Homeஅரசு அறிவிப்புகள்ஐடிஐ சேர்க்கை¸வங்கி ஆபீசர் பணி பயிற்சி குறித்த விவரம்

ஐடிஐ சேர்க்கை¸வங்கி ஆபீசர் பணி பயிற்சி குறித்த விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாதனை பெண்களுக்கான விருது¸ ஆசிரியர் பணியிடம் நிரப்புதல்¸ வங்கி ஆபீசர் பயிற்சிக்கான கடைசி தேதி¸ ஐ.டி.ஐ சேர்க்கை குறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

அதன் விவரம் வருமாறு¸

பழங்குடியின ஆசிரியர்கள் நியமனம் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள மாத ஊதியம் ரூ.10 ஆயிரத்தில் தமிழ்¸வேதியியல் பாடப்பிரிவுக்கான முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஒன்றும்¸ மாத ஊதியம் ரூ.9 ஆயிரத்தில் சமூக அறிவியல் பாடப்பிரிவுக்கான பட்டதாரி ஆசிரியர் பணியிடம் 3ம் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளது. 

கல்வி ஆண்டு முடியும் வரை (கோடை விடுமுறை தவிர்த்து) அல்லது காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்படும் ஆசிரியர்களை கொண்டு முறையாக நிரப்பப்படும் வரை இவர்கள் பணியில் இருப்பார்கள்.

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தகுதியிலுள்ள பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த ஆசிரியர்களை பணியமர்த்திட எழுத்துத் தேர்வு¸ நேர்முக தேர்வு மற்றும் வகுப்பு நடத்துதல் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் நிரப்பப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பத்தினை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரக பழங்குடியினர் நல திட்ட அலுவரிடம் பெற்று பூர்த்திச்செய்து 24.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் 

———————————————————————————————————–


இலவச பயிற்சி வகுப்பு

பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ள புரபொஷனர் ஆபிசர்ஸ் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய சார்பாக ஆன்லைன் வழியாக நடைபெற உள்ளது. 

இப்பயிற்சி வகுப்பு 09.12.2020 முதல் வார நாட்களில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை ஆன்லைன் வழியாக நடைபெற உள்ளது. குவாண்டிட்டேட்டிவ் ஆப்டிட்யூட்¸ ரீசனிங் இங்கிலீஷ் ஆகிய பாடபிரிவுகளுக்கு தனித்தனி ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படுவதுடன் ஒவ்வொரு வாரமும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படவுள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தேர்வர்கள் வரும்  07.12.2020 – க்குள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய தொலைபேசி எண்ணில் 04175-233381-ல் தொடர்பு கொண்டு தங்களது பெயரினை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

————————————————————————————————————-

ஐ.டி.ஐ சேர்க்கை

வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் (50 சதவீத அரசு இடஒதுக்கீட்டின் படி) சேர்க்கை செய்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க 12.12.2020 வரை நேரடி சேர்க்கை நடைபெற உள்ளது.  

அது சமயம் பயிற்சியில் சேர விரும்புபவர்கள் இன ஒதுக்கீட்டின்படி காலியாக உள்ள இடங்களுக்கு திருவண்ணாமலை அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வரை அணுகி அரசினர் தொழிற் பயிற்சி திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையத்திற்கு வருகை புரிந்து சேர்க்கை தொடர்பான விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்,

1. எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் 

2. மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ¸ கையெழுத்து 

இணையவழியாக விண்ணப்பக்கட்டணம் டெபிட் கார்டு¸ கிரெடிட் கார்டு¸ கூகுள் பே¸ நெட் பேங்கிங் மூலம் செலுத்த வேண்டும். 

உதவி மையத்திற்கு வருகைபுரியும் மாணவர்கள்¸ பெற்றோர்கள்¸ பாதுகாவலர்கள் உள்ளிட்ட அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்கவேண்டும். 

கல்வி தகுதி

இரண்டாண்டு தொழிற் பிரிவுகளுக்கு ( பிட்டர்¸ டர்னர்¸ மெஷினிஸ்ட்)  10 ம் வகுப்பு தேர்ச்சி. 

இரண்டாண்டு தொழிற் பிரிவு 8 ம் வகுப்பு தேர்ச்சி.

ஓராண்டு தொழிற் பிரிவு – (வெல்டர்) 8 ம் வகுப்பு தேர்ச்சி. 

