Homeஆன்மீகம்இந்த வருடமும் யானை இன்றி தீபத்திருவிழா?

இந்த வருடமும் யானை இன்றி தீபத்திருவிழா?

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நன்கொடையாளர் வாங்கித் தந்த யானையை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த வருட தீபத்திருவிழாவுக்குள் யானை வருமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

புனித விலங்கான யானை கோயில்களில் நடைபெறும் உற்சவங்களில் பங்கு பெறுவது முக்கியமானதாக இருந்து வருகிறது. ஆன்மீகத்தில் கோ பூஜை போன்று கஜ பூஜை மிகவும் பிரபலமாகும். இந்து மதத்தில் 8 திசைகளையும் 8 யானைகள் பாதுகாப்பதாய் சொல்லப்படுகின்றது.

கேரள மாநிலத்தின் அனைத்துக் கோவில்களிலும் யானைகளின் பங்கு இன்றியமையாததாக இருக்கின்றது. விநாயகரின் அம்சமாக, முருகனின் வாகனங்களில் ஒன்றாக, சிவபெருமான் அவதாரம் எடுத்த கஜசம்ஹார மூர்த்தியாக யானை விளங்குகிறது. குறிப்பாக யானை நம்மை ஆசிர்வதிக்கும் போது அதன் மூச்சுக்காற்று நம்மீது படும்போது இன்னல்கள் தீரும் என்பது ஒரு நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இப்படி சிறப்பு பெற்ற யானை புராதன கோயிலான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இல்லாமல் இருந்து வருகிறது. 23 வருடங்களாக உற்சவங்களில் பங்கேற்று பக்தர்களிடமும் பொது மக்களிடமும் அன்பாக பழகி வந்த யானை ருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் தேதி நள்ளிரவில் திடீரென உயிரிழந்தது.

See also  அண்ணாமலையார் கோயிலில் 2 மணி நேரத்தில் தரிசனம்?

வட ஒத்தைவாடை தெரு கோயில் மதில்சுவர் அருகில் ருக்கு புதைக்கப்பட்ட இடத்தில் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இங்கு ரூ.49 லட்சத்தில் ருக்குக்கு மணிமண்டபம் கட்டும் வேலையை அரசு தொடர்ந்திருப்பதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கோயிலுக்கு 5 வருடங்களாக யானை இல்லாத நிலையில் ஏறக்குறைய அரைகோடி ரூபாய் செலவு செய்து இறந்து போன யானைக்கு மணிமண்டபம் கட்டுவது தேவையில்லாதது என பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கார்த்திகை தீப திருவிழாக்கள் யானை இல்லாமல் நடைபெற்று வருவது பக்தர்களை வேதனை அடையச் செய்துள்ளது.

2 யானை கேட்ட கோயில் நிர்வாகம்

இந்த வருடமும் யானை இன்றி தீபத்திருவிழா?

இந்நிலையில் அண்ணாமலையாரிடம் வேண்டுதல் நிறைவேறியதால் மகிழ்ச்சி அடைந்த தொழிலதிபர் ஒருவர் திருவண்ணாமலை கோயிலுக்கு யானையை நன்கொடையாகத் தர முடிவெடுத்தார். இதையடுத்து யானை வாங்கும் முயற்சியில் அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் இறங்கியது. இதற்காக யானைகளை பார்வையிட ஆசாம் மாநிலத்திற்கு யானைப்பாகன் உள்பட 4 பேர் விமானம் மூலம் அனுப்பப்பட்டனர். மேலும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு இரண்டு யானைகளை வழங்கும்படி கோவில் இணை ஆணையாளர் கடிதமும் அனுப்பினார்.

See also  2024 ஒவ்வொரு ராசிக்கும் எப்படி இருக்கும்?
இந்த வருடமும் யானை இன்றி தீபத்திருவிழா?
நீச்சல்குளம்

அசாமில் தனியார் எஸ்டேட்டில் வளர்க்கப்படும் யானைகளில் 2 யானைகள் தேர்வு செய்யப்பட்டு மாலை போடவும், ஆசீர்வாதம் செய்யவும் மற்ற சில பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் யானைகள் குளிப்பதற்கு நீச்சல்குளமும் கட்டப்பட்டது. பயிற்சிகள் முடிவடைந்த நிலையில் யானைகள் புறப்பட தயார் நிலையில் உள்ளது. யானைகளை திருவண்ணாமலைக்கு கொண்டு வருவதற்கு மத்திய- மாநில அரசுகளிடம் உரிய அனுமதிகள் பெற்றப்பட்டன. சென்ற ஆண்டு தீபத்திருவிழாவிற்குள் யானைகள் வந்து விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யானைகள் வருவதில் காலதாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் ருக்குக்கு மணிமண்டபம் கட்டும் பணியை துவக்கி வைத்த கலெக்டர் முருகேஷிடம் புதிய யானை எப்போது வரும் என கேட்டதற்கு யானைகள் வருவதற்கு கோர்ட்டில் தடை உள்ளது. விலங்கின ஆர்வலர்கள் இந்த தடையை வாங்கியுள்ளனர். எனவே இந்த தடையை அகற்ற முயற்சிகள் நடைபெற்று வருகிறது. கோர்ட்டில் தடை உத்தரவு விலக்கிய பின் யானை வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

இதன் மூலம் இந்த வருட தீபத்திருவிழாவுக்குள் யானை வருமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றி யானை வாங்கித் தந்த நன்கொடையாளர் தரப்பில் விசாரித்ததில் பாண்டிச்சேரி, திருத்தணி, திருவண்ணாமலை கோயில்களுக்கு யானைகள் வாங்கப்பட்டுள்ளன. இந்த யானைகளை அந்தந்த கோயில்களுக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை போக்கி அடுத்த மாதத்துக்குள் யானையை கொண்டு வர முயற்சிகளை எடுத்து வருகிறோம் என்றனர்.

See also  திருவண்ணாமலைக்கு 2 யானை கேட்டு அதிகாரி கடிதம்

https://youtube.com/@AgniMurasu


 திருவண்ணாமலை செய்திகள்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!