Homeசெய்திகள்நீதிபதி சந்துரு அறிக்கை-தலைமையாசிரியர்கள் வாங்கவும்

நீதிபதி சந்துரு அறிக்கை-தலைமையாசிரியர்கள் வாங்கவும்

நீதிபதி சந்துரு அறிக்கை-தலைமையாசிரியர்கள் வாங்கவும்
முதன்மை கல்வி அதிகாரி சுற்றறிக்கை

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் ஒரு நபர் குழுவின் புத்தக வடிவிலான அறிக்கையை வாங்க வேண்டும் என்று தலைமையாசிரியர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர்களிடையே சாதி மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துருவின் தலைமையில் ஒருநபர் கமிட்டியை தமிழக அரசு அமைத்திருந்தது. இந்த கமிட்டி 680 பக்கங்கள் கொண்ட அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.

நீதிபதி சந்துரு அறிக்கை-தலைமையாசிரியர்கள் வாங்க வேண்டும்

முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்த நீதிபதி சந்துருவின் அறிக்கையில் சாதியை அடையாளப்படுத்தும் வகையில் மாணவர்கள் கைகளில் கயிறுகள், பொட்டுகள் போன்றவற்றை தடை செய்தல், பள்ளிப் பெயர்களில் சாதி அடையாளம் சொற்களை நீக்க வேண்டும், மிக முக்கியமாக, ஆசிரியர்களை அவ்வப்போது இடமாற்றம் செய்ய வேண்டும் உள்பட மேலும் பல பரிந்துரைகள் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பரிந்துரைக்கு பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. முஸ்லீம் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று சொல்லும் போது இந்து பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்து வரக்கூடாது, கோயில் கயிறை கைகளில் கட்டக் கூடாது என்ற பரிந்துரைகள் உள்நோக்கம் கொண்டவை. இதை தமிழக அரசு முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்திருந்தார்.

See also  2668 அடி உயர மலை மீது தேசிய கொடி ஏற்றிய பாஜக

சமூகத்தின் அடையாளங்களை, கலாச்சாரத்தை அழிக்க நினைக்கும் ஒய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் அறிக்கைக்கு பாஜக செயற்குழு கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த அறிக்கை இந்து விரோத அறிக்கை, ஒரு நபர் கமிஷன் அறிக்கையை அரசு ஏற்கும் என்றால் மக்களை திரட்டி தொடர் போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி அறிவித்திருந்தது.

அதே சமயம் ஒய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் அறிக்கையை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்றுள்ளது. இந்த அறிக்கை ஒரு மதத்திற்கு எதிராக உள்ளதாக பாஜக தலைவர் சொல்கிறார்.அறிக்கையில் எந்த பக்கத்திலும் மதத்திற்கு எதிராக எதுவும் குறிப்பிடப்படவில்லை. பாஜக தவிர அனைத்து கட்சி தலைவர்களும் இந்த அறிக்கையை வரவேற்கிறார்கள் என நிகழ்ச்சி ஒன்றில் ஒய்வு பெற்ற நீதிபதி சந்துரு பேசியிருந்தார். இதற்கு அரசியல் பேச வேண்டும் என்றால் நீதிபதி சந்துரு அதிகாரபூர்வமாக திமுகவில் தன்னை இணைத்து கொள்ளலாம் என பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்திருந்தார்.

இப்படி நீதிபதி சந்துருவின் அறிக்கை விவாத பொருளாக மாறியிருக்க, திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, தலைமையாசிரியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

See also  கொரோனா நிதிக்கு சேமிப்பு பணத்தை தந்த மாணவன்

அந்த சர்குலரில் மேற்கண்ட பார்வையின் படி கல்வி நிறுவனங்களில் (பள்ளிகள், கல்லூரிகள்) சாதிய வன்முறைகள் தொடர்பான நீதியரசர்.திரு.கே.சந்துரு அவர்களின் ஒரு நபர் குழு அறிக்கை புத்தக வடிவில் (680 பக்கங்கள் கொண்ட 6 இணைப்புகள் மற்றும் 15 அத்தியாயங்கள்) வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இவ்வறிக்கை விருப்பம் உள்ளவர்கள் இணைக்கப்பட்டுள்ள வழிமுறைகளின் படி பெற்றுக்கொள்ள வழிவகை செய்ய அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது என குறிப்பிட்டு முதன்மை கல்வி அலுவலர் கையொப்பம் இட்டுள்ளார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!