Homeஅரசு அறிவிப்புகள்கொரோனா தடுப்பூசி போடுவதற்கான வழிமுறைகள்

கொரோனா தடுப்பூசி போடுவதற்கான வழிமுறைகள்

கொரோனா தடுப்பூசி போடுவதற்கான வழிமுறைகள்

கொரோனா தடுப்பூசி போட விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்து கொண்டு  அடையாள அட்டையை எடுத்து வர வேண்டும் – கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு 

திருவண்ணாமலை மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கொரானோ தடுப்பூசி ஒரு மாத இடைவெளியில் இரு தவணைகளாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படுகிறது.

இது குறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியிருப்பதாவது¸

கடந்த ஆண்டு மார்ச் 2020 முதல் கொரானோ வைரஸ் நாடு முழுவதும் வேகமாகப் பரவியது.  அதனால் மக்களை நோயிலிருந்து காக்கும் பொருட்டு தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே நோயின் தாக்கம் குறைந்து வருவதால் பொது மக்களுக்கு உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கில் கொரானோ தடுப்பூசி பொது மக்களுக்கு வழங்க மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

See also  வேலை வாய்ப்பு பெற இளைஞர்களுக்கு வாய்ப்பு

கொரானோ தடுப்பூசி பெறுவதற்காக 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோய்(ரத்த கொதிப்பு¸ சர்க்கரை நோய்¸ இருதய நோய் உள்ளிட்டவை) உள்ளவர்கள் இணையதளத்திலும் மற்றும் ஆரோக்கிய சேது 2.0 எனும் செயலி வாயிலாகவும் முன்பதிவு மேற்கொள்ளலாம். முன்பதிவிற்கு பின்வரும் ஏதேனும் ஒரு அடையாள அட்டை அவசியமாகும்.

ஆதார் அட்டை¸ வாக்காளர் அடையாள அட்டை¸ பான் கார்டு¸ ஓட்டுநர் உரிமம்¸  ஓய்வூதிய பாஸ்புத்தகம்¸ என்.பி.ஆர் ஸ்மார்ட் கார்டு¸ பாஸ்போர்ட் ஆகியவை கொண்டு வர வேண்டும்.

முன்பதிவு செய்யும்பொழுது கைபேசி எண் தெரிவித்து அதன்படி வரப்பெறும் 6 இலக்க குறியீட்டு எண்ணை உள்ளீடு செய்து மேற்குறிப்பிட்ட ஏதேனும் ஒன்றின் விவரம்¸ பெயர். பாலினம். மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றினை பதிவேற்றம் செய்யவேண்டும். அதன் பின்னர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான தேதி¸ இடம். நேரம் ஆகியவற்றினை செயலி வழியாக குறுந்தகவல் அனுப்பப்படும். பதிவு செய்யப்பட்டவர்களில் முன்னுரிமை அடிப்படையில் கொரானோ தடுப்பூசி செலுத்தப்படும்.

See also  தனியார் முகாம்:அரசு வேலை ரத்தாகாது-கலெக்டர்

ஒரு கைபேசி எண் மூலமாக அதிகபட்சமாக 4 பேருக்கு முன்பதிவு செய்ய இயலும் மற்றும் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்ய இயலாதவர்கள் சம்மந்தப்பட்ட மருத்தவமனைகளுக்கு நேரில் சென்று அங்குள்ள சுகாதாரப் பணியாளர்கள் மூலமாக பதிவு செய்து கொரானோ தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். கொரானோ தடுப்பூசி செலுத்த வரும்போது முன்பதிவில் அளிக்கப்பட்ட விவரத்தின் அடையாள அட்டையின் அசலுடன் வரவேண்டும்.

கொரோனா தடுப்பூசி போடுவதற்கான வழிமுறைகள்

இதற்காக. திருவண்ணாமலை மாவட்டத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கீழ்பென்னாத்தூர்¸ காட்டாம்பூண்டி¸ சே.கூடலூர்¸ காரப்பட்டு¸ கடலாடி¸ ஜமுனாமரத்தூர்¸ களம்பூர்¸ கொம்மனந்தல்¸ மங்கலம்¸ திருவண்ணாமலை மத்திய நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம்¸தெள்ளார், தச்சூர்¸ நாவல்பாக்கம்¸ பெரணமல்லூர்¸ ஆக்கூர்¸ பெருங்கட்டுர்¸ எஸ்.வி.நகரம்¸ வழுர் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களிலும்¸ செங்கம்¸ போளுர்¸ ஆரணி மற்றும் வந்தவாசி ஆகிய அரசு மருத்துவமனைகளிலும்¸ செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை¸ திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் இலவசமாக போடப்படுகிறது. 

அத்தியந்தல் ரமண மகரிஷி ரங்கம்மாள் மருத்துவமனை¸ கிரேஸ் மருத்துவமனை¸ ராஜ் மருத்துவமனை¸ புனித தாமஸ் மருத்துவமனை¸ சேத்பட்டு ஆகிய தனியார் மருத்துவமனைகளிலும் கொரானோ தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 28இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் ஒரு தவணைக்கு ரூ.250 கட்டணம் செலுத்த வேண்டும்.

See also  ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!