Homeசெய்திகள்கிரிவலப்பாதையில் அசைவ உணவு- எ.வ.வேலு கருத்து

கிரிவலப்பாதையில் அசைவ உணவு- எ.வ.வேலு கருத்து

கிரிவலப்பாதையில் அசைவ உணவு கடைகளை கடைகாரர்களே விருப்பப்பட்டு எடுக்கலாமே தவிர அரசாங்கம், அதிகாரத்தை பயன்படுத்தி நேரடியாக போய் இந்த உணவை சமைக்க கூடாது என சொல்வது பொருத்தமாக இருக்காது என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

திருவண்ணாமலையில் 10 நாட்கள் கார்த்திகை தீபத் திருவிழா முடிந்த பிறகு 3 நாட்கள் தெப்பல உற்சவம் அய்யங்குளத்தில் நடைபெறும். மேலும் அண்ணாமலையார் தீர்த்தவாரியும் இங்குதான் நடைபெறும்.

இந்த அய்யங்குளம் 80 வருடங்களுக்குப் பிறகு இப்போது தூர்வாரப்படுகிறது. அமைச்சர் எ.வ.வேலுவின் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இந்த குளம் தூர்வாரப்பட்டு வருகிறது. தூய்மை அருணை அமைப்பு இப்பணிகளை மேற்கொள்கிறது.

இந்த பணிகளை அமைச்சர் எ.வ.வேலு இன்று காலை பார்வையிட்டார்.

அப்போது அவர் கூறிய தகவல்

ரமணமகரிஷி நீராடினார்

அய்யங்குளம் திருவண்ணாமலை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. 1896ல் அய்யங்குளம் குளக்கரையில், மகான் ரமணமகரிஷி அவர்கள் முதன்முதலில் திருவண்ணாமலைக்கு வந்தபோது அய்யங்குளத்தில் நீராடினார் என ஆன்மீக மக்களால் கருதப்படுகிறது.

இந்த குளம். கார்த்திகை மாதத் தீபத் திருவிழா நிறைவு பெற்ற பின், அண்ணாமலையார் தெப்ப உற்சவம் ஆகியவை இக்குளத்தில் நடைபெறும். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு இக்குளக்கரைக்கு வருகிறார்கள். இந்தக் குளமானது 3 ஏக்கர் பரப்பளவில், 360 அடி நீளமும், 360அடி அகலமும், 32 அடி ஆழமும் மற்றும் அலங்கார படிகட்டுகளுடன் கூடிய, 32 படிகள் உள்ளது.

See also  மாணவர்களிடையே தகராறு-பஸ் சிறைபிடிப்பு

நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது

இக்குளம் காலத்தால் மிகப் பழமையானது. நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. இந்த குளமானது, நீண்ட காலமாக போதிய பராமரிப்பு இல்லாததால், குளத்தின் ஆழம் 32 அடியில் இருந்து 16 அடியாக சேரும் சகதியுமாக தூர்ந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்த குளத்தில் தீர்த்தவாரி நடந்தபோது நெரிசலில், குளத்தில் மூழ்கி, சேற்றில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இக்குளத்தினை சீரமைக்க பொதுமக்கள் மற்றும் ஆன்மீக பக்தர்கள் எனது கவனத்திற்கு கொண்டு வந்தனர், 2021 தேர்தலின் போது, அய்யங்குளம் குளத்தினை சீரமைப்பேன் என்ற ஒரு வாக்குறுதியும் நான் அளித்திருந்தேன். 25.6.2023 அன்று நான் நேரில் சென்று, குளத்தினை ஆய்வு செய்தேன். இந்த ஆய்வின் போது தூய்மை அருணை இயக்கத்தினரும் கலந்து கொண்டனர்.

