Homeசெய்திகள்சிட்கோ தொழிற்பேட்டை துவக்கம்-5800 பேருக்கு வேலை வாய்ப்பு

சிட்கோ தொழிற்பேட்டை துவக்கம்-5800 பேருக்கு வேலை வாய்ப்பு

சிட்கோ தொழிற்பேட்டை துவக்கம்-5800 பேருக்கு வேலை வாய்ப்பு

திருவண்ணாமலை பெரிய கோளாப்பாடியில் சிட்கோ தொழிற்பேட்டையை முதல்வர் திறந்து வைத்தார். இதன் மூலம் 5800 பேர் வேலை பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

ஆரணி¸ செய்யாறு பிரிந்து சென்று விட்டால் திருவண்ணாமலையின் வளர்ச்சிக்கு தொழிற்பேட்டைகள்தான் கைகொடுக்கும் என கலெக்டர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் குறு¸ சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாடு மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கவும்¸ அவைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் ஒரு பொதுத்துறை நிறுவனமாக நிறுவப்பட்டது. புதிய தொழிற்பேட்டைகள் மற்றும் தொழில் முனைவோர் உடனடியாக தொழில் தொடங்க ஏதுவான வசதிகளை உள்ளடக்கிய அடுக்குமாடி தொழில் வளாகங்கள் உருவாக்குதல்¸ தொழில்முனைவோர் குழுமங்களுக்கு பொது வசதி மையங்கள் ஏற்படுத்துதல்¸ தொழிற்பேட்டைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற செயல்பாடுகளை தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

சிட்கோ தொழிற்பேட்டை துவக்கம்-5800 பேருக்கு வேலை வாய்ப்பு

அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம்¸ செங்கம் வட்டம்¸ பெரியகோளப்பாடி கிராமத்தில்  57.181 ஏக்கர் பரப்பளவில் ரூ.11.82 கோடி திட்ட மதிப்பீட்டில் 1800 நபர்கள் நேரடியாகவும்¸ 4000 நபர்கள் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பினை பெறும் வகையில் 171 தொழில் மனைகளுடன் புதிய தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சிட்கோ தொழிற்பேட்டையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்தில் இன்று (27.06.2022) காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்து தொழில்முனைவோர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.  

இதையொட்டி பெரியகோளாப்பாடியில் நடைபெற்ற விழாவில் சட்டமன்ற துணைத் தலைவர் கு.பிச்சாண்டி¸ மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ்¸நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை¸ செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி¸ ஆகியோர் கலந்து கொண்டனர். 

விழாவில் கலெக்டர் முருகேஷ் பேசியதாவது¸ 

திருவண்ணாமலை கோட்டத்தில் தொழிற்சாலைகள் ஏதும் இல்லை. ஒரு பேச்சுக்கு வைத்து கொள்வோம்¸ திடீரென்று ஆரணி¸ செய்யாறு வேறு மாவட்டமாக பிரிந்து விட்டால்¸ தனி மாவட்டமாக இருக்கும் திருவண்ணாமலை தொழில் இருந்தால்தான் முன்னேறும். 

சிட்கோ தொழிற்பேட்டை துவக்கம்-5800 பேருக்கு வேலை வாய்ப்பு

கோயில் வருமானத்தை கோயில் மட்டும்தான் எடுக்க முடியும்¸ மக்கள்¸ நகராட்சி¸ ஊரக வளர்ச்சிக்கு பெருமளவு போகாது. எனவே தொழிற்சார்ந்த வளர்ச்சிதான் அதிகமாக இருக்க வேண்டும். அடுத்த 2 வருடத்தில் திருவண்ணாமலை கோட்டத்தில் தொழிற்பேட்டைகள் அமைக்க வேண்டும். சிட்கோ முதல்கட்டமாக வந்துள்ளது. 

சிட்கோ நல்ல செயல்பாடு கொண்டிருந்தால் அதன் பயனை மக்கள் புரிந்து கொள்வார்கள். எனவே தொழில் வந்தால்தான் முன்னேற முடியும். இங்கு 6 மாத போராட்டத்திற்கு பிறகு தொழிற்பேட்டையை கொண்டு வந்துள்ளோம். மக்களை குற்றம் சொல்ல முடியாது. அவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை. இந்த பயனை மக்களிடம் சென்று சேர்க்க வேண்டும். நிறைய வதந்திகள் வருகின்றன. உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். என்னிடம் வந்தால் அவர்களுக்கு நான் தெளிவு படுத்துகிறேன். 

இவ்வாறு அவர் பேசினார். 

விழாவில் திருவண்ணாமலை¸ சிட்கோ கிளை மேலாளர் எஸ்.சத்தியராஜ்¸ மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் ரவி¸ திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல்¸ செங்கம் வட்டாட்சியர் முனுசாமி¸ வட்டார வளர்ச்சி அலுவலர் ரபியுல்லா¸ அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

See also  திருவண்ணாமலை:ரூ.2 கோடி இடம் அதிரடியாக மீட்பு

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!