Homeஅரசியல்மன்னிப்பு கேட்ட கீழ்பென்னாத்தூர் பா.ம.க வேட்பாளர்

மன்னிப்பு கேட்ட கீழ்பென்னாத்தூர் பா.ம.க வேட்பாளர்

மன்னிப்பு கேட்ட கீழ்பென்னாத்தூர் பா.ம.க வேட்பாளர்

தொகுதி மாறி நின்றதற்காக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கூட்டணி கட்சியினரிடத்தில் கீழ்பென்னாத்தூர் தொகுதி பா.ம.க வேட்பாளர் மன்னிப்பு கேட்டார். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி  கீழ்பென்னாத்தூர்¸ வந்தவாசி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் வந்தவாசி பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிடக்கூடிய தனி தொகுதியாகும்.  

பா.ம.கவிற்கு வடக்கு மாவட்டங்களில் செல்வாக்கு உள்ள தொகுதிகளில் கீழ்பென்னாத்தூரும் ஒன்று. இங்கு பா.ம.க சார்பில் போட்டியிட சீட் கேட்டிருந்தவர்களில் முன்னாள் எம்.எல்.ஏ எதிரொலி மணியன்¸ மாநில துணைப் பொதுச் செயலாளர் காளிதாஸ்¸ ஒன்றிய கவுன்சிலர் பக்தவச்சலம் ஆகியோர் முக்கியமானவர்கள். 

இது மட்டுமன்றி அதிமுக சார்பில் இத்தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன்¸ முன்னாள் மாவட்ட செயலாளர் பெருமாள்நகர் ராஜன்¸ முன்னாள் எம்.எல்.ஏ அரங்கநாதன்¸ முன்னாள் தொகுதி செயலாளர் தட்சணாமூர்த்தி¸ ஒன்றிய செயலாளர் தொப்பளான் உள்ளிட்டோரும் சீட் கேட்டிருந்தனர். 

இந்நிலையில் இத்தொகுதி பா.ம.கவிற்கு ஒதுக்கப்பட்டது. யாரும் எதிர்பார்க்காத வகையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா பெருமாள் நாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த செல்வக்குமாருக்கு இத்தொகுதியில் போட்டியிட சீட் வழங்கப்பட்டது. இதனால் பா.ம.க நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதே போல் வந்தவாசியிலும் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முரளி சங்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

See also  ரகசியம் சொல்லவா? திகில் கிளப்பும் சாவல்பூண்டி

கீழ்பென்னாத்தூர் தொகுதியில் திமுகவைச் சேர்ந்த தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏவும்¸ முன்னாள் அமைச்சருமான கு.பிச்சாண்டியை எதிர்த்து செல்வகுமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் பாமக வேட்பாளர் செல்வகுமார் வேட்பாளர் அறிமுக கூட்டம் கீழ்பெனாத்தூரில் நேற்று நடைபெற்றது. அதிமுக மாவட்ட செயலாளர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி மற்றும் கூட்டணி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வேட்பாளரை அறிமுகப்படுத்தி பேசினார்கள். 

வேட்பாளர் செல்வகுமார்

இறுதியில் பாமக வேட்பாளர் செல்வகுமார் பேசினார். அவர் பேசியதாவது.

கீழ்பென்னாத்தூர் தொகுதி மக்களிடம் முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இத் தொகுதியில் தேர்தலில் நிற்கக் கூடிய உரிமை இந்த மண்ணின் மக்களுக்குத் தான் உள்ளது. அதை நான் உணர்கிறேன். இத்தொகுதியில் போட்டியிட அதிமுகவினரும்¸ பாஜகவினரும் விருப்ப மனு அளித்துள்ளனர். உங்கள் உழைப்பில் நான் வந்து நின்று விட்டேன். என் தங்கையை திருவண்ணாமலையில் திருமணம் செய்து கொடுத்துள்ளோம். எனக்கு பெண் எடுத்தது செங்கத்தில்தான். நான் தேர்தலில் போட்டியிட சீட் கேட்கவில்லை. அறிவிப்பு வெளியான 10 நிமிடத்திற்கு முன்தான் எனக்கே தெரிந்தது. இங்கு நிற்பது எனக்கு மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு பிரயாசித்தமாக என்னை வெற்றி பெற வைத்தால் எம்.எல்.ஏ மாதிரி நடந்து கொள்ளாமல் உங்கள் வீட்டு பிள்ளையாக இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார். 

See also  திருவண்ணாமலையில் முக்கிய இடத்தில் கருணாநிதிக்கு சிலை

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ எதிரொலி மணியன்¸ பா.ம.க மாநில துணைப் பொதுச் செயலாளர் காளிதாஸ்¸ ஒன்றிய கவுன்சிலர் பக்தவச்சலம்¸ முன்னாள் எம்.எல்.ஏ அரங்கநாதன்¸ அதிமுக முன்னாள் தொகுதி செயலாளர் தட்சணாமூர்த்தி¸ ஒன்றிய அதிமுக செயலாளர் தொப்பளான் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!