திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள பஞ்சமுக தரிசன இடத்தில் தவறான காரியங்கள் நடைபெறுவதை தடுக்காவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக பா.ஜ.க ஓ.பி.சி. அணி எச்சரிக்கை விடுத்துள்ளது. திருவண்ணாமலை பாரதிய ஜனதா கட்சி ஓபிசி அணி செயற்குழு கூட்டம் மாவட்ட ஓபிசி அணி தலைவர் எம்.டி. சுந்தர்ராஜ் தலைமையில் திருவண்ணாமலையில் இன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஓபிசி அணி மாநில பொதுச்செயலாளர் டாக்டர் பழனி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஓபிசி அணி மாநில துணைத்தலைவர் சி. ஏழுமலை¸ திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் ஆர்.ஜீவானந்தம் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் எம். சதீஷ் குமார்¸ரமேஷ்¸ மாவட்ட துணைத் தலைவர் முருகன்¸ மாவட்ட இளைஞரணி தலைவர் பாலாஜி¸ மாவட்ட எஸ் சி அணித்தலைவர் ஏழுமலை¸ மாவட்ட அலுவலக செயலாளர் உத்தர குமார்¸ மாவட்ட இளைஞரணி துணை தலைவர் அன்பு¸ மாவட்ட பிரச்சார பிரிவு செயலாளர் சரவணன்¸ ஓபிசிஅணி மாவட்ட பொதுச் செயலாளர்கள் சாமிநாதன்¸ யுவராஜ்¸ ஓபிசி அணி மாவட்ட துணைத்தலைவர் தினகரன்¸ ஓபிசி அணி மாவட்ட செயலாளர்கள் திருமாறன்¸கரூர் ராஜா¸ சிவாஜி¸ செயற்குழு உறுப்பினர் பழனி¸ ஓபிசி அணி நகரத் தலைவர் செந்தில்¸ நகர பொதுச் செயலாளர் மணிகண்டன்¸ஜெகன்¸ சுப்பிரமணி¸ நகர துணை தலைவர்கள் பிரகாஷ்¸ சதீஷ்¸ நகர செயலாளர்கள் ராஜேஷ்¸ ரமேஷ்¸ நகர துணை செயலாளர் சிவசுப்பிரமணி¸ நகர செயற்குழு உறுப்பினர் செண்பகம் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள பஞ்சமுக தரிசனம் ஆலயத்தில் அமைந்துள்ள 5 சிவலிங்கங்களுக்கு சரியான முறையில் பூஜை, புனஸ்காரங்கள் நடப்பதில்லை. மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள ஒளி விளக்குகள்பராமரிக்கப்படாமல் இருப்பதால் அங்கு இரவு நேரங்களில் தவறான செயல்கள் நடக்கிறது. இதனால் அங்கு வரும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. அங்கு பணிபுரியும் மணி சுவாமிகள் என்பவர் மின் இணைப்புகளை வேண்டுமென்றே துண்டித்து விடுவதால் அப்பகுதி இரவு நேரங்களில் இருளடைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக விஷ ஜந்துக்களான தேள்¸ பாம்பு போன்றவைகளால் மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக இந்த குறைகளை களைய மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் ஓ.பி.சி அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்ற தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
திருவண்ணாமலை அடுத்த நாயுடு மங்கலம் பகுதியில் 30 ஆண்டுகளாக ஒரு வங்கி மட்டும் செயல்படுகிறது பொதுமக்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளதால் கூடுதலாக ஒரு வங்கியை மருத்துவம்பாடி கிராமத்தில் அமைத்து தர வேண்டும் . மத்திய அரசு செங்கம் பகுதியில் உள்ள 14 ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தில் தொழிற்சாலை அமைத்து வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.