Homeசெய்திகள்திருவண்ணாமலை பிரபல பைனான்ஸ் கம்பெனியில் தீ விபத்து

திருவண்ணாமலை பிரபல பைனான்ஸ் கம்பெனியில் தீ விபத்து

திருவண்ணாமலை பிரபல பைனான்ஸ் கம்பெனியில் தீ விபத்து

திருவண்ணாமலையில் உள்ள மகேந்திரா ஹோம் பைனான்ஸ் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆவணங்கள்¸ பத்திரங்கள் தீயில் கருகியது. 

வீடு கட்ட கடன் வழங்கும் நிறுவனங்களில் மகேந்திரா நிதி நிறுவனம் முன்னணியில் இருந்து வருகிறது. 2007ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனத்திற்கு தமிழ்நாடு¸ குஜராத்¸ மகாராஷ்டிரா உள்பட 9 மாநிலங்களில் கிளைகள் உள்ளன. 50 ஆயிரம் கிராமங்களில் 6 லட்சம் பேருக்கு ரூ.5500 கோடிக்கு மேல் இந்நிறுவனம் கடன்களை வழங்கியுள்ளது. 

திருவண்ணாமலை பிரபல பைனான்ஸ் கம்பெனியில் தீ விபத்து

திருவண்ணாமலை சின்னகடைத் தெருவில் உள்ள இந்தியன் வங்கியின் மாடியில் மகேந்திராவின் ஹோம் பைனான்ஸ் கிளை இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் சுமார் 40 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இங்கு புதிய வீடு கட்டவும்¸ புதிய வீடு வாங்கவும்¸ வீட்டை புதுப்பிக்கவும்¸ வீட்டை விரிவாக்கம் செய்வதற்கும் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏராளமானோர் தங்களுடைய வீட்டு பத்திரங்களை அடமானமாக வைத்து இந்த அலுவலகத்தில் கடன்களை பெற்றிருக்கின்றனர். 

நேற்று இரவு நிறுவனத்தை மூடி விட்டு மேலாளர் மணிகண்டன் வீட்டுக்கு சென்று விட்டார். இன்று காலை 8-30 மணியளவில் அந்த நிறுவனத்திலிருந்து புகை வருவதை பார்த்து அக்கம்-பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். 

தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து திறந்திருந்த அந்த நிறுவனத்தின் ஜன்னல் வழியாக தண்ணீரை பாய்ச்சி தீயை அணைத்தனர். தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் மற்ற பகுதிகளுக்கும்¸ கீழ்தளத்தில் இருந்த இந்தியன் வங்கிக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. 

இந்த தீ விபத்தில் மகேந்திரா ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்த ஆவணங்கள்¸ பத்திரங்கள் தீயில் கருகி சாம்பலாயின. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. கம்ப்யூட்டர்¸ மேசை¸ நாற்காலிகளும் தீயில் சேதமடைந்தன. தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து திருவண்ணாமலை நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த தீ விபத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

See also  தர்பார் படத்தை திரையிட்ட தியேட்டருக்கு சீல்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!