Homeசெய்திகள்இறந்த குரங்கிற்கு இறுதி சடங்கு செய்த கிராம மக்கள்

இறந்த குரங்கிற்கு இறுதி சடங்கு செய்த கிராம மக்கள்

இறந்த குரங்கிற்கு இறுதி சடங்கு செய்த கிராம மக்கள்

திருவண்ணாமலை அருகே மனிதர்களைப் போல இறந்து குரங்கிற்கு ஈம சடங்கு செய்து கிராம மக்கள் அடக்கம் செய்தனர்.          

குரங்குகளின் கடவுளாக அனுமனை மக்கள் வணங்கி வருகின்றனர். இன்றைக்கும் திருவண்ணாமலை மணலூர்பேட்டை ரோடு¸ காஞ்சி ரோடு ஆகிய பகுதிகளில் ரோட்டின் ஓரம் காத்திருக்கும் குரங்களுக்கு மக்கள் பழங்களை அளிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். குரங்கு இறந்து விட்டால் அந்த இடத்தில் அனுமன் கோயிலை கட்டும் பழக்கம் இருந்து வருகிறது. 

திருவண்ணாமலை தாளகிரிஅய்யர் தெருவில் குரங்கு இறந்த இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட்டு மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். மேலும் திருவண்ணாமலை மாவட்டம் களம்பூரில் 23 அடி உயர வீர ஆஞ்சநேயர் சிலை உள்ள கோயிலில் இறந்து போன குரங்கிற்கு சமாதி கட்டியுள்ளனர். பல கிராமங்களில் குரங்கு இறந்து விட்டால் மனிதர்களுக்கு செய்வது போல் இறுதி சடங்கு செய்து புதைக்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. 

திருவண்ணாமலை அடுத்த தச்சம்பட்டு கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள அரசமரத்தில் பல ஆண்டு காலமாக 50க்கும் மேற்பட்ட குரங்குகள் வாழ்ந்து வருகின்றன. பகல் நேரங்களில் உணவுக்காக வெளியில் சென்று விடும் இக்குரங்குகள் இரவு மாலை நேரத்தில் மரத்திற்கு திரும்ப வந்து விடும். 

See also  மருத்துவ படிப்பு:அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்று

யாருக்கும் எந்தவித இடையூறும் செய்யாத அந்த குரங்குகளுக்கு அப்பகுதி மக்களும் உணவு அளித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை  முத்துமாரியம்மன் கோவிலுக்கு சென்றவர்கள் கோவிலுக்குள் குரங்கு ஒன்று இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

அதன் அருகே மற்ற குரங்குகள் சோகத்துடன் உலவிக் கொண்டிருந்தன. நோய் காரணமாக குரங்கு இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. 

இறந்த குரங்கிற்கு இறுதி சடங்கு செய்த கிராம மக்கள்

இதையடுத்து அப்பகுதி மக்கள் ஒன்று கூடி மனிதர்களுக்கு செய்வதுபோல் இறந்த குரங்கிற்கும் மாலை அணிவித்து பொட்டு வைத்து¸ சந்தனம்¸குங்குமம்¸ ஊதுபத்தி¸ தேங்காய்¸ பழம்¸ பூ வைத்து ஈமச்சடங்கு செய்தனர்.

பிறகு அந்த கோவில் வளாகத்திலேயே குரங்கை அடக்கம் செய்தனர். குரங்கை அடக்கம் செய்த இடத்தில் புதிதாக ஆஞ்சநேயர் கோயில் கட்ட உள்ளதாக கோவில் தர்மகர்த்தா முருகன்¸ முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குப்புசாமி ஆகியோர் தெரிவித்தனர்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!