Homeஆன்மீகம்சித்ரா பவுர்ணமிக்கு 6 சிறப்பு ரயில்கள் இயக்கம்

சித்ரா பவுர்ணமிக்கு 6 சிறப்பு ரயில்கள் இயக்கம்

சித்ரா பவுர்ணமிக்கு 6 சிறப்பு ரயில்கள் இயக்கம்
திருவண்ணாமலையில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கலெக்டர் தகவல்

சித்ரா பவுர்ணமிக்காக திருவண்ணாமலைக்கு வழக்கமான ரயில்கள் இல்லாமல் 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் திருவண்ணாமலையில் நடைபெற உள்ள சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அனைத்து துறை வாரியாக மேற்கொள்ளப்பட்ட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

23ந் தேதி சித்ரா பவுர்ணமி அன்று திருவண்ணாமலைக்கு சுமார் 25 இலட்சம் பொது மக்கள் மற்றும் பக்தர்கள் பெருமளவில் வருவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக நகரினை இணைக்கும் 9 முக்கிய சாலைகளில் 2500 பேருந்துகளை நிறுத்தும் வண்ணம் 11 தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் நகராட்சி மூலம் 22 இடங்களிலும், ஊராட்சி பகுதிகளில் 33 இடங்களிலும் ஆக மொத்தம் 55 இடங்களில் கார்கள் நிறுத்தும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

See also  தைப்பூசம்:சாட்டையால் அடித்து பேய் ஓட்டும் விநோத விழா

சித்ரா பவுர்ணமிக்கு 6 சிறப்பு ரயில்கள் இயக்கம்

அனைத்து தற்காலிக பேருத்து, கார் நிறுத்தங்களிலும் குடிநீர் வசதி. கழிப்பறைகள், மின் விளக்குகள், காவல் மையம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2500 சிறப்பு பேருந்துகள் 5346 நடைகள் இயக்கப்படவுள்ளது. தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் கிரிவலப்பாதையில் 10 ரூபாய் குறைந்த கட்டணத்தில் தனியார் பேருந்து 20, 81 பள்ளிப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

இது தவிர 18 வழக்கமான நடைகள், 6 சிறப்பு இரயில்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்திற்குள் 3 மருத்துவ குழுக்கள் (இதய மருத்துவருடன்), 85 நிலையான மருத்துவ குழுக்களும், 20 எண்ணிக்கையில் 108 அவசர ஊர்தி வாகனங்களும் 15 மொபைல் அவசர ஊர்தியும் நிறுத்தப்படும். மேலும் பாதுகாப்பு பணிக்காக 5000 காவலர்களும், 15 தீயணைப்பு வாகனங்களும், 184 தீயணைப்பு வீரர்களும், பதட்டமான இடங்களாக கருதப்படும் 7 இடங்களில் 50 வனத்துறை வீரர்களும் நிறுத்தப்படுவார்கள்.

தற்காலிக பேருந்து நிலையங்கள், கிரிவலப்பாதைகளில் குடிநீர் வசதிகளும், 106 இடங்களில் தற்காலிக கழிப்பறை வசதிகளும் 425 இடங்களில் நிரந்தர கழிப்பறை வசதிகளும் நகராட்சி மூலம் 600 தூய்மைப்பணியாளர்களும் ஊரக வளர்ச்சி துறை மூலம் 1200 பணியாளர்களம் பணியமர்த்தப்படவுள்ளனர்.

See also  முதன்முறையாக ரூ.3 கோடியை தாண்டிய உண்டியல் காணிக்கை

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி. கூடுதல் ஆட்சியர் ரிஷப் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Link:-http://www.youtube.com/@AgniMurasu

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!