Homeஅரசு அறிவிப்புகள்பர்வதமலை ஏற தடை-கலெக்டர் அறிவிப்பு

பர்வதமலை ஏற தடை-கலெக்டர் அறிவிப்பு

பர்வதமலை ஏற தடை-கலெக்டர் அறிவிப்பு
பர்வதமலை

கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக பர்வதமலை கரைகண்டேஸ்வரர் திருக்கோயில்  தரிசனம் செய்வதற்கும்¸ கிரிவலம் வருவதற்கும்¸ மலை ஏறுவதற்கும் கலெக்டர் சந்தீப் நந்தூரி தடை விதித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம்¸ கலசப்பாக்கம் வட்டம்¸ கோயில்மாதிமங்கலம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுபாட்டில் உள்ளது கரைகண்டேஸ்வரர் திருக்கோயில். மேலும்¸ இத்திருக்கோயிலை முதன்மையாக கொண்டு சதுர்வேத நாராயண பெருமாள் திருக்கோயில் (கோயில்மாதிமங்கலம்)¸ பச்சையம்மன் திருக்கோயில் (பர்வதமலை அடிவாரம்)¸ வீரபத்ரசாமி திருக்கோயில் (பர்வதமலை அடிவாரம்)¸ வனதுர்கை அம்மன் திருக்கோயில் (பர்வதமலை அடிவாரம்)¸ மல்லிகார்ஜுனசாமி திருக்கோயில் (பர்வதமலை உச்சி) ஆகிய உபகோயில்கள் உள்ளன.

கரைகண்டேஸ்வரர் திருக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி¸ தனுர் மாத உற்சவம் (மார்கழி முதல் நாள்)¸ கார்த்திகை தீபம்¸ மகா சிவராத்திரி¸ பிரதி பௌர்ணமி நாட்கள் ஆகிய முக்கிய திருவிழாக்கள் நடைபெறும். இத்திருக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது தனுர்மாத உற்வசமாகும் (மார்கழி முதல் நாள்) இந்த ஆண்டு 16.12.2020 புதன்கிழமை நடைபெறுகிறது.

See also  வேங்கிக்கால் கடைகளில் அதிரடி சோதனை
பர்வதமலை ஏற தடை-கலெக்டர் அறிவிப்பு
பர்வதமலை

தனுர் மாத உற்சவத்திற்கு முதல் நாள் இரவு (15.12.2020 செவ்வாய்க்கிழமை) தொடங்கி யாகங்கள், அனைத்து சன்னதி சுவாமிகள்¸ உற்சவ மூர்த்திகள் அனைத்திற்கும் அபிஷேக¸ ஆராதனைகள் முடிக்கப்பட்டு தனுர் மாத உற்சவ நாள் 16.12.2020 அன்று பிற்பகலில் உற்சவ மூர்த்திகள் பர்வதமலை கிரிவலம் வழியாக வீதி உலா வருவார்கள். பர்வதமலை சுற்றியுள்ள 12 ஊர்களின் வழியாக உற்சவம் நடைபெற்று¸ இறுதியில் மறுநாள் 17.12.2020 அன்று பிற்பகலில் திருக்கோயிலை உற்சவ மூர்த்திகள் வந்தடைவார்கள்.

தமிழ்நாட்டில் கோவிட்-19 கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக கடந்த 24.03.2020 முதல் முழு ஊரடங்கு பிறக்கப்பட்டு¸ தற்போது தளர்வுகளுடன் 31.12.2020 வரை ஊரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தொற்று படிப்படியாக குறைந்து வந்தாலும்¸ நோய் பரவல் முற்றிலும் குறையும் வரை பொது மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

See also  முதலமைச்சர் கோப்பை- முதன்முறையாக கிரிக்கெட் சேர்ப்பு
பர்வதமலை ஏற தடை-கலெக்டர் அறிவிப்பு
சந்தீப் நந்தூரி 

கரைகண்டேஸ்வரர் திருக்கோயில் தனுர் மாத உற்சவம் திருவிழாவிற்கு திருவண்ணாமலை உட்பட பிற மாவட்டங்களிலிருந்தும்¸ புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலிருந்தும் 75¸000 மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்பதால் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக பர்வதமலை கரைகண்டேஸ்வரர் திருக்கோயில் தரிசனம் செய்வதற்கும்¸ கிரிவலம் வருவதற்கும்¸ மலை ஏறுவதற்கும் கலெக்டர் சந்தீப் நந்தூரி தடை   விதித்துள்ளார்.

கொரோனா காரணமாக இந்த ஆண்டு கரைகண்டேஸ்வரர் திருக்கோயில் தனுர் மாத உற்சவம் திருக்கோயில் வளாத்தில் மட்டும் நடைபெறும் எனவும்¸ திருவிழாவின் போது ஆண்டு தோறும் நடைபெற்று வந்த அன்னதானம்¸ ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்¸ கரகாட்டம்¸ வானவேடிக்கை என இதர நிகழ்ச்சிகள் அனைத்தும் நடைபெறாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கரைகண்டேஸ்வரர் திருக்கோயில் தனுர் மாத உற்சவம் திருவிழாவிற்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வர வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா நோய் தொற்று பரவாமல் பொது மக்களை பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள மேற்கண்ட நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கலெக்டர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!