Homeசுகாதாரம்தன்னைத் தானே தனிமைபடுத்திக் கொண்டார் தி.மலை கலெக்டர்

தன்னைத் தானே தனிமைபடுத்திக் கொண்டார் தி.மலை கலெக்டர்

தி.மலை கலெக்டர்

தனது உதவியாளர் மற்றும் உறவினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார். 

கொரோனா காலத்திலும் பம்பரமாக சுழன்று மக்கள் பணியாற்றியவர் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி. கொரோனாவால் ஒவ்வொரு திங்கட்கிழமையன்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்வு கூட்டம் ரத்து செய்யப்படுவதாகவும்¸ அதற்கு பதில் தொலைபேசி¸ வாட்ஸ் அப் வழியாக மக்கள் குறைகளை தெரிவிக்கலாம் எனவும் அறிவித்தார். இதையும் மீறி தன்னை நாடி வந்த நூற்றுக்கணக்கானவர்களிடம் கலெக்டரே நேரில் மனுக்களை பெற்றார். ஒவ்வொரு திங்கட்கிழமையும் 600க்கும் மேற்பட்டவர்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். இதே போல் வளர்ச்சி திட்ட பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டார். 

இந்நிலையில் அவரது உதவியாளருக்கும்¸ உறவினருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து கலெக்டர் கந்தசாமி தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். இதனால் கடந்த திங்கட்கிழமை முதல் அவர் அலுவலகத்திற்கு வரவில்லை. பொது மக்களிடமிருந்து மனுக்களை சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் மந்தாகினி பெற்று வருகிறார். இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவழை முன்னேற்பாடு நடவடிக்கைகள் மற்றும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அரசு முதன்மைச் செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தீரஜ்குமார் ஐ.ஏ.எஸ் தலைமையில் நடைபெற்றது. இதிலும் கலெக்டர் கந்தசாமி பங்கேற்றவில்லை. 

See also  ஆரணி:தடுப்பூசி போடாத தந்தை-மகளுக்கு ஒமைக்ரான்

அவருக்கு தினமும் பொதுவான மருத்துவ பரிசோதனைகள்  நடைபெறுவதாகவும்¸  அவர் முழு உடல் நலத்துடன் இருப்பதாகவும் மருத்துவத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கலெக்டர் கந்தசாமி தன்னை 7நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட பிறகு மீண்டும் வழக்கமான பணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

திருவண்ணாமலை

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மரம் வெட்டுபவர்கள்¸ பாம்பு பிடிப்பவர்கள் என 4ஆயிரம் பேர் தயார். 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருமழை முன்னேற்பாடு நடவடிக்கைள் மற்றும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் குறித்த மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் ஐ.ஏ.எஸ் அதிகாரி தீரஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. 

இதில் கீழ்கண்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 67 இடங்கள் மிதமான மற்றும் 8 இடங்கள் குறைந்த பாதிக்கப்படக் கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முதல் பணியாளர்கள் ஆண்கள் 1570 நபர்கள்¸ பெண்கள் 549 நபர்கள் களத்தில் உள்ளனர்¸ இவர்களுக்கு முறையான பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. மேலும்¸ கால்நடை பராமரிப்பவர்கள் 949 நபர்களும்¸ மரம் வெட்டுபவர்கள் 726 நபர்களும்¸ பாம்பு பிடிப்பவர்கள் 197 நபர்களும்¸ நீச்சல் அடிப்பவர்கள் 964 நபர்களும் களத்தில் தயார் நிலையில் உள்ளனர்.

பாம்பு பிடிக்கும் பணி

தாழ்வான பகுதிகளில் இருக்கும் பொதுமக்களை தங்க வைப்பதற்காக பள்ளிகள்¸ சமுதாயக் கூடங்கள்¸ திருமண மண்டபங்கள் மற்றும் பிற கட்டிடங்கள் என மொத்தம் 84 நிவாரண மையங்கள் கண்டறியப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு ஒரு மோட்டார் படகு¸ 20 கட்டமரம்¸ ஒரு ஊதப்பட்ட படகு¸ 11¸160 மணல் மூட்டைகள்¸ 103 மரம் அறுக்கும் கருவிகள் 146 ஜே.சி.பி இயந்திரங்கள்¸ 30 ஜெனரேட்டர்கள்¸ 5 பெரிய பம்புகள்¸ 15¸500 காலி பைகள்¸ 221 புகை அடிக்கும் இயந்திரங்கள்¸ 87 மோட்டர் பம்பு செட்கள் தயார் நிலையில் உள்ளன. 

See also  கால்வாய்க்கு ஒதுக்கப்பட்ட ரூ.36 லட்சம் எங்கே? தி.மலை நகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுப்பற்கு பல்வேறு நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது 627 நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உயிரிழப்பு 250 ஆகும். 4338 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருபவர்களின் அடிப்படையில் 259  பகுதிகளாக குறைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைள்¸ பணிகள் குறித்த செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டது. 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!