திருவண்ணாமலை மாவட்டத்தை அதிமுக, கழக அமைப்பு ரீதியாக நான்காக பிரித்துள்ளது. புதிய மாவட்ட செயலாளர்களாக எஸ்.ராமச்சந்திரனும், ஜெயசுதாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரம் வருமாறு,
கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி அவர்களின் முக்கிய அறிவிப்பு
கழக அமைப்பு ரீதியாக மாவட்டங்கள் பிரிப்பு
ராணிப்பேட்டை மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் சு.ரவி, எம்.எல்.ஏ, அவர்களும், திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் தூசி கே.மோகன், முன்னாள் எம்.எல்.ஏ அவர்களும், திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, எம்.எல்.ஏ அவர்களும், திருநெல்வேலி மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. தச்சை எஸ்.கணேசராஜா அவர்களும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எஸ்.ராமச்சந்திரன் அவர்களும், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலும், கழக மகளிர் அணி துணைச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் எல்.ஜெயசுதா முன்னாள் எம்.எல்.ஏ அவர்களும் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
கழக நிர்வாக வசதியைக் கருத்தில்கொண்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, தேனி, திருநெல்வேலி என செயல்பட்டு வந்த மாவட்டக் கழக அமைப்புகள், இன்று முதல் கழக அமைப்பு ரீதியாக கீழ்க்கண்டவாறு பிரிக்கப்பட்டு, பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும் என்பதையும் மாவட்டக் கழகச் செயலாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் மாவட்டங்களுக்கு நியமிக்கப்படுகிறார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம்
1. அரக்கோணம் (தனி) 2. சோளிங்கர்
மாவட்ட செயலாளர் சு.ரவி, எம்.எல்.ஏ
ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம்
1. ராணிப்பேட்டை 2. ஆற்காடு
மாவட்ட செயலாளர் எஸ்.எம். சுகுமார், மாவட்ட புரட்சித் தலைவி பேரவைப் பொருளாளர்
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம்
1. திருவண்ணாமலை 2. கீழ்பென்னாத்தூர்
மாவட்ட செயலாளர் எஸ்.இராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்
திருவண்ணாமலை மத்திய மாவட்டம்
1. ஆரணி 2.போளூர்
மாவட்ட செயலாளர் எல். ஜெயசுதா முன்னாள் எம்.எல்.ஏ, போளூர் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர்.
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்
1. செய்யார், 2. வந்தவாசி (தனி)
மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன், முன்னாள் எம்.எல்.ஏ, மாவட்டக் கழகச் செயலாளர்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம்
1. கலசபாக்கம் 2. செங்கம் (தனி)
மாவட்ட செயலாளர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, எம்.எல்.ஏ
தஞ்சாவூர் கிழக்கு மாவட்டம்
1. திருவிடைமருதூர் (தனி) 2. கும்பகோணம்
மாவட்ட செயலாளர் ஆர்.கே. பாரதிமோகன், முன்னாள் எம்.பி, திருப்பனந்தாள் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர்
தஞ்சாவூர் மேற்கு மாவட்டம்
1. பாபநாசம் 2. திருவையாறு
மாவட்ட செயலாளர் எம். ரெத்தினசாமி, முன்னாள் எம்.எல்.ஏ பூதலூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்
தஞ்சாவூர் மத்திய மாவட்டம்
1. தஞ்சாவூர் 2. ஒரத்தநாடு
மாவட்ட செயலாளர் எம். சேகர், ஒரத்தநாடு பேரூராட்சி மன்றத் தலைவர்
தஞ்சாவூர் தெற்கு மாவட்டம்
1. பட்டுக்கோட்டை 2. பேராவூரணி
மாவட்ட செயலாளர் சி.வி.சேகர், முன்னாள் எம்.எல்.ஏ, மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர்
தேனி கிழக்கு மாவட்டம்
1. ஆண்டிபட்டி 2. பெரியகுளம் (தனி)
மாவட்ட செயலாளர் முருக்கோடை எம்.பி. ராமர், மாவட்டக் கழக முன்னாள் துணைச் செயலாளர்
தேனி மேற்கு மாவட்டம்
1. போடிநாயக்கனூர் 2. கம்பம்
மாவட்ட செயலாளர் எஸ்.கே.டி.ஜக்கையன், முன்னாள் எம்.பி கழக அமைப்புச் செயலாளர்.
திருநெல்வேலி மாநகர் மாவட்டம்
1. திருநெல்வேலி 2. பாளையங்கோட்டை
மாவட்ட செயலாளர் தச்சை என். கணேசராஜா மாவட்டக் கழகச் செயலாளர்
திருநெல்வேலி புறநகர் மாவட்டம்
1. அம்பாசமுத்திரம் 2. நாங்குநேரி 3.ராதாபுரம்
மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா, எம்.எல்.ஏ
கழக அமைப்பு ரீதியாக தற்போது பிரிக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, கழகப் பணிகளை ஆற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கழகம் மற்றும் சார்பு அமைப்புகளுக்கு திருத்தி அமைக்கப்பட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும் வரை, தற்போதுள்ள நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு உட்பட்ட நிர்வாகப் பொறுப்புகளில் தொடர்ந்து செயலாற்றுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அக்ரி கையே ஓங்கியது
அக்ரி.கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து 2 தொகுதிகள் பறிக்கப்பட்டாலும் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனத்தில் அவரது கையே ஓங்கியிருப்பதாக பேசப்படுகிறது. போளுர், ஆரணிக்கு நியமிக்கப்பட்டிருக்கிற புதிய மாவட்ட செயலாளர் ஜெயசுதா, அக்ரி.கிருஷ்ணமூர்த்தியின் தீவிர ஆதரவாளர்.
திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர் மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் பெருமாள்நகர் ராஜன் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். அவரது அம்மா இல்லம் பறிபோன பிறகு அமைதியாக இருந்து வந்த அவர் பிறகு கட்சி நடத்திய போராட்டங்களில் தனது ஆதரவாளர்களுடன் பங்கேற்று வழக்கம் போல் தொண்டர்களுக்கு பிரியாணி விருந்து அளித்தார்.
அக்ரி.கிருஷ்ணமூர்த்திக்கும், அவருக்கும் ஆகாது என்பதால் முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரனுக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைத்துள்ளது. இவர் கே.பி. முனுசாமியின் தீவிர ஆதரவாளர். பெருமாள்நகர் ராஜனை திருப்திபடுத்த அவருக்கு அம்மா பேரவை மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
கலசப்பாக்கம் முன்னாள் எம்.எல்.ஏ பன்னீர்செல்வத்திற்கும், அக்ரி.கிருஷ்ணமூர்த்திக்கும் ஏழாம் பொருத்தம். இதன் காரணமாகவே கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி, தெற்கு மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு வடக்கு மாவட்டத்தோடு இணைக்கப்பட்டது.
இந்நிலையில் கலசப்பாக்கம், செங்கத்திற்கு மாவட்ட செயலாளராக அக்ரி.கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டிருப்பது நிர்வாகிகள் நியமனத்தில் அவரது கை ஓங்கியிருப்பதையே காட்டுவதாகவும், மாவட்ட செயலாளராக பெருமாள்நகர் ராஜன் வரக்கூடாது, கலசப்பாக்கம் மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும் என அக்ரி நினைத்தது நடந்துள்ளதாகவும் அதிமுக சீனியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.