10ம் வகுப்பு தேர்வில் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 7வது இடம் கிடைத்துள்ளது. பிளஸ் 2 தேர்வில் 37வது இடம் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் பிளஸ்2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 252 அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த மாதம் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதினர். 14¸036 மாணவர்ள் மற்றும் 14¸181 மாணவிகள் என மொத்தம் 28¸218 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இன்று வெளியான தேர்வு முடிவில் 11¸714 மாணவர்கள்¸ 13¸198 மாணவிகள் என மொத்தம் 24¸912 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 88.28 ஆகும். மாணவர்கள் 83.46 சதவீதமும்¸ மாணவிகள் 93.06 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதன் மூலம் மாவட்ட அளவில் 37-வது இடத்தில்¸ திருவண்ணாமலை மாவட்டம் உள்ளது.
இதேபோல திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 504 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 16¸622 மாணவர்கள்¸ 15¸583 மாணவர்கள் என மொத்தம் 32¸205 மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். இவர்களில் 14¸971 மாணவர்களும்¸ 15¸002 மாணவிகளும் என மொத்தம் 29¸973 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 93.07 ஆகும். இதில் 90.07 சதவீத மாணவர்களும்¸ 96.27 சதவீத மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதன் மூலம் மாவட்ட அளவில் 7 இடத்தை¸ திருவண்ணாமலை மாவட்டம் பிடித்துள்ளதாக முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.