Homeசெய்திகள்அண்ணாமலையார் கோயிலில் துளையிடப்பட்ட எண்ணிக்கை எவ்வளவு?

அண்ணாமலையார் கோயிலில் துளையிடப்பட்ட எண்ணிக்கை எவ்வளவு?

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவர், தூண், கருங்கல் பகுதிகளில் எவ்வளவு துளைகள் இடப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு விவரம் இல்லை என கோயில் நிர்வாகம் பதில் அளித்துள்ளது.

24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் 6 பிரகாரங்களையும், 9 ராஜகோபுரங்களையும் கொண்டதாக விளங்கி வருகிறது. கோயிலுக்குள் 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்களைக் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதன் அருகே பாதள லிங்கம், 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் ஆகியவை உள்ளன.

நடராஜர் முகத்தில் துளையிட்டு பேன் பொருத்திய சம்பவம்

இந்நிலையில் கூட்டத்தை ஒழுங்கு படுத்திடவும், மின் சாதனங்களை பொருத்துவதற்காகவும் கோயிலுக்குள் கருங்கற்கள், சிற்பங்கள் துளையிடப்பட்டதாக புகார்கள் எழுந்தன. துவாரபாலகர் முகத்தை சேதப்படுத்தி சிசிடிவி கேமரா பொருத்தியது. கல்யாண மண்டபத்தில் நடராஜர் சிற்பத்தில் துளையிட்டு பேன் பொருத்தியது போன்ற படங்கள் சமூக வலைத்தளங்களில் உலா வந்து பரபரப்பை ஏற்படுத்தின.

இது சம்மந்தமாக சமூக ஆர்வலர் அ.ஏழுமலை, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்திற்கு கேள்விகளை எழுப்பியிருந்தார்.

See also  கட்டப்பஞ்சாயத்துகாரர்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்- எஸ்.பி

அதன் விவரம் வருமாறு,

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், எந்த மன்னர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது என்ற கேள்விக்கு தொல்லியல் துறையை அணுகி தகவல் பெற்று கொள்ளுமாறு கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், வடக்கு கோபுரம் அருகில் உள்ள வடக்கு அம்மணி அம்மாள் மடம் அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமானதா என கேட்கப்பட்டதற்கு அம்மணி அம்மாள் மடம் இத்திருக்கோயில் மற்றும் நிர்வாகத்திற்கு தொடர்புடையவை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மணிஅம்மாள் மடம் அண்மையில் இடிக்க அல்லது அப்புறப்படுத்த பெறப்பட்ட உத்தரவு நகல் கேட்கப்பட்டதற்கு அம்மணி அம்மன் மடத்தினை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்திருந்த நிலையில் அதனை இத்திருக்கோயில் நிர்வாகம் மூலம் ஆக்கிரமிப்பினை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பதிலளிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலையார் கோயிலில் துளையிடப்பட்ட எண்ணிக்கை எவ்வளவு?

தொல்லியல் துறை அலுவலர் நியமனம், ஊதியம் போன்ற விவரம் கேட்கப்பட்டதில் திருவண்ணாமலை மண்டலத்தில் தொல்லியல் துறை ஆலோசகராக (ஒய்வு) வெங்கடேசன் என்பவர் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலையார் கோயில் சுற்றுசுவர் அருகில் தற்போது கட்ட திட்டமிட்டப்பட்ட பணிகள் குறித்து துறை தலைமையிடம் பெறப்பட்ட முன் அனுமதி அல்லது உத்தரவு சார்ந்து பெறப்பட்ட ஒப்புதல் நகல் கேட்கப்பட்டற்கு கோயில் சுற்றுசுவருக்கு வெளியில் ஏதேனும் கட்டுமானம் செய்யும் பட்சத்தில் உரிய அனுமதியின்படியே மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

See also  பூங்காவிற்கு ரூ.1 கோடி செலவிடப்பட்டதில் முறைகேடு?

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உள்பகுதிகளில் சுவர், தூண், கருங்கல் பகுதிகளில் உலோக வேலி, மின்சாதனங்கள் பொருத்துதல், தடுப்பு வேலிகள் அமைக்க துளையிடப்பட்டது எண்ணிக்கை எவ்வளவு என்று கேட்கப்பட்டதற்கு மனுதாரர் கோரும் விவரம் இவ்வலுவலகத்தில் இல்லை என பதிலளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தற்போது உள்ள பழைய ஆவணங்கள் அடிப்படையில் திருவண்ணாமலை நகராட்சி எல்லைக்குள் 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அண்ணாமலையார் கோயில் அதை சுற்றியிருந்த மடங்கள் உள்ளடங்கிய வரைபடம் வழங்க கேட்கப்பட்டதற்கு மனுதாரர் கோரும் ஆவணம் இவ்வலுவலகத்தில் தற்போது கிடைக்கப் பெறவில்லை என்று பதில் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் வருவாய் துறையை அணுகி தகவல் பெற்றுகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சொத்துக்கள் தனியாருக்கு வாடகை மற்றும் குத்தகை விடப்பட்டது குறித்த விவரப்பட்டியல் கேட்கப்பட்டதற்கு மனுதாரர் பொதுவான தகவலாக கோரியுள்ளதால், அதனை குறிப்பிட்டு வழங்க இயலவில்லை என பதில் அளிக்கப்பட்டுள்ளது.

தான் கேட்ட விவரங்களை கோயில் நிர்வாகம் சரிவர தராததது சந்தேகத்தை எழுப்பி உள்ளதாகவும், இது சம்மந்தமாக மேல்முறையீடு செய்யப் போவதாகவும் சமூக ஆர்வலர் ஏழுமலை கூறினார்.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!