோவை இடித்து தள்ளி விட்டும் கொள்ளையர்களின் கார் மின்னல் வேகத்தில் சென்றது. காரை போலீசார் ஜீப்பில் துரத்திச் சென்றனர்.

திருவண்ணாமலை அக்னி தீர்த்தம் கூட்டுச்சாலையில் கொள்ளையர்கள் வந்த போது சினிமா பட பாணியில் கொள்ளையர்களின் காரின் முன் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் ஜீப்பையும், காரின் பின் பகுதியில் மற்றொரு துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன் ஜீப்பையும் நிறுத்தி கார் மேலே செல்ல முடியாமல் தடுத்தனர்.

See also  1000 பேருடன் அமைச்சர் எ.வ.வேலு தூய்மை பணி

கார் கண்ணாடி உடைப்பு

ஆனால் கொள்ளையர்கள் போலீஸ் ஜீப்பையும் இடித்து விட்டு தப்பியோட முயற்;சி செய்தனர். இதையடுத்து போலீசார் கொள்ளையர்களின் கார் கண்ணாடியை உடைத்து காரின் என்ஜினை நிறுத்தி கொள்ளையர்களை பிடித்து திருவண்ணாமலை நகர காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

பின்னர் 2 கொள்ளையர்களையும், காரையும் கடலூர் மாவட்ட காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

3 மாவட்ட போலீசை ஏமாற்றி தப்பி வந்த கொள்ளையர்கள்

பல்வேறு சவால்களை எதிர் கொண்டு இச்சம்பவத்தில் ஈடுபட்டு திறம்பட கொள்ளையர்களை மடக்கிப் பிடித்து கைது செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் நேரில் சந்தித்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சேசிங் வீடியோ

https://www.facebook.com/100010512168519/videos/1436497637127894/

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!