Homeஅரசு அறிவிப்புகள்ஆவணங்கள் இல்லாத பணம்-பொருட்கள் பறிமுதல்

ஆவணங்கள் இல்லாத பணம்-பொருட்கள் பறிமுதல்

ஆவணங்கள் இல்லாத பணம்-பொருட்கள் பறிமுதல்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் இருப்பதால் ஆவணங்களின்றி பணம்¸ பொருட்கள் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும் என கலெக்டர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ஆய்வுக் கூட்டம் 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (27.02.2021) இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில்¸ கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார்¸ அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள்¸ அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது¸

ஏற்பாடுகள் தயார் 

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி¸ திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. திருவண்ணாமலையில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் ஏற்கனவே 2372 வாக்குசாவடிகள் உள்ளன. தற்போது தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 1050 வாக்குகளுக்கு மேல் உள்ள 513 கூடுதல் வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2885 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. இதில் கூடுதலாக அமைக்கப்பட்டு வரும் வாக்குசாவடிகளுக்கு தேவையான கட்டிடம் வசதி¸ அடிப்படை வசதி¸ சாலை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் ஒரு வாரத்தில் முடிக்கப்படும்.

See also  உள்ளங்கையில் திருவண்ணாமலை மாவட்ட நிலவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் தேதி அறிவித்த நாளிலிருந்து வாக்கு எண்ணிக்கை முடிந்து¸ இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடைபிடிக்கப்படும். 

24 மணி நேரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கண்காணிப்பதற்கு¸ ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும் படை குழு¸ 3 நிலையான கண்காணிப்பு குழு நியிமிக்கப்பட்டு¸ 24 மணி நேரம் மூன்று ஷிப்ட் அடிப்படையில் பணியாற்றுவார்கள். மேலும்¸ 24 மணி நேரம் செயல்படும் வீடியோ கண்காணிப்புக் குழு¸ வீடியோ பார்க்கும் குழு¸ தேர்தல் செலவின குழு ஆகிய குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவில்¸ ஒரு மாஜிஸ்திரேட்¸ காவல் பணியாளர்கள்¸ வீடியோகிராபருட்ன் ஜிபிஎஸ் கருவி பொறுத்தப்பட்ட வாகனத்துடன் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். இக்குழுவினர் இன்று இரவு முதல் உடனடியாக தங்கள் பணிகளை மேற்கொள்வார்கள்.

வருவான வரித்துறை

தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி பணம் பொருட்கள் எடுத்துச் செல்பவர்கள் மேற்கண்ட குழுக்கள் மூலம் கண்காணிக்கப்படுவார்கள். இதன்படி ஆவணங்கள் இன்றி ரொக்கம் ரூ.50ஆயிரத்திற்கு மேலும்¸ பொருட்கள் ரூ.10ஆயிரத்திற்கு மேலும் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்பட்டு¸ மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்படும் தேர்தல் செலவின குழுவினரிடம் ஒப்படைக்கப்படும். சம்மந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணம்¸ பொருட்களை மீண்டும் பெற்றுக் கொள்ளலாம். மேலும்¸ ரூ.10 லட்சத்திற்கு மேல் பறிமுதல் செய்யப்படும் ரொக்கம் வருவான வரித்துறையிடம் ஒப்படைக்கப்படும்.

See also  தனியார் முகாம்:அரசு வேலை ரத்தாகாது-கலெக்டர்

கட்டுபாட்டு அறை 

தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் cVIGIL என்ற கைபேசி செயலியை அறிமுக்கப்படுத்தி உள்ளது. இந்த செயலியை தங்கள் கைபேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டு¸ தேர்தல் தொடர்பான புகார்களை மனுவாக¸ புகைப்படம்¸ வீடியோ எடுத்து ஸ்பாட் புகார் அளிக்கலாம். இப்புகார்கள் தொடர்பாக அருகில் உள்ள பறக்கும் படை குழு அல்லது நிலை கண்காணிப்புக் குழுவினர் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும்¸ பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேரம் செயல்பட்டு வரும் 1950 என்ற கட்டுபாட்டு அறை எண்ணிற்கு தொடர்பு கொண்டும் தகவல் தெரிவிக்கலாம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது வரை பதற்றமான 170 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது. மேலும்¸ இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் 56¸000 புதிய வாக்காளாக்ளுக்கு புகைப்படத்துடன் கூடிய வண்ண அடையாள அட்டை தபால் துறை மூலம் ஒரு வாரத்தில் விநியோக்கிக்கப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி நியாயமான¸ மென்மையான முறையில் தேர்தல் நடத்துவதற்கு பொதுமக்கள்¸ அரசியல் கட்சிகள்¸ வேட்பாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் 

See also  சப்-இன்ஸ்பெக்டர் பணியிடத்திற்கான போட்டித் தேர்வு

இவ்வாறு அவர் கூறினார்.

ஆவணங்கள் இல்லாத பணம்-பொருட்கள் பறிமுதல்

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உலக பிரிசித்த பெற்ற ஆரணி பட்டு சேலையில்¸ அத்திமலைப்பட்டு பட்டு நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் மூலம் தயாரிக்கப்பட்ட இந்திய தேர்தல் ஆணையத்தின் லோகோ பொறிக்கப்பட்ட பட்டு சேலையை வெளியிட்டார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!