Homeசெய்திகள்இடுக்கு பிள்ளையாரில் நுழைந்து வெளியே வந்தார் சிம்பு

இடுக்கு பிள்ளையாரில் நுழைந்து வெளியே வந்தார் சிம்பு

இடுக்கு பிள்ளையாரில் நுழைந்து வெளியே வந்தார் சிம்பு

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோயிலில் சிறிய குகை போன்ற இடுக்கில் நடிகர் சிம்பு நுழைந்து வெளியே வந்தார். 

ஈஸ்வரன் 

வெண்ணிலா கபடி குழு¸ நான் மகான் அல்ல உள்பட பல்வேறு திரைப்படங்களை இயக்கிய சுசீந்திரனின் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் என்ற திரைப்படம் நாளை 14-1-2021 தமிழகம் முழுவதும் 400 திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. 

இந்த படத்தில் பாம்புடன் சிம்பு தோன்றிய ஸ்டில் வெளியான போது விலங்குகள் நல ஆர்வலர் சார்பில் வனத்துறை அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து இது நிஜ பாம்பு அல்ல. கிராபிக்ஸ் பாம்பு என படக்குழுவினர் விளக்கம் அளித்தனர். 

சிக்கல்கள்

இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டதால் திரையரங்குகளில் ஈஸ்வரன் படத்தை திரையிட மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர். இதையடுத்து இந்த முடிவு கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இப்படி படம் வெளிவருவதற்கு முன்பே இப்படத்திற்கு சிக்கல்கள் உருவாகியது. 

தனது குடும்பத்தில் ஜோசியர் ஒருவர் கூறியதையொட்டி நடைபெற்ற சம்;பவங்களை அடிப்படையாக கொண்டு திரைப்படத்தை எடுத்திருப்பதாக சுசீந்திரன் தெரிவித்திருந்தார். இந்த படத்திற்காக சிலம்பரசன் தனது எடையை குறைத்துக் கொண்டு இளமை தோற்றத்துக்கு மாறி விட்டார். சிம்பு ரசிகர்களிடையே இப்படம் மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

See also  திருவண்ணாமலை:தரை வழி மின் விநியோகம் துவக்கம்

வெற்றியடைய

இந்நிலையில் ஈஸ்வரன் திரைப்படம் வெற்றிபெற இன்று காலை 5-30  மணிக்கு நடிகர் சிம்பு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையம்மனை தரிசித்தார். பிறகு காரில் கிரிவலம் சென்றார்.  

பில்லி¸ சூனியம் போன்ற செய்வினைகளை அகற்றிடவும்¸ நரம்பு பிரச்சனைகளை தீர்த்து வைத்திடவும் பக்தர்கள் வணங்கி வரும் இடுக்குப் பிள்ளையார் கோவிலுக்கு சென்று நந்தியுடன் காட்சி தரும் விநாயக பெருமானை தரிசனம் செய்தார். அங்கு சிறிய குகை போன்ற இடுக்கில் நுழைந்த அவர் கைளை ஊன்றி தவழ்ந்து¸ தவழ்ந்து மறுபுறம் புன்சிரிப்போடு வெளியே வந்தார். 

ஈஸ்வரன் படம் வெற்றியடைய நடிகர் சிம்பு அண்ணாமலையார் கோயிலில் வேண்டிக் கொண்டு கிரிவலம் வந்ததாக அவரது ரசிகர்கள் தெரிவித்தனர். சிம்புவுடன் அவரது பள்ளித் தோழரும்¸ நடிகருமான மகத் ராகவேந்திரா வந்திருந்தார். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!