ஆரணியில் பட்டு சேலை வியாபாரிகளிடம் ரூ.20 கோடியை ஏப்பம் விட்டு தலைமறைவான திருப்பதி பெண்களை கண்டுபிடித்து தருமாறு பட்டுசேலை வியாபாரிகள் திருவண்ணாமலை எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் 75க்கும் மேற்பட்ட கிராமங்களில் பட்டு சேலைகள் உற்பத்தி நடைபெறுகிறது. இதனால் ஆரணி, சில்க் சிட்டி என அழைக்கப்படுகிறது. இந்த தொழிலை நம்பி ஏறக்குறைய 1 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித்தரும் நகரமாக ஆரணி உள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் ஆரணிக்கு வந்து பட்டுசேலைகள் கொள்முதல் செய்கின்றனர்.
அந்த வகையில் சித்தூர் மாவட்டம் திருப்பதியில் சத்தியபாமா சில்க்ஸ் நடத்தி வரும் விஜயபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரலு மனைவி காயத்திரி, எம்.எஸ்.புரத்தைச் சேர்ந்த மாதவி ஆகியோர் ஆரணியில் வியாபாரிகளிடம் பட்டுசேலை கொள்முதல் செய்து வந்தனர்.
ரூ.20 கோடியை மோசடி செய்து தலைமறைவு
ஆரம்பத்தில் பணத்தை தந்து பட்டு சேலைகளை வாங்கிய அவர்கள் பிறகு கடனுக்கு வாங்கி சிறிது நாள் கழித்து பணம் தந்து வந்தனர். இந்நிலையில் கொரோனா காலத்தில் 41 வியாபாரிகளிடம் பெரிய தொகைக்கு பட்டுசேலைகளை கொள்முதல் செய்தார்களாம். அதற்கு முன்தேதியிட்ட காசோலைகளை வழங்கினார்களாம்.
2 வருடமாகியும் பணம் வராததால் திருப்பதிக்கு அவர்களது வீட்டுக்கு ஆரணி வியாபாரிகள் படையெடுக்க ஆரம்பித்தனர். இதனால் அவர்கள் தலைமறைவானார்கள். மொத்தம் அவர்கள் ஏமாற்றிய தொகை ரூ.20 கோடி என சொல்லப்படுகிறது. இதற்கு ஆரணி கொசப்பாளையத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரும் உடந்தையாக இருந்தாராம்.
இதற்கிடையில் ஆரணி வியாபாரி ஒருவர் தொடர்ந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காயத்தரி மற்றும் அவரைச் சேர்ந்தவர்களுக்கு கோர்ட்டில் ஜாமீன் கிடைத்துள்ளது. இதையறிந்த மற்ற வியாபாரிகள் நேற்று திருவண்ணாமலை எஸ்.பி அலுவலகத்தில் காயத்தரி, மாதவி, செல்வராஜ் ஆகியோர் மீது புகார் மனு அளித்தனர். அதில் தங்களது பணத்தை மீட்டு தரும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஏமாற்றப்பட்ட நிறுவனங்கள்
1. செல்வன் சில்க்ஸ் சாரீஸ் பிரைவேட் லிமிடெட்
2. பாவேந்தன் சில்க்
3. சந்தோஷ் சில்க் புடவைகள்
4. சரண் சில்க் ஹவுஸ்
5. ஸ்ரீ. புவனேஸ்வரி சில்க்ஸ்
6. என்.சி.எம். கோதண்டராம் சில்க் புடவைகள்
7. துளசி டெக்ஸ்
8. அ.தர்மலிங்கம் & பிரதர்ஸ்
9. ஏ.டி.பி சில்க்ஸ்
10. சௌதேஸ்வரி சில்க்ஸ் புடவைகள்
11. ஸ்ரீ. லஷ்மி பாலாஜி சில்க்ஸ்
12. என்.உமா சில்க்ஸ்
13. ஓம்.சக்தி சில்க் சேலைகள்
14. ஜெ.கமலா
15. ஓம்.சக்தி சில்க்ஸ்
16. பத்மாவதி சேலை
17. ஸ்ரீனிவாஸ் சேலைகள்
18. பத்மாலயா புடவைகள்
19. ஸ்ரீ பாலாஜி சேலைகள்
20. நம் சில்க்ஸ்
21. ஜி.பி.எஸ். சில்க் பார்க்
22. எஸ். ரமேஷ் சில்க்ஸ்
23. கே.ஜி. செல்வம் சில்க்ஸ் புடவைகள்
24. கே.கே.பி. சில்க்ஸ்
25. சி.வி.எம். ஜவுளி
26. எம்.இ. நாகராஜ் ஏ சில்க்ஸ்
27. சத்பவா சில்க்ஸ்
28. டி.எம். சில்க்ஸ்
29. சுரேஷ் சில்க்ஸ்
30. எம்.பி. சில்க்ஸ்
31. காமராஜ் சில்க்ஸ்
32. என். ரமேஷ் சில்க்ஸ்
33. பி.பி. பார்த்திபன் சில்க்ஸ்
34. ஸ்ரீ. ஜோதி சில்க்ஸ்
35. ஜோதி சில்க்ஸ் எம்போரியம்
36. எச்.எம். சில்க்ஸ்
37. அருணா சில்க்ஸ்
38. ஸ்ரீ.பவானி அம்மன் சில்க்ஸ்
39. ஸ்ரீ. அம்மன் சில்க்ஸ்
40. ஸ்ரீ. ராதா சில்க்ஸ்
41. சரஸ்வதி சில்க்ஸ்