Homeஆன்மீகம்திருவண்ணாமலை: 300 பேர் திருப்பதிக்கு பாதயாத்திரை

திருவண்ணாமலை: 300 பேர் திருப்பதிக்கு பாதயாத்திரை

திருவண்ணாமலை: 300 பேர் திருப்பதிக்கு பாதயாத்திரை

10 கிராம மக்கள்

திருவண்ணாமலை பகுதியில் இருந்து திருப்பதிக்கு 300 கிலோ மீட்டர் தூரம் 10 கிராம மக்கள் கொரோனா ஒழியவும் உலக நன்மைக்காகவும் பாதயாத்திரை சென்றனர். 

திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் மல மஞ்சனூர்புதூர்¸ தானிப்பாடி¸ சின்னியம்பேட்டை¸ ரெட்டியார்பாளையம்¸ டி வேலூர்¸மோட்டூர் உள்பட 10 கிராமங்களை சேர்ந்த மக்கள் வருடந்தோறும் மார்கழி மாதம் திருப்பதிக்கு பாத யாத்திரையாக சென்று வருகின்றனர்.   

கொரோனா ஒழிய

இந்த வருடம் உலக நன்மைக்காகவும் கொடிய நோயான கொரோனா ஒழியவும் வேண்டிக் கொண்டு 10 கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு பாதயாத்திரை புறப்பட்டனர். இதற்காக மல மஞ்சனூர் புதூரில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோயில் கூடிய  மக்கள்  அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சிக்கு கோயில் தர்மகர்த்தா ஆர்.சுப்பராயன் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கே.சரவணன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஏழுமலை¸ ஆலுடையன்¸ மார்க்கண்டேயன்¸ ரமேஷ்¸ பூமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை: 300 பேர் திருப்பதிக்கு பாதயாத்திரை

வைகுண்ட ஏகாதசி

See also  ஆடி பவுர்ணமி: தேசிய கொடியுடன் கிரிவலம் வந்த பக்தர்கள்

பின்பு அங்கிருந்து புறப்பட்டு திருவண்ணாமலை¸ கலசபாக்கம்¸ போளுர்¸ வேலூர் வழியாக திருப்பதி சென்று அடைகின்றனர். அங்கிருந்து 3800 படிக்கட்டுகள் கொண்ட நடைபாதை வழியாக அவர்கள் திருமலைக்குச் சென்று வைகுண்ட ஏகாதசி அன்று வெங்கடேச பெருமாளை தரிசிக்கின்றனர்.

இது குறித்து மல மஞ்சனூரைச் சேர்ந்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சரவணன் நம்மிடம் கூறுகையில் திருப்பதிக்கு பாதயாத்திரை செல்ல திருப்பதி-திருமலா பாதயாத்திரை குழு ஒன்றை ஏற்படுத்தியுள்ளோம். இந்த குழு மூலம் 21 வருடங்களாக திருப்பதிக்கு சென்று வருகிறோம். ஒவ்வொரு வருடமும் மலமஞ்சனூர் புதூரில் அமைந்திருக்கும் சீனிவாச பெருமாள் கோயிலில் உலக மக்கள் சுபிட்சமாக இருக்க வேண்டிக் கொள்வோம். 

ரூ.2 கோடி செலவில்

திருப்பதி தரிசனம் முடித்து விட்டு 9வது நாள் ஊருக்கு திரும்பி வருவோம். இரவு மட்டும் வழியில் எங்கயாவது தங்குவோம். மற்றபடி பகலில் நடைபயணம் தான். மதியம் உணவுக்கு பிறகு சிறிது ஓய்வெடுப்போம். இந்த ஆன்மீக பயணத்தை முடித்து வந்த பிறகுதான் எங்களுக்கு மனநிம்மதி ஏற்படும். கிராமமும் செழித்து காணப்படும். மக்களும் நன்றாக இருப்பார்கள். எங்கள் கிராமத்தில் 2 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இருந்த பெருமாள் கோயில் முகலாயர்கள் ஆட்சி காலத்தில் அடியோடு அழிக்கப்பட்டு விட்டது. இதன் காரணமாக எங்கள் ஊர் மலை மீது பெருமாள் கோயிலை ஏற்படுத்தியுள்ளோம். தற்போது இக்கோயில் ரூ.2 கோடி செலவில் 16 கால் மண்படம் கட்டுதல்¸ கோபுரங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளையும்¸ கோயில் புனரமைப்பு பணிகளையும் செய்து வருகிறோம் என்றார். 

See also  85 ஆயிரம் டன் பருமன் உள்ள ஆகாய லிங்கத்தின் சிறப்புகள்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!