Homeசெய்திகள்36 வருடத்திற்கு பிறகு தண்ணீரை பார்த்த ஏரி கால்வாய்

36 வருடத்திற்கு பிறகு தண்ணீரை பார்த்த ஏரி கால்வாய்

கழிவுநீர் கால்வாய்க்காக பள்ளம் தோண்டி விட்டு கண்டுகொள்ளாமல் இருக்கும்  திருவண்ணாமலை நகராட்சியை கண்டித்து அந்த அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருவண்ணாமலை வேட்டலம் ரோட்டில் உள்ளது ராமஜெயம் நகர். டி.டி.சி.பி. அங்கீகாரம் பெற்ற இந்நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. 1000த்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 20ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு கால்வாய்¸ சாலை வசதிகள் ஏற்படுத்தி தரப்படாமல் உள்ளது. கால்வாய் இல்லாததால் கழிவுநீரை வீட்டின் அருகிலேயே குடியிருப்பு வாசிகள் தேக்கி வைத்து வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு தண்ணீர் அசுத்தம் கலந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும்;; அப்பகுதி மக்கள் பல மனுக்களை அளித்தும் பயனில்லாமல் உள்ளது. ஏற்கனவே இருந்த அந்த வார்டு கவுன்சிலர்களுக்கு  பொதுமக்கள் அழுத்தம் தரவே 2 முறை கால்வாய் கட்ட நிதி ஒதுக்கீடு அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் நகராட்சி தேர்தலை புறக்கணிக்கும் முடிவுக்கு வந்தனர். இதையடுத்து 3வது முறையாக செய்யப்பட்டது. ஆனால் கால்வாய் கட்டித் தரப்படவில்லை. இதனால் கால்வாய் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ரூ.36லட்சத்தில் கழிவு நீர் கால்வாய் கட்டி சாலை அமைக்க கடந்த 20 நாட்களுக்கு முன் ஒப்பந்ததாரர் மூலம் பணிகள் துவங்கியது. கால்வாய் அமைக்க ஜே.சி.பி மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. தார் சாலை அமைக்க மண்சாலை கரடுமுரடான சாலையாக மாற்றப்பட்டன. அதன்பிறகு எந்த பணிகளும் நடைபெறவில்லை. 

See also  சோலார் இஸ்திரி வண்டி-எஸ்.கே.பி. மாணவி சாதனை

இதனால் மழைநீர்¸ தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கியது. சாலையும் பயன்படுத்த முடியாத நிலையில் மாறியது. ஒரு பக்கம் கழிவு நீர் தேக்கம்¸ மறு பக்கம் மழை நீர் தேக்கம் என 2 பக்கத்திலும் தண்ணீர் தேங்கி கொசுவை உற்பத்தி செய்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இந்நிலையில் கால்வாய் கட்ட ஒதுக்கப்பட்ட நிதி வேறு பணிக்கு பயன்படுத்தப் போவதாக வந்த தகவலால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நகராட்சி பொறியாளர் ரவிச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தி கால்வாய் மற்றும் சாலை உடனடியாக அமைத்து தருவதாக உறுதி அளித்தார். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. 

இனிமேலும் நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டினால் போராட்டங்கள் தீவிரமடையும் என்று அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே தென்றல் நகர்¸ குபேரன் நகர் மக்கள் கால்வாய் பிரச்சனைக்காக போராடி வரும் நிலையில் தற்போது ராமஜெயம் நகர் மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!