Homeஆன்மீகம்முதன்முறையாக ரூ.3 கோடியை தாண்டிய உண்டியல் காணிக்கை

முதன்முறையாக ரூ.3 கோடியை தாண்டிய உண்டியல் காணிக்கை

முதன்முறையாக ரூ.3 கோடியை தாண்டிய உண்டியல் காணிக்கை
அண்ணாமலையார் கோயிலில் நாளையும் உண்டியல் எண்ணிக்கை தொடர்கிறது-ரூ.4 கோடியை எட்ட வாய்ப்பு- கொப்பரைக்கு சிறப்பு பூஜை- அமைச்சர் உத்தரவு நிறைவேற்றப்படுமா?

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வரலாற்றில் உண்டியல் காணிக்கை தொகை முதன்முறையாக ரூ.3 கோடியை தாண்டியுள்ளது. நாளை பாக்கியுள்ள உண்டியல்கள் எண்ணப்பட உள்ளதால் இது ரூ.4 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை மாதந்தோறும் பவுர்ணமி முடிந்ததும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் எண்ணப்படுவது வழக்கம். இந்த வருடம் கார்த்திகை மாதம் கார்த்திகை தீபத்திருவிழா மற்றும் பவுர்ணமியை கணக்கில் கொண்டு கோயில் நிர்வாகம், அண்ணாமலையார் கோயிலிலும், கிரிவலப்பாதையிலும் ஏராளமான உண்டியல்களை வைத்திருந்தது. மேலும் கோயிலில் பிரார்த்தனை உண்டியலும் வைக்கப்பட்டது.

முதன்முறையாக ரூ.3 கோடியை தாண்டிய உண்டியல் காணிக்கை

மகாதீபம், பவுர்ணமி

கடந்த 26ந் தேதி மகாதீபத்தன்றும், மறுநாள் பவுர்ணமி நாளிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசனம் செய்து கிரிவலம் வந்தனர். 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2668 அடி உயர மலை மீது ஏற்றப்பட்ட மகாதீபம் 11 நாட்கள் எரிந்தது. விடுமுறை நாளான கடந்த சனிக்கிழமை 7வது நாளாக ஏற்றப்பட்ட மகாதீபத்தையும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 8வது நாளாக ஏற்றப்பட்ட மகாதீபத்தையும் தரிசிக்கவும், கோயிலுக்கு சென்று அண்ணாமலையாரை தரிசிக்கவும், கிரிவலம் செல்லவும் பவுர்ணமி தினம் போல் லட்சக்கணக்கான பேர் திருவண்ணாமலையில் கூடினர்.

See also  திருவண்ணாமலை கோயிலில் அம்மனுக்கு வளைகாப்பு

வெள்ளி குட உண்டியல்

அன்றைய தினம் அண்ணாமலையார் கோயிலுக்கு செல்ல 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர். அவர்கள் சாமியை தரிசிக்க 7 மணி நேரம் ஆனது. இப்படி வருகை தந்த லட்சக்கணக்கான பக்தர்களால் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய பணத்தை எண்ணும் பணி இன்று தொடங்கியது.

அண்ணாமலையார் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் இன்று முதல் நாள் 25க்கும் மேற்பட்ட உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் பணியாளர்கள், சிவனடியார்கள், தன்னார்வலர்கள் என 450 பேர் ஈடுபட்டனர். காலை ஆரம்பிக்கப்பட்ட முதல் நாள் உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பணி மாலை நிறைவடைந்தது.

முதன்முறையாக ரூ.3 கோடியை தாண்டிய உண்டியல் காணிக்கை

நிரந்தர, தற்காலிக உண்டியல்கள், கார்த்திகை தீபத்தையொட்டி வைக்கப்பட்ட வெள்ளி குட உண்டியல், பிச்சாண்டவர் தள்ளு உண்டியல், கோசாலை பராமரிப்பு உண்டியல் ஆகியவை திறந்து எண்ணப்பட்டதில் ரூ.3 கோடியே 28 லட்சத்து 37 ஆயிரத்து 802 ரொக்கமாக கிடைத்தது. மேலும், 340 கிராம் தங்கம், 1895 கிலோ கிராம் வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

See also  பக்தர்கள் சாலை மறியல்-திருவண்ணாமலையில் பரபரப்பு

ரூ.4 கோடியை நெருங்கும்

கடந்த 2021ம் ஆண்டு கார்த்திகை மாத உண்டியல்கள் எண்ணப்பட்டதில் ரூ.1 கோடியே 21 லட்சத்து 46 ஆயிரத்து 133 காணிக்கையாக கிடைத்தது. 2022ம் ஆண்டு கார்த்திகை மாதம் ரூ.2 கோடியே 74 லட்சம் கிடைத்த நிலையில் அண்ணாமலையார் கோயில் வரலாற்றில் முதன்முறையாக உண்டியல் காணிக்கை வரவு ரூ.3 கோடியை தாண்டியுள்ளது.

நாளை 2 வது நாளாக உண்டியல் எண்ணும் பணி நடக்கிறது. அப்போது ராஜகோபுரம் பகுதிகளிலும், கிரிவலப்பாதையிலும் வைக்கப்பட்ட உண்டியல்களை திறந்து எண்ணும் பணி நடக்கிறது. இதனால் உண்டியல் காணிக்கை ரூ.4 கோடியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதன்முறையாக ரூ.3 கோடியை தாண்டிய உண்டியல் காணிக்கை

முதன்முறையாக ரூ.3 கோடியை தாண்டிய உண்டியல் காணிக்கை

அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அதிக அளவு வருமானம் வருவதை கருத்தில் கொண்டு பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்றும், வெயிலிலும், மழையிலும் பக்தர்கள் அவதிப்படுவதை தடுக்க அடிப்படை வசதிகளுடன் கூடிய காத்திருப்பு அறைகளை கட்ட வேண்டும் என்ற கருத்து ஓங்கி ஒலித்து கொண்டிருக்கிறது.

கடந்த ஆகஸ்டு மாதம் பேகோபுரம் பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை பார்வையிட வந்த அமைச்சர் எ.வ.வேலு, பேகோபுரம் மதில்சுவரை யொட்டி பக்தர்கள் இளைப்பாற நிழற்கூரையும், கருங்கல் இருக்கைகளையும் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால் இப்பணி இதுவரை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

See also  17வது மாதமாக திருவண்ணாமலை கிரிவலத்திற்கு தடை

முதன்முறையாக ரூ.3 கோடியை தாண்டிய உண்டியல் காணிக்கை

மகாதீபத்தின் நிறைவாக நேற்று 11வது நாளாக மகாதீபம் மலையில் காட்சியளித்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கோயிலில் இருந்தபடியும் கிரிவல பாதையிலும் திரண்டு தரிசனம் செய்தனர். மலை மீது காட்சியளித்த மகா தீபம் இன்று அதிகாலையுடன் நிறைவு பெற்றது. அதைத்தொடர்ந்து தீப கொப்பரை மலையில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. கோயியிலில் வேதமந்திரங்கள் முழங்க தீப கொப்பரைக்கு மாலைகள் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.


Link:http://www.youtube.com/@AgniMurasu

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!