திருவண்ணாமலையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு பெண்களுக்கு விவசாயிகள் பாத பூஜை செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் நுழைவாயில் முன்பு இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விவசாயிகள் பெண்களை போற்றும் விதமாக உறுதி ஏற்பு மற்றும் மகளிருக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பாதங்களை கழுவி
என்.ஆர்.எம். உழவர் பேரவை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் வாக்கடை புருஷோத்தமன் தலைமை தாங்கினார். இதில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். அப்போது 6 பெண்களை வரிசையாக நிற்க வைத்து அவர்களின் பாதங்களை தண்ணீரால் கழுவி பால்¸ பன்னீர் போன்றவை ஊற்றி மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதை அங்கு வந்த பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து மகளிர் தினத்தில் பெண்களை போற்றிய விவசாயிகளை பாராட்டி விட்டு சென்றனர்.
இது குறித்து மாவட்டத் தலைவர் வாக்கடை புருஷோத்தமன் கூறியதாவது¸
தேர்தல் அறிக்கை
கிராம பொருளாதாரம் மற்றும் வேளாண் உற்பத்தியில் பெண்களின் பங்களிப்பே அதிகம். பெண்கள் பங்கேற்கும் நூறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடந்து வருகிறது. விவசாய பணிகளுக்கு ஆட்களும் கிடைப்பதில்லை. விளை பொருட்களுக்கும் உரிய விலை இல்லை. எனவே ஒவ்வொருவரது வங்கி கணக்கிலும் ரூ.25ஆயிரத்தி 600 செலுத்திட வேண்டும். கிராமப்புற பொருளாதாரம் உயர பயோ கியாஸ்¸ பயோ பெட்ரோல்¸ பயோ டீசல் தயாரித்து மலிவு விலையில் வழங்க வேண்டும். வேளாண் பொருட்களுக்கு மதிப்புக்கூட்ட தனியார் முதலீடுகளை அதிகப்படுத்தி ஆலைகள் உருவாக்க வேண்டும். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நடைபெறும் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் அறிக்கையாக இதனை வெளியிட வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
பிறகு மகளிர் மீதான கடன் சுமை¸ கொடுமைகளுக்கு தீர்வு காணும் அரசியல் கட்சிகளுக்கே வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்றனர்.
——————————————————–
மகளிர் தினம் ஒரு பார்வை…
உள்ளாட்சி பதவிகளில் 3873 பேர்
2019 டிசம்பர் மாதம் நடந்த முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 3873 பெண்கள் பதவியில் இருந்து வருகின்றனர். இது கிட்டத்தட்ட 60 சதவீதமாகும்.
34 மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் பதவிகளில் 21 பேர்¸ 341 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளில் 206 பேர்¸ 6207 கிராம ஊராட்சி பதவிகளில் 3646 பேர் என 3873 மகளிர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். எங்களால் எந்த சாதனையையும் செய்ய முடியவில்லை. காரணம் உரிய நிதி அரசு ஒதுக்கி தருவதில்லை என மகளிர் தினத்தில் அவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. சில பெண்கள்¸ அரசின் பாராமுகத்தால் ஏன் தேர்தலில் நின்றோம் என வேதனைபடுகிறோம் என தெரிவித்தனர்.
மாவட்டத்திற்கு விருது
பெண் குழந்தைகள் காப்போம்¸ பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தினை சிறப்பான முறையில் செயல்படுத்தியதற்காக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
மகளிர் சக்தி விருது
மகளிருக்கான சுகாதாரம்¸ ஆற்றுப்படுத்தல்¸ சட்ட உதவி¸ விழிப்புணர்வு¸ கல்வி¸ பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் குறிப்பிட்ட பங்களிப்பு¸ பெண்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகள்¸ வன்முறை¸ பெண்கள் மற்றும் குழந்தைகள் பாகுபாடு¸ துன்புறுத்துதல்¸ பெண் குழந்தை பாலின விகிதத்தில் முன்னேற்றம் போன்றவற்றில் தலை சிறந்த பங்களிப்பு சேவை புரிந்த பெண்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் பொருட்டு மகளிர் சக்தி விருது அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
கேக் வெட்டி கொண்டாட்டம்
விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளி மற்றும் விக்னேஷ் மெட்ரிக் பள்ளிகளின் சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் பள்ளியின் நிர்வாகி டி.எஸ்.சவிதா¸ பள்ளியின் முதல்வர் சி.சிவக்குமார் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் டி.ஏன்ஜலின் திருமறைச்செல்வி மற்றும் ஆசிரியைகள் கேக் வெட்டியும்¸ இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
மகளிர் தின மீம்ஸ்
சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள் வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி உள்ள நிலையில் மீம்ஸ்களுக்கும் பஞ்சமில்லை. அதில் சில…