வயது வரம்பு

14 வயது முதல் அரசு நிர்ணயத்தவாறு

ஜமுனாமரத்தூர்அரசு பழங்குடியினர் தொழிற் பயிற்சி நிலையம்

சேர்க்கை நடைபெறும் தொழிற் பரிவுகள்

கல்வி தகுதி 

இரண்டாண்டு தொழிற் பிரிவுகளுக்கு (பிட்டர்¸ எம்.எம்.வி.) 10 ம் வகுப்பு  தேர்ச்சி. 

இரண்டாண்டு தொழிற் பிரிவு (வயர்மேன்) 8 ம் வகுப்பு தேர்ச்சி. 

ஓராண்டு தொழிற் பிரிவு – (வெல்டர்¸ பிளம்பர்) 8 ம் வகுப்பு  தேர்ச்சி. 

வயது வரம்பு

14 வயது முதல் அரசு நிர்ணயத்தவாறு

—————————————————————————————————————

சாதனை பெண்களுக்கு ஜனாதிபதி கையால் விருது

மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம்¸’மகளிர் சக்தி விருது” அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதிற்கு தகுதி வாய்ந்த¸ தனிப்பட்ட சிறந்த பெண்கள்¸ குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

மகளிருக்காக தனித்துவமான சேவை குறிப்பாக பின்தங்கிய மற்றும் பாதிப்படைந்துள்ள பெண்களுக்கான சேவை புரிபவர்களை அங்கீகரிக்கும் விதமாக “மகளிர் சக்தி விருது” என்னும் மகளிருக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது.

மகளிருக்கான சுகாதாரம்¸ ஆற்றுப்படுத்தல்¸ சட்ட உதவி¸ விழிப்புணர்வு¸ கல்வி¸ பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் குறிப்பிட்ட பங்களிப்பு¸ பெண்கள் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகள்¸ வன்முறை¸ பெண்கள் மற்றும் குழந்தைகள் பாகுபாடு¸ துன்புறுத்துதல்¸ பெண் குழந்தை பாலின விகிதத்தில் முன்னேற்றம் போன்றவற்றில் தலை சிறந்த பங்களிப்பு மற்றும் சேவை புரிந்த பெண்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் பொருட்டு ‘மகளிர் சக்தி விருது” என்னும் தேசிய விருது வழங்கப்படுகிறது.  

தனிப்பட்ட நபர்களுக்கான விருதிற்கு ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.  நிறுவனங்களுக்கான விருதிற்கு இரண்டு இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கான சேவை புரியும் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்படும் “மகளிர் சக்தி விருது” (நாரி சக்தி புரஸ்கார்) என்னும் தேசிய விருதுக்காக விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் www.narishaktipuraskar.wcd.gov.in என்னும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.  

தகுதிவாய்ந்த தனிநபர்கள்¸ குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியோரால் இவ்விருதிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்கப்பட வேண்டும்.  பிற முறைகளில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.  விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக சமர்ப்பிக்க இறுதி நாள்   07-01-2021 ஆகும்.  இறுதி நாளிற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

இணையதளம் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களில் அனைத்து தகுதிகள் பெற்ற விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டிய முந்தைய வாரத்தில் புதுடெல்லியில் ஜனாதிபதியால் தேசிய விருது வழங்கப்படும்.

——————————————————————————————————————-

வீட்டுமனைகளை வரண்முறைப்படுத்த 15 நாட்கள் அவகாசம் 

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள  20-10-2016-க்கு முன் பத்திர பதிவு செய்த அனுமதியற்ற மனைப்பிரிவு, மனைகளை வரண்முறைப்படுத்த 03-11-2018 வரை அவகாசம் வழங்கப்பட்டது. இதில் நகர் ஊரமைப்பு துறை இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வழங்கப்பட்ட வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்ட பெரும்பாலான மனை மற்றும் மனைப்பிரிவுகள் வரண்முறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த  வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல்¸ விண்ணப்பிக்காமல் உள்ள மனை மற்றும் மனைப்பிரிவு உரிமையாளர்களுக்கு மீண்டும் ஒரு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

இவர்கள் அதற்கான காரணம் மற்றும்  வரைபடங்களுடன் திருவண்ணாமலை மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தை 15 (19-12-2020) நாட்களுக்குள் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். 

இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ள கலெக்டர் சந்தீப் நந்தூரி திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அவர்களுக்கேற்ற திறன் பயிற்சி அளித்து அவர்களின் வாழ்வாதாராத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

See also  டிஎன்பிஎஸ்சி எழுத 1மணி நேரம் முன்னதாக வர அழைப்பு

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!