Homeஆன்மீகம்வேதநாத ஈஸ்வரர் கோயிலில் மகா பைரவர் யாகம்

வேதநாத ஈஸ்வரர் கோயிலில் மகா பைரவர் யாகம்

திருவண்ணாமலை அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் அமைந்துள்ள வேதநாத ஈஸ்வரர் கோயிலில் உலக நன்மைக்காக நடைபெற்ற மகா பைரவர் யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒரு வடிவமான காலபைரவர் தன்னை சரணடைந்தவர்களை காப்பாற்றி அருள் புரிபவர். கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி திதி அன்று தோன்றியவர். இதனால் பைரவர் சன்னதிகளில் சிறப்பு பூஜை¸ யாகங்கள் நடத்தி அந்நாள் பைரவர் ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது.   

திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் வட்டம் வேடந்தவாடி கிராமத்தில் ரீக்¸ யசூர்¸ சாம அதர்வண வேதங்களும்¸ மகாவிஷ்ணுவாகிய கோவிந்தராஜ பெருமாளும் வழிபட்ட¸ 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வேதநாத ஈஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. 

இங்கு குருதட்சணமூர்த்தி 9 அடி உயர சிலை அமைக்கப்பட்டு குரு யோகதட்சணாமூர்த்தி என்ற பெயரில் தனி ஆலயம் கட்டப்பட்டுள்ளது. ஈஸ்வரனை வேதங்கள் வழிப்பட்டதால் இது குருதோஷ பரிகாரதலமாக கருதப்படுகிறது. மேலும் ஆலங்குடிக்கு இணையானதாக விளங்குவதால் வட ஆலங்குடி என்று போற்றப்படுகிறது.

இந்த வேதநாத ஈஸ்வரர் கோயிலிலில் ஸ்ரீ அஷ்டபுஜ சர்வவேத பைரவர் திருக்கோயிலும் அமைந்துள்ளது. இங்கு நேற்று பைரவர் ஜெயந்தி விழாவையொட்டி பைரவர் மகா யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தை அகஸ்தியரின் சீடர்¸ சிவலிங்க பிரதிஷ்டையின் சிந்தனையாளர் அன்புச் செழியன் நடத்தினார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தணிகை.வையாபுரி முன்னிலை வகித்தார். 

See also  சித்ரா பவுர்ணமிக்கு 6 சிறப்பு ரயில்கள் இயக்கம்

மாலை 5.00 மணிக்கு தொடங்கிய யாகம் இரவு 10-30 மணி வரை நடைபெற்றது. பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும்¸ பஞ்ச முக தீப ஆராதனையும் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் நெய் தீபம் ஏற்றி பைரவரை வழிபட்டனர். திருமணமாகாதவர்கள் பைரவரை எட்டு மிளகு வைத்து சிவப்பு துணியுடன் தீபம் ஏற்றி திருமண தடை நீங்க வேண்டிக் கொண்டனர். 

பூமி  சம்மந்தமான வாஸ்து தோஷங்கள் நிவர்த்தி¸ குடும்ப ஒற்றுமை¸ மனகுழப்பங்கள் விலக¸ பில்லி¸ சூன்யம்¸ ஏவல் முதலிய பகைவர்களின் செய்வினைகள் நீங்க. கர்ம வினைகள் தீர¸கால சர்ப தோஷம் நீங்கிட¸ குழந்தை பாக்கியம் கிடைக்க¸ வியாபாரத்தில் முன்னேற¸ பதவி உயர்வு கிடைத்திட¸ தம்பதிகளிடையே கருத்து வேற்றுமை நீங்கிட. உலக மக்கள் இன்புற்றிருக்க பைரவருக்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டுள்ளதாக யாகத்தை நடத்திய அன்புச் செழியன் கூறினார். 

அனைவருக்கும் பிரசாதமும்¸ அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் அறக்கட்டளை உறுப்பினர்கள் இந்திராணி¸ ஆறுமுக சுவாமி¸ மண்ணு¸ காளி பூசாரி¸ உதயகுமார்¸ பாண்டியன்¸ சங்கர்¸ அன்பழகன்¸ ரவி  மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

See also  சூரிய கிரகணம்-அண்ணாமலையார் கோயிலில் தீர்த்தவாரி

ஆலய அர்ச்சகர் தீபஒளி. வெ.ஏழுமலை (எ) ஜோதி சுவாமிகள்¸ ஒருங்கிணைப்பாளர்கள் எம்.சரவணன்¸ எம்.சுந்தரமூர்த்தி மற்றும் விழா குழுவினர், வேடந்தவாடி கிராம பொது மக்கள் யாகத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!