Homeஆன்மீகம்தீ மிதித்தால் குழந்தை பாக்கியம் தரும் திரௌபதியம்மன்

தீ மிதித்தால் குழந்தை பாக்கியம் தரும் திரௌபதியம்மன்

தீ மிதித்தால் குழந்தை பாக்கியம் தரும் திரௌபதியம்மன்

திருவண்ணாமலை மாவட்டம் போளுர் தாலுக்காவுக்கு உட்பட்ட ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள கேளுர் சித்தேரி கிராமத்தில் கண்கவர் கலைநயம்மிக்க சுதை சிற்பங்களுடன் இராமயண காலத்தில் கட்டப்பட்ட கோயில் உள்ளது. இங்கு ஒரே கருவறையில் கிழக்கு பார்த்து அமர்ந்தவாறு தருமராஜவும் அவருக்கு முன் நின்ற கோலத்தில் திரௌபதியம்மனும் (பாஞ்சாலி) அருள்பாலிக்கிறார்கள். 

அக்னி வசந்த விழா

இவர்கள் இருவரையும் வணங்கி ஆண்டுதோறும் 31 நாட்கள் நடைபெறும் அக்னி வசந்தவிழாவின் போது நடைபெறும் தீமிதி விழாவில் கலந்துக்கொண்டு குழந்தைப்பாக்கியம் இல்லாத தம்பதிகள் தீ மிதித்தால் (குண்டம்) நிச்சயம் குழந்தைப்பாக்கியம் கிடைக்கும் என்பது சுற்றுவட்டார கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது. 

கடன் பிரச்சனை தீர

பிரார்த்தனை நிறைவேறியதும் அடுத்த ஆண்டு வரும் அக்னி வசந்த விழாவில் மழலைச் செல்வத்துடன் தம்பதிகள் கலந்துக்கொண்டு திரௌபதியம்மனுக்கும் தருமராஜாவுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து புதுவஸ்திரம் சாத்துக்கின்றனர். திருமணமாகாத ஆண் மற்றும் பெண்களும் இதில் பங்கேற்கின்றனர். மேலும் விவசாயம் செழிக்கவும், விளைச்சல் பெறுகவும்,கால்நடைகள் நோயின்றி வாழவும்,கல்வியில்  சிறக்கவும், கடன் பிரச்சனைகள் தீரவும் அம்மனை வழிபடுகின்றனர். 

See also  17வது மாதமாக திருவண்ணாமலை கிரிவலத்திற்கு தடை

பாஞ்சால நாட்டு இளவரசி

திரௌபதி அக்னியில் பிறந்தால் என்பதால் யாகசேனி என்றும் கரியநிறம் என்பதால் கிருஷ்ணை என்றும் பாஞ்சாலநாட்டு இளவரசி என்பதால் இளவரசி என்றும் அழைப்படுகிறார். 

12 ஆண்டுகள் வனவாசம்

மகாபாரத காலத்தில் கவுரவர்களுடன் ஆடிய சூதாட்டத்தில் சகுனியின் தந்திரத்தால் தருமர் தனது நாடு¸ படை¸ செல்வங்கள் சகோதர்களையும் மற்றம் திரௌபதியும் இழந்தார். துச்சாதனன் திரௌபதியும் நீண்ட கூந்தலை கையால் பிடித்து வலுகட்டாயமாக அத்தினாபுரம் அரண்மனைக்கு இழுத்துவந்து துகிலுரித்தபோது தனது பலத்தால் போராடாமல் ஹரி ஹரி என கிருஷ்ணனை அழைத்தால். கதறி அழுத பாஞ்சாலியின் குரல் கேட்டு கிருஷ்ணன் திரௌபதியின் துகிலை (சேலை) தொடர்ந்து வளரச்செய்து மானம் காத்தார். இந்த அவமானத்திற்காக துச்சாதனனின் நெஞ்சைப்பிளந்து குருதியை (ரத்தம்) தன் கூந்தலில் பூசும் வரை தன் கூந்தலை முடியமாட்டேன் என்று சபதம் ஏற்றாள். 

அத்தினாபுரத்தின் அரசவையில் சூதில் தோற்ற தருமர் திரௌபதிக்கு நேர்ந்த அவமானத்துடன் 12 ஆண்டுகள் வனவாசம் சென்றார். கேளுர் சித்தேரி அருகே உள்ள வடமாதி மங்கலம், குன்னத்தூர் ஆகிய ஊர்களில் அர்ச்சுணனுக்கும், சகாதேவனுக்கும் கோயில்கள் உள்ளதும், தருமர் பூஜித்து வழிப்பட்ட தருமலிங்கேஸ்வரர் கோவில் ஆத்துவாம்பாடி கிராமத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவில் அனைத்தும் பஞ்பாண்டவர்கள் வனவாசத்தின் போது மறைந்து வாழ்ந்த காலத்தில் கட்டப்பட்டுள்ளது என கல்வெட்டு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. 

தீ மிதித்தால் குழந்தை பாக்கியம் தரும் திரௌபதியம்மன்
தீ மிதித்தால் குழந்தை பாக்கியம் தரும் திரௌபதியம்மன்

திருவிழாக்கள்

See also  முதன்முறையாக ஈசான்யத்தில் விடிய விடிய சிவராத்திரி விழா

ஆண்டுதோறும் 31 நாட்கள் நடைபெறும் அக்னி வசந்தவிழாவில் மகாபாரத சொற்பொழிவும் துரியன் படுகளமும், தீமிதி விழாவும், தருமர் பட்டாபிஷேகமும் நடைபெறும். இதனை காண சுற்றுவட்டார கிராமங்களான ஆத்துவம்பாடி, துரிஞ்சிக்குப்பம், கட்டுப்பூண்டி, கம்மனந்தல், விளக்கனந்தல், விளாங்குப்பம், தேப்பனந்தல், அனைபேட்டை, கல்வாசல் என 30க்கு மேற்பட்ட கிராமங்களிலிருந்து மக்கள் வந்து கலந்துக்கொள்வார்கள். வேலை தேடி வெளியூர் மற்றும் வெளிநாடு சென்றவர்களும் அவ்விழாவில் திரளாக வந்து கலந்துக்கொண்டு தங்கள் வேண்டுதல் நிறைவேற தீ மிதிக்கின்றனர்.  

திருப்பணி

இத்தகைய பழமையான கோவில் முன்மண்டபம் கட்டுமானப்பணிகள்  சுமார் ரூ.1 கோடி செலவில் நடந்து வருகிறது. இதற்கு பொருளுதவியோ அல்லது பணவுதவியோ தந்து தருமராஜவுடன் அருள்பாலிக்கும் திரௌபதியம்மனின் அருளை பெற்றிட கோயில் நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர். 

தீ மிதித்தால் குழந்தை பாக்கியம் தரும் திரௌபதியம்மன்

தொடர்புக்கு

தர்மகத்தா: 9159555810.

கனாச்சாரி குமார வர்க்கம் கேளுர்¸ சித்தேரி அனைபேட்டை விளக்கனந்தல்¸ பால்வார்த்து வென்றான் கிராம பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், இளைஞர்கள். 

அமைவிடம் 

திருவண்ணாமலை வேலூர் நெடுஞ்சாலையில் கேளுர் சந்தை மேட்டிலிருந்து 3 வது கிலோ மீட்டர் தூரத்தில் கோயில் உள்ளது.

See also  திருவண்ணாமலை கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

செய்தி¸படம்-ப. பரசுராமன்   

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!