Homeஅரசு அறிவிப்புகள்தனியார் முகாம்:அரசு வேலை ரத்தாகாது-கலெக்டர்

தனியார் முகாம்:அரசு வேலை ரத்தாகாது-கலெக்டர்

தனியார் முகாம்-அரசு வேலை ரத்தாகாது-கலெக்டர்
கலெக்டர் சந்தீப் நந்தூரி

100க்கும் மேற்பட்ட கம்பெனிகள் கலந்து கொள்ளும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில்  அச்சமின்றி இளைஞர்கள் பங்கேற்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற செய்யாறில் வருகிற 20ந் தேதி நடக்கும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டால் அரசு வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது என கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார். 

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம்¸ மாவட்ட  வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் செய்யாறு¸ அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி ஆகியவை இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. 

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்; சார்பாக படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கல்வித் தகுதிகளுக்கு ஏற்ப வேலை வாய்ப்பை பெற்றுத்தரும் நோக்குடன் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 20.02.2021 (சனிக்கிழமை) காலை 9 மணி அளவில் அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி¸ செய்யாறில் நடைபெற உள்ளது. 

தனியார் முகாம்-அரசு வேலை ரத்தாகாது-கலெக்டர்

See also  பிரதமர் திட்டத்தில் முறைகேடு: தி.மலை கலெக்டர் கெடு

இம்முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்திருப்பதாவது¸ 

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒரு இலவசப்பணியே ஆகும். இதன் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத் துறைகளுக்கு அவர்களது பதிவு மூப்பின்படி அரசு பணிக்கு பரிந்துரைக்கப்படும். எனவே¸ வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்கள் தனியார் துறையில் வேலைக்கு சென்றால் தங்களது பதிவு ரத்து செய்யப்பட்டு விடுமோ என்று அச்சப்பட வேண்டியதில்லை.

இம்முகாமில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை¸ ஐ.டி.ஐ.¸ பாலிடெக்னிக்¸ பி.இ.¸பி.டெக்¸நர்சிங் கல்வித் தகுதியுடையவர்கள்  கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாம் அன்று தங்களுடைய 4 பாஸ்போர்ட் சைஸ்  புகைப்படம்¸ குடும்ப அட்டை¸ சாதிச்சான்று¸ கல்வி தகுதி சான்றிதழ்களின் நகலுடன் முகாமில் கலந்துகொள்ள வேண்டும். முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ள வேண்டும.; 

See also  தடுத்து நிறுத்தப்பட்ட 228 பெண் குழந்தைகள் திருமணம்

மேலும் விபரங்களுக்கு 04175 – 233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு  அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு¸ விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். 

இதே போல் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 1088 நபர்களுக்கு பணி நியமண உத்தரவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!