Homeஅரசு அறிவிப்புகள்புயல் தாக்கினால் 75 பகுதிகள் பாதிப்புக்குள்ளாகும்

புயல் தாக்கினால் 75 பகுதிகள் பாதிப்புக்குள்ளாகும்

 

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய பேரிடர் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

25ந் தேதி கரையை கடக்கும் 

மாமல்லபுரம் – காரைக்கால் இடையே 25ந் தேதி நிவர் புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை¸ நாகப்பட்டினம்¸ தஞ்சாவூர்¸ திருவாரூர்¸ கடலூர்¸ விழுப்புரம்¸ செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இடையேயும்¸ மாவட்டங்களுக்குள்ளும் 24.11.2020 மதியம் 1 மணி முதல் பேருந்துப் போக்குவரத்து மறு உத்தரவு வரும்வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. பொதுமக்களும்¸ தங்கள் சொந்த வாகனங்கள் மூலம் அத்தியாவசியத் தேவைகள் தவிர மற்ற தேவைகளுக்காகப் பயணங்கள் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மழையும்¸ புயலும் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால்¸அத்தியாவசியப் பொருட்களை முன்கூட்டியே இருப்பு வைத்துக் கொள்ளவும் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பாக நிவர் புயல் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர்  சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில்¸ மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  எஸ். அரவிந்த்¸ மாவட்ட வருவாய் அலுவலர் பொ. இரத்தினசாமி¸ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்  பா. ஜெயசுதா¸ கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வினிதா¸ உதவி ஆட்சியர் (பயிற்சி) அமீத்குமார்  மற்றும் பல்வேறு துறைகளின் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

See also  குவைத் நாட்டில் 500 பெண்களுக்கு வேலைவாய்ப்பு

ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது

மண்டல குழு அலுவலர்கள் நியமனம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது நீர் நிலைகளால் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளாக 75 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதிகளை கண்காணித்திட முதன்மை அலுவலர்கள் பல்வேறு பணிகளை மேற்கொள்ள துறை சார்ந்த மண்டல குழு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இக்குழுக்கள் பேரிடர் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளைகள ஆய்வு செய்ய தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்படும் நபர்களுக்கு நிவாரணம்

வட்டாட்சியர்கள் தங்கள் பகுதியில் உள்ள நீர் நிலைகளை ஆய்வு செய்து பாதிப்புகள் ஏற்படா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மற்றும் குடிசை வீடுகள் பழைய ஓட்டு வீடுகளில் தங்யுள்ள நபர்களை பாதுகாப்பான நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும்¸ அம்மையத்தில் தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்கு கோவிட்-19 நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு தயார் நிலையில் வைத்திட வேண்டும். புயலால் பாதிக்கப்படும் நபர்களுக்கு நிவாரணங்கள் வழங்கிட தயார் நிலையில் இருக்கவும்¸ பொது விநியோக திட்டத்தில் உள்ள பொருட்களை இருப்பு வைத்திருக்க வேண்டும்.

See also  தடுப்பூசி போட்டவர்களுக்குத்தான் டாஸ்மாக்கில் சரக்கு

செயற் பொறியாளர்கள்¸ பொதுப் பணித் துறை¸ நீர் பாசனம்¸ கட்டிடம் நீர் ஆதாரங்களை தொடர் கண்காணிப்பு செய்து தேவையான இடங்களில் மணல் காலிகோணிப்பைகள் சவுக்கு கட்டைகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை வைத்திருக்க வேண்டும். பொது மக்கள் தங்க வைக்கப்படும் நிவாரணமைய கட்டிடங்கள் தனியார் கல்யாண மண்டபங்கள் மற்றும் அனைத்து அரசு கட்டிடங்களின் உறுதித் தன்மையையும்¸ தேவையான குடிநீர் மற்றும் மின்சார வசதிகள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். நெடுஞ்சாலை துறையில் காற்றினால் சாலையில் விழும் மரங்கள் மற்றும் கிளைகளை உடனுக்குடன் அகற்றிட தேவையான ஜே.சி.பி போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

ஏரிகள் கண்காணிப்பு 

நகராட்சி மற்றும் ஊராட்சி அலுவலர்களுக்கு ஊராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் வலுவிழந்துள்ள ஏரிகரைகள் மற்றும் மதகுகளை கண்டறிந்து பழுது பார்க்கவும்¸ மழைக் காலங்களில் ஊராட்சிக்குட்பட்ட ஏரிகளின் நீர் அளவை கண்காணித்து வரவேண்டும். மேலும்¸ கழிவு நீர் வாய்கால்கள் அடைப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளவும் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்திட உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையின் மூலம் ஆம்புலன்ஸ் வாகனங்கள்¸ மருத்துவக் குழுக்கள் அனைத்து வட்டங்களிலும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்¸ தேவையான அனைத்து மருந்துகள்¸ மருத்துவ உபகரணங்களை தயார் நிலையில் இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.

கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள் கால்நடை மருந்தகங்களில் தயார் நிலையில் வைத்திட வேண்டும் மற்றும் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பேரிடரால் இறந்த கால்நடைகளை கால்நடை மருத்துவர்கள் விரைந்து பிரேத பரிசோதனை மேற்கொள்ள பாதுகாப்பான இடங்களை தேர்வு செய்ய வேண்டும். பள்ளிக் கல்வித் துறையின் மூலம் பொதுமக்களை தற்காலிகமாக தங்க வைக்க பள்ளியின் சாவியை எந்த நேரத்திலும் வருவாய் துறை அலுவலர்கள் கேட்கும் போது ஒப்படைக்கும் வகையில் அந்தந்த கிராமத்திலுள்ள பொறுப்பான ஒரு நபரிடம் ஒப்படைக்க வேண்டும். அனைத்து பள்ளி மற்றும் விடுதி கட்டிடங்கள் நல்ல நிலையில் உள்ளதா என உறுதி செய்து கொள்ள வேண்டும்.

See also  டிஎன்பிஎஸ்சி எழுத 1மணி நேரம் முன்னதாக வர அழைப்பு

தமிழ்நாடு மின்சார வாரியம் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு தாழ்வாக செல்லும் மின் ஒயர்களை மாற்றியும்¸ பழுதடைந்துள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளை கண்டறிந்து உடனடியாக சரி செய்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கட்டணமில்லா தொலைபேசி 

புயலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய பேரிடர் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தினை தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண். 04175-1077 மற்றும் 04175-232377 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!