Homeசெய்திகள்ஊராட்சி தலைவர்களை வறுத்தெடுத்த கலெக்டர் முருகேஷ்

ஊராட்சி தலைவர்களை வறுத்தெடுத்த கலெக்டர் முருகேஷ்

ஊராட்சி தலைவர்களை வறுத்தெடுத்த கலெக்டர் முருகேஷ்

செங்கம் ஒன்றியத்தில் 2 வருடமாக பணிகள் கிடப்பில் இருப்பதை பார்த்து கோபமான கலெக்டர் டெண்டரை ரத்து விடுவேன் என ஊராட்சி தலைவர்களை எச்சரித்தார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ்¸ ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறார். தண்டராம்பட்டு¸ திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியங்களில் ஆய்வு பணிகளை முடித்து விட்டு இன்று செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தை திருவண்ணாமலையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் நடத்தினார். 

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர்கள் இரா.அருண்¸ உமா லட்சுமி¸ பொ.இமயவரம்பன்¸ உதவி செயற்பொறியாளர் சங்கர்¸ செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எழிலரசு¸ ரபியுல்லா செங்கம் வட்டாட்சியர் முனுசாமி¸  அரசுத்துறை அலுவலர்கள்¸ ஊராட்சி செயலாளர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 44 கிராம ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் நடைபெறுகின்ற அனைத்து திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.

ஊராட்சி தலைவர்களை வறுத்தெடுத்த கலெக்டர் முருகேஷ்

அப்போது பல ஊராட்சிகளில் 2020ம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட வேலைகள் கிடப்பில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஆலப்புத்தூர் ஊராட்சியில் ஒருவருடைய பட்டா இடத்தில் அரசு கட்டிடம் கட்டப்படுவதை எதிர்த்து அந்த இடத்தின் உரிமையாளர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருப்பதாக ஊராட்சி மன்றத் தலைவர் கூறினார். பொது இடத்தில் தானே அரசு கட்டிடம் கட்ட வேண்டும்¸ பட்டா இடத்தில் வாய்க்கால்¸ ரோடு போட்டால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்த கலெக்டர் முட்டாள் மாதிரி வேலை செய்யாதீர்கள்¸ புத்தியோடு வேலை செய்யுங்கள் என அறிவுரை வழங்கினார். 

ஆண்டிப்பட்டு ஊராட்சியில் வேலைக்கான அனுமதியை பெற்று விட்டு ஏன் எந்த வேலையையும் ஆரம்பிக்காமல் இருக்கிறீர்கள் என பஞ்சாயத்து தலைவரை கேட்டார். அதற்கு அவர் மவுனமாக இருந்தார். உங்கள் ஊராட்சியில் நடைபெறும் வேலையில் ஏன் ஆர்வம் காட்டாமல் இருக்கிறீர்கள்? என்ற கலெக்டர் புதூர் ரோடு பணி முடிந்ததா? என ஊராட்சி செயலாளரிடம் கேட்டார் அதற்கு அவர் திருதிருவென விழித்தார். ஜமுனாமரத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர்கள் வளர்ச்சி பணிகளை பற்றி கேட்டால் புள்ளி விவரத்தோடு ஆர்வமாக பதிலளிக்கின்றனர். ஆனால் செங்கம ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தலைவர்களுக்கு எதுவுமே தெரிவதில்லை. எதற்காக பஞ்சாயத்து தலைவராக உட்கார்ந்து இருக்கிறீர்கள்? கிராமத்தில் வசிக்கிறீர்களா? இல்லையா? எல்லா வேலையும் நாமே செய்ய வேண்டும் என ஆசை இருக்கலாம்¸ ஆனால் பேராசை இருக்க கூடாது¸ அந்த ஆசை படுவதற்கும் தகுதி வேண்டும்¸ தகுதியில்லையென்றால் வேலையை எடுக்காதீர்கள். அடுத்தவர்களுக்கு வாய்ப்பு அளித்து ஒதுங்கி விடுங்கள் என கலெக்டர் கோபமாக கூறினார். 

ஊராட்சி தலைவர்களை வறுத்தெடுத்த கலெக்டர் முருகேஷ்

அன்வராபாத்¸ அரட்டவாடியில் வேலைகள் ஆரம்பிக்கப்படாததை பார்த்து அடுத்த வாரம் வேலையை ஆரம்பிக்கவில்லை என்றால் ஒர்க் ஆர்டரை கேன்சல் செய்து விடுவேன் என எச்சரித்தார். மேல்பள்ளிப்பட்டில் 150 சதுர அடியில் கட்ட ஒதுக்கப்பட்ட கட்டிடத்தை 2020லிருந்து கட்டாமல் இருப்பததை பார்த்து என்ன வேலை செய்கிறீர்கள்? வயிறு வலிக்க கத்திட்டு இருக்கிறேன். சொரணையோடு வேலை செய்யணுமா¸ இல்லையா என கோபமாக ஒன்றிய பொறியாளர்களை கடிந்து கொண்டார். பக்கிரிபாளையம்¸ வளையாம்பட்டில் பணிகள் கிடப்பில் இருப்பதை பார்த்து ஒப்பந்தத்தை ரத்து செய்து விடுவேன்¸ சிபாரிசை ஏற்க மாட்டேன் என கூறினார். 

பிஞ்சூரில் வேலை ரத்து செய்யப்பட்டு திருப்பி ஒப்படைக்க பணம் ரூ.40 லட்சம் பொதுநிதியில் வீணாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கலெக்டர் முருகேஷ்¸ கண்களில் தண்ணீர் வருகிறது. மக்களுக்கு தலைவரோ¸ செயலாளரோ பதில் சொல்வதில்லை. நான்தான் பதில் சொல்கிறேன் என்றார். ஊராட்சி செயலாளர்கள்¸ அரசு ஊழியர்கள். அவர்களுக்கு அரசியல் இருக்க கூடாது¸ இது பற்றி ஏகப்பட்ட புகார்கள் வருகின்றன என்றார். 

3 மணி நேரம் ஊராட்சி மன்றத் தலைவர்களை வறுத்தெடுத்த கலெக்டர் முருகேஷ்¸ பிரதம மந்திரி வீடுகள் வழங்கும் திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டம் கடைசியில் உள்ளது¸ ஊராட்சி தலைவர்கள் மனது வைத்தால் மேலே வர முடியும் என வேண்டுகோளையும் வைத்தார். 

See also  தேச நலனுக்காக கிரிவலப்பாதையில் அங்கப்பிரதட்சணம்

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!