Homeஅரசு அறிவிப்புகள்நிவர் புயல்:திருவண்ணாமலை கலெக்டர் வேண்டுகோள்

நிவர் புயல்:திருவண்ணாமலை கலெக்டர் வேண்டுகோள்

 

வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள நிவர் புயல் நாளை 25ந்தேதி  மாமல்லபுரம்¸ காரைக்கால் இடையே கரையை கடக்கும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புதிதாக உருவாகியுள்ள “நிவர்” காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி¸ 24-ம் தேதி கடலோர மாவட்டங்களில் மிக கனமழையும்¸ 25-ம் தேதி மாலை பாண்டிச்சேரி அருகில் கரையை கடக்கும்போது¸ மிக கனமழையுடன் 120 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்றாக வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று 23ந் தேதி நிவர் புயல் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்¸ வருவாய்த் துறை¸ காவல் துறை¸ ஊரக வளாச்சி மற்றும் ஊராட்சித் துறை¸ நகராட்சி நிர்வாகம்¸ பேரூராட்சிகள்¸ பொதுப்பணித் துறை¸ நெடுஞ்சாலைத் துறை¸ சுகாதாரத் துறை¸ கால்நடை பராமரிப்புத் துறை¸ தமிழ்நாடு மின்சார வாரியம் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. 

இதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் போர்கால அடிப்படையில் முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் “நிவர்” புயலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய பேரிடர் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தினை கட்டணமில்லா தொலைபேசி 1077,04175- 232377, 233344,233345 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும்¸ கீழ்கண்ட 18 வட்டார அளவிலான தொலைபேசி எண்களிலும் பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம்.

See also  சிறு தீவுடன்¸பறவைகள் தங்க தயாராகும் தி.மலை ஏரி

1 திருவண்ணாமலை    04175 – 253074,250541

2 துரிஞ்சாபுரம் –             04175 – 241266,241201

3 கீழ்பென்னாத்தூர்      04175 – 242222,242988

4 தண்டராம்பட்டு             954188 – 246899

5 செங்கம்                        954188 – 222322

6 புதுப்பாளையம்             954188 – 242432

7 கலசப்பாக்கம்               954181 – 241222,241026

8 போளுர்                         954181 – 222040

9 ஜவ்வாதுமலை                954181 – 245245, 245420

10 ஆரணி                              954173 – 226353

11 மேற்கு ஆரணி                954173 – 226088

12 செய்யாறு                         954182 – 222258

13 வெம்பாக்கம்             954182 – 247221

14 அனக்காவூர்              954182 – 222253

See also  இதுவரை வாக்காளிக்காத முதியவர்

15 பெரணமல்லூர்               954183 – 245204

16 சேத்பட்                                 954181 – 252229

17 வந்தவாசி                         954183 – 225064

18 தெள்ளார்                         954183 – 244024

 

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட பொது மக்களுக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி இன்று விடுத்துள்ள வேண்டுகோளில் ‘புயல் மற்றும் கனமழை காலங்களில் பொதுமக்கள் யாரும் ஆற்றில் குளிக்கவோ மற்றும் கடந்து செல்லவோ வேண்டாம். பழைய கட்டிடங்களில் தங்குவதோ அருகில் செல்வவோ வேண்டாம். அவ்வாறு பழைய கட்டடங்களில் தங்கி இருப்பவர்கள் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறி அரசு மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாம்கள்¸ பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

இடி மின்னல்கள் அடிக்கடி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இடி மின்னல் தாக்கும் போது குடைகளை உபயோகப்படுத்தக் கூடாது¸ மரத்தின் அடியில் நிற்கக் கூடாது¸ திறந்தவெளியில் இருக்கக் கூடாது மற்றும் நீர்நிலைகளில் குளிக்க கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அருகில் உள்ள அரசு முகாம்களில் அனைத்து வசதிகளுடன் பாதுகாப்பாக தங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும்¸ பருவமழை மற்றம் வெள்ள காலங்களில் பொது மக்கள் மெழுவர்த்தி¸ தீப்பெட்டிகள் போன்றவற்றை சேகரித்துக் கொண்டு தயார் நிலையில் இருக்க வேண்டும். மருந்து மற்றும் பால் பவுடர்¸ உதிரி பேட்டரிகள் கொண்ட டார்ச்சுகள்¸ சுகாதார பொருட்கள்¸ முகக்கவசங்கள் ஆகிய பொருட்களை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். 

கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவுரையின்பேரில் திருவண்ணாமலைக்கு  நகராட்சியால்  கீழ்கண்ட பள்ளிகள் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டுள்ளது.

See also  திருவண்ணாமலையில் நீச்சல் பயிற்சி வகுப்புகள் துவக்கம்

1)தாமரை நகர் பகுதிகளுக்கு தாமரை நகர் வீட்டுவசதி வாரிய சமுதாய மண்டபம்¸ தாமரை நகர் நகராட்சி பள்ளி

2)மாரியம்மன் கோயில் தெரு பகுதிகளுக்கு நியூ மூன் நர்சரி பள்ளி¸ சூர்யா  நகர். கானா நகர் நகராட்சி பள்ளி

3)கீழ்நாத்தூர் காலனி பகுதிகளுக்கு நகராட்சி ஆரம்பப்பள்ளி¸கீழ்நாத்தூர்.

4)காந்தி நகர்¸தியாகி அண்ணாமலை பிள்ளை நகர்  பகுதிகளுக்கு குட்வில் நர்சரி அண்ட் பிரைமரி பள்ளி¸காந்திநகர் முதல் தெரு.

5)பாவாஜி நகர் பகுதிகளுக்கு அருணா நர்சரி அண்ட் பிரைமரி பள்ளி¸ அய்யாக்கண்ணு  முதலி தெரு. 

6)கடலை கடை மூலை மற்றும் அதனை சுற்றியுள்ள  பகுதிகளுக்கு பழைய நகராட்சி அலுவலகம் 

7)குமர கோயில் தெரு மற்றும் கன்னி கோயில் தெரு பகுதிகளுக்கு கன்னிகா பரமேஸ்வரி பள்ளி.

8)அருணகிரிபுரம் பகுதிகளுக்கு நகராட்சி தொடக்கப்பள்ளி மணியாரித் தெரு.

9)அவலூர்பேட்டை ரோடு¸ போளுர் ரோடு  பகுதிகளுக்கு ஈசானியம் மடம்.

10)வேட்டவலம் ரோடு பகுதிகளுக்கு நகராட்சி நடுநிலைப்பள்ளி¸ கீழ்நாத்தூர்.

எனவே புயலால் பாதிக்கப்படக்கூடிய பொதுமக்கள் மேற்கண்ட நிவாரண மையங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறும் அவசர உதவிக்கு 04175 237047 என்ற எண்ணில் நகராட்சியில் இயங்கும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்  எனவும்  திருவண்ணாமலை நகராட்சி  ஆணையாளர் வே. நவேந்திரன் தெரிவித்துள்ளார் 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!