Homeஅரசு அறிவிப்புகள்வாக்குகளை விற்க கூடாது - கலெக்டர் வேண்டுகோள்

வாக்குகளை விற்க கூடாது – கலெக்டர் வேண்டுகோள்

ஓட்டை விக்காதீங்க-கலெக்டர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள்

இளம் வாக்காளர் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்றும்¸ வாக்குகளை யாரும் விற்க கூடாது என்றும் கலெக்டர் சந்தீப் நந்தூரி கேட்டுக் கொண்டார். 

விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம்¸ வந்தவாசி அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி மாணவிகளிடம் 100 சதவீத வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.  நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில்¸ திட்ட இயக்குநர்¸ மகளிர் திட்டம் பெ.சந்திரா¸ துணை ஆட்சியர் (பயிற்சி) அஜிதா பேகம்¸ மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சி.கீதாலட்சுமி¸ மற்றும் கல்லூரி பேராசிரியர்கள்¸ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

வண்ண கோலம்

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரியை சோர்ந்த நூற்றுக்கணக்கான மாணவிகள் கலந்து கொண்டனர். மகளிர் குழுக்கள் மூலம் போடப்பட்ட 100 சதவீத வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வண்ண கோலத்தை பார்வையிட்டு¸ 100 சதவீதவாக்களிப்பதன் அவசியம் குறித்து இளம் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு இயக்கத்தில் கைவிரல் பதிவு மற்றும் கையெழுத்து இயக்க பலகையில் மாவட்ட ஆட்சித்தலைவர்  கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். 

See also  தங்குமிடம்¸ சத்தான உணவுடன் விளையாட்டு பயிற்சி

ஓட்டை விக்காதீங்க-கலெக்டர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள்

விற்க கூடாது

மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில் இளம் வாக்காளர் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் வாக்குகளை யாரும் விற்க கூடாது என்று கேட்டுக் கொண்டார். 100 சதவீத வாக்களிப்பதன் அவசியம் மற்றும் ஜனநாயக கடமை குறித்தும் முதல் முறை வாக்களிக்கும் இளம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி¸ சட்டமன்ற பொதுத்தேர்தல்-2021 வாக்குப்பதிவு நாள் 06.04.2021 அன்று மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் (EVM) மற்றும் வாக்காளர்கள் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவி (VVPAT) மூலம் வாக்காளர்கள் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த செயல்விளக்கம் அளித்தார்.

கலைநிகழ்ச்சி

முன்னதாக¸ கல்லூரி மாணவிகளின் பாரம்பரிய  பரதநாட்டியம்¸ சிலம்பாட்டம் மற்றும் தேர்தல் விழிப்புணர்வு குறித்த நாடகம் உட்பட பல்வேறு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!