Homeசுகாதாரம்டன் கணக்கில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

டன் கணக்கில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

டன் கணக்கில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
திருவண்ணாமலை பஜாரில் கலெக்டர் நேரில் ரெய்டு
1 வருடமாக நடவடிக்கை எடுக்கவில்லை -வியாபாரி
பூமி வந்து என்னிடம் மனு கொடுத்து கதறியது -கலெக்டர்
தயாரிக்கும் தொழிற்சாலையை தடை செய்ய வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

திருவண்ணாமலை பஜாரில் உள்ள ஒரு கடையில் கலெக்டர் நேரில் நடத்திய ரெய்டில் சுமார் 2 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது 1 வருடமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சொன்ன வியாபாரியிடம், பூமி என்னுடைய வீட்டிற்கு வந்து மனு அளித்ததாக கலெக்டர் தெரிவித்தார்.

ரகசிய தகவல்

28 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், இவற்றை மீறி விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்படும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் எச்சரிக்கை விடுத்திருந்தார். (முழு செய்தி:-https://www.newsthiruvannamalai.com/2024/03/seal-collector-order-for-shops-if-there-is-plastic-material.html )

இந்நிலையில் திருவண்ணாமலை பஜாரில் ஒரு குறிப்பிட்ட கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கலெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்று மாலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன், அதிகாரிகளுக்கு எங்கு செல்கிறோம் என தகவல் ஏதும் தெரிவிக்காமல் நகராட்சி ஆணையாளரை மட்டும் அழைத்துக் கொண்டு திருவண்ணாமலை பஜாருக்கு சென்றார். போக்குவரத்து அதிகம் உள்ள குறுகலான சந்தான மண்டித் தெருவை நோக்கி சென்ற கலெக்டரின் காரை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

See also  கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தயார் நிலை

கருவாட்டுக் கடை பகுதி என்றழைக்கப்படும் சிவன்படத் தெருவில் ஒரு கடையின் முன்பு சென்று கலெக்டரின் கார் நின்றது. அந்த கடையின் பெயர் நியூ தீபம் பிளாஸ்டிக் & எசன்ஸ் மார்ட் ஆகும். கடைக்குள் நுழைந்த கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

டன் கணக்கில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

மூட்டை, மூட்டையாக பறிமுதல்

இதன்பிறகு கோட்டாட்சியர் மந்தாகினி தலைமையில் வருவாய்துறை அலுவலர்களும், நகராட்சி அலுவலர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் இணைந்து அந்த கடையிலும், கடையோடு இணைந்த குடோனிலும் இருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், கைப்பை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த பொருட்கள் மூட்டையாக கட்டி நகராட்சி லாரி மூலம் ஏற்றிச் செல்லப்பட்டது.

அனைத்து பொருட்களும் லாரியில் ஏற்றிச் செல்லும் வரை ஏறக்குறைய 3 நேரத்திற்கும் மணி மேலாக கலெக்டர் அங்கேயே இருந்தார். அப்போது அங்கு வந்த வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், இந்த பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலையை தடை செய்ய வேண்டும் என கலெக்டரிடம் கேட்டுக் கொண்டனர். அதற்கு கலெக்டர் எங்கு தயாரிக்கிறார்கள் என சொல்லுங்கள், தடுக்கிறோம், இதையெல்லாம் தடுத்தால்தான் ரோட்டுக்கு குப்பை வராது, இதை விட்டு விட்டு ரோட்டில் குப்பைளை அள்ளினால் திரும்ப திரும்ப குப்பை வந்து கொண்டுதான் இருக்கும், கடைகாரருக்கு லாபத்தில்தான் நஷ்டம், எத்தனை பேருக்கு இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும்? என்றார்.

See also  பல்லி விழுந்த உணவை பரிமாறிய 2 பேர் சஸ்பெண்ட்

கடையின் உரிமையாளர் இனிமேல் விற்பனை செய்ய மாட்டோம், இந்த ஒரு முறை விட்டு விடுங்கள் என கேட்டார். அதற்கு கலெக்டர், நேற்று இரவு பூமி என் வாசலில் நின்று மனு கொடுத்து விட்டு கதறியது. என்னை ரொம்ப கொல்லாறாங்க என்றது என சொன்னார். 1 வருடமாக விற்பனை செய்ய விட்டார்கள். யாரும் ரெய்டுக்கு வரவில்லை என வியாபாரி சொல்ல, இனிமேல் நான் ரெய்டுக்கு வருவேன், நீங்கள் சொன்ன மன்னிப்பை பூமி கேட்க மாட்டேங்குது என கலெக்டர் கூறினார்.

காலாவதியான தக்காளி சாஸ்

அந்த கடையில் மட்டும் சுமார் 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அங்கு காலாவாதியான தக்காளி சாஸ்சும் கைப்பற்றப்பட்டுள்ளது.

பிறகு செய்தியாளர்களிடம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறியதாவது,

ஒரு முறை பயன்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட நெகிழியினை சுற்றுசூழல் பாதிப்பு ஏற்பட்டு புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்கள் மனிதர்களுக்கு ஏற்படும் காரணத்தினால் இன்றைய தினம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 10 பேரூராட்சிகள் மற்றும் 4 நகராட்சிகளில் ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழியினை விற்பனை செய்யும் மொத்த விற்பனையாளர்கள் கடைகள் ஆய்வு செய்து, அங்குள்ள நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

See also  பொதுமக்கள், பக்தர்களிடமிருந்து சிறுநீர் கழிக்க ரூ.10 வசூல்

குப்பைகளை நெகிழி பைகளில் கட்டி வீசுகின்ற காரணத்தினால், அப்புற படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. சுற்றுசூழல் பாதுகாப்பு அச்சுறுத்தப்படுகிறது, நிலத்தடி நீர் மட்டம் உயராமல் இருக்கிறது. மைக்ரோப்ளாஸ்டிக் மனித உடலினுள் சேர்கிறது. எனவே பசுமையான திருவண்ணாமலை மாவட்டத்தை உருவாக்க வேண்டுமானால் தடைசெய்யப்பட்ட நெகிழியினை பயன்படுத்துவதை அனைவரும் தவிர்த்து, தூய்மையான திருவண்ணாமலை உருவாக்க வேண்டும்.

தற்போது வரை 10 டன் ஒரு முறை பயன்படுத்துகின்ற தடைசெய்யப்பட்ட நெகிழி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Link:-http://www.youtube.com/@AgniMurasu

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!