2017ஆம் ஆண்டு முதல் தூய்மை அருணை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு திருவண்ணாமலை நகரினை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், 40 பகுதியாக பிரித்து, 4 பேர் கொண்ட மேற்பார்வையாளர்கள் தலைமையில் 40 அமைப்பாளர்கள், வார்டுக்கு 25 பேர் வீதம், 1000 தூய்மைக் காவலர்கள் கொண்டு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும், நகர் முழுவதும் சுகாதாரப் பணிகள், கழிவுநீர் கால்வாய்கள் சுத்தப்படுத்துதல், மரக்கன்றுகள் நடுதல் போன்ற மேற்கொண்டு வருகிறார்கள்.

See also  சப்-இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு தீ வைத்த கள்ளக்காதலி

அக்டோபர் மாத இறுதிக்குள் முடிவடையும்

இக்குளத்தில் தூர் வாரும் பணி, சரிந்துள்ள படிகட்டுகளை நிலை நிறுத்தும் பணி, படிகட்டுகளுக்கு கைப்பிடி அமைத்தல் போன்ற பணிகளை தூய்மை அருணை சார்பில் பணிகள் மேற்கொள்ளலாம் என தீர்மானித்தோம். அடிப்படையில், தற்போது தூய்மை அருணை சார்பில் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இப்பணிகள் அனைத்தும் அக்டோபர் மாத இறுதிக்குள் முடித்து, பொது மக்கள் மற்றும் ஆன்மீக பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர விரைவாக நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

கிரிவலப்பாதையில் அசைவ உணவுகளுக்கு அனுமதி கிடையாது என கவர்னர் ரவி கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது,

உணவு என்பது அவரவர்கள் விருப்பத்திற்குரியது. இந்த உணவுதான் சாப்பிட வேண்டும், அந்த உணவு தான் சாப்பிட வேண்டும் என கட்டுப்படுத்த முடியாது. இந்த ஊரில் அதிகமான ஆன்மீக மக்கள் வருகிறார்கள் இதை விரும்ப மாட்டார்கள் என உணவுக் கடைக்காரர்கள் இது தேவையில்லை என உணர்ந்து அவர்களாகவே கடையை எடுக்கலாமே தவிர அரசாங்கம், அதிகாரத்தை பயன்படுத்தி நேரடியாக போய் இந்த உணவை சமைக்க கூடாது என சொல்வது பொருத்தமாக இருக்காது.
உணவு சாப்பிடுவது தனி மனித உரிமை

See also  ரமணாசிரமம் குறித்து போலீசில் பெண் பக்தர் புகார்

இது ஆன்மீக ஊர் என்பதால் அவர்களாக(கடைகாரர்கள்) எடுத்தால் அவர்களுக்கு எனது நன்றி. பவுர்ணமி தினத்தில் அசைவ கடைகளை யாரும் வைப்பது கிடையாது. மீதி நாட்களில் சில பேர் விரும்புகிறார்கள். ஒரு கடையில் வியாபாரம் நடக்கிறது என்றால் யாரோ விரும்புகிற காரணத்தால் தானே வியாபாரம் நடக்கும். உணவு பழக்க வழக்கம், உணவு சாப்பிடுவது என்பது தனி மனித உரிமை. இதை சாப்பிடணும், கடையை எடுக்கணும் என நான் எப்படி சொல்ல முடியும்? இது விமர்சனத்தை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

முன்னதாக அவர் கூறுகையில் அய்யங்குளத்தின் நடுவில் உள்ள மண்டபம் சீரமைக்கப்பட்டு நந்தி சிலை வைக்கப்படும், இந்த நந்தி சிலை தயாராகிக் கொண்டிருக்கிறது என்றார்.

அமைச்சருடன், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பா.முருகேஷ், அண்ணாதுரை எம்.பி, எ.வ.வே.கம்பன், இரா.ஸ்ரீதரன், கார்த்தி வேல்மாறன் மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சென்றிருந்தனர்.


 https://youtube.com/@AgniMurasu

 திருவண்ணாமலை செய்திகள்

 Tiruvannamalai Agnimurasu

